கண்ணாடியுள்ளிருந்துகொண்டு
ஒன்றை ஒன்று பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
எண்ணிறந்த பிம்பங்கள்.
உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றிலும்
நான் நான் என்றே
துடிக்கும் பிம்பங்கள்.
கண்ணாடி மறைந்துவிடும்படி
தனை அறிந்த மனிதவெளியில்தான்
பிறக்கிறது
தானற்றதொரு பெருவெளி
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியம்!
Published on May 08, 2025 12:30