வெறுப்பும் கசப்புமிக்க மனிதர்களால்
பீநாறி என்றும்
அன்பும் அழகுணர்வுமிக்க மனிதர்களால்
நித்திய கல்யாணி என்றும்
நயன்தாரா என்றும்
பக்திகொண்ட மனிதர்களால்
பூஜைப் பொருளாகவும்
பார்க்கப்படுகிறது
மனிதர்களின் உணர்வுகளை அறிந்ததும்
எதற்குமே சடைக்காததும் மயங்காததுமான
பேராளுமைத் திடம்கொண்ட ஒரு மலர்.
Published on May 11, 2025 12:30