காலமும் இடமும்
பத்தரை மணி தூரம் என்கிறது
இரண்டரை மணி தூரம் என்கிறது
அய்ந்து மணி தூரம் என்கிறது
நான்கு மணி தூரம் என்கிறது
கைபேசியோ
மின்னற் பொழுதே(தூரம்) என்கிறது
அதனால்தானோ
கைபேசியுடன் பேசிக் கொண்டு செல்லும்
சில மனிதர்களிடம் இத்துணை மலர்ச்சி!
அருட்பெருஞ்சோதித் தனிப் பெருங்கருணையின்
செயல் முறைப் பாடமாய்
மானுட உள்ளமும் இணைந்து விட்டது!
பார்வையில் விரியும்
பெருங்களமெங்கும்
மலர்ந்துவிட்டன காண்
தானியங்கிச் சாலைகள்!
Published on May 06, 2025 12:30