மலை உச்சியிலே
ஒரு கிராமம் நிலவ முடியும்போது
வான் உச்சியிலே
ஒரு மாடம் நிலவ முடியும்போது
மலை உயர ஒரு கட்டடத்திலேயே
ஆயிரம் இல்லங்கள்
அமைதியாக வாழமுடியும்போது
நம் உதிரத்திலேயே ஒரு பறவை
கூடு கட்ட முடியும்போது
ஏன் முடியாது அன்பா
இப் பூவுலகிலேயே கடவுளின் ராஜ்ஜியம்?
Published on May 04, 2025 12:30