பெங்களூருவிலிருந்து த்ரிஷா
மும்பைக்குப் போகும்படியாயிற்று
இடைக்கிடைக்கு பெங்களூருவுக்கும்
வந்து போகிறார்
பெங்களூருவில் இருக்கையில்
குறிப்பாக எங்கள் அபார்ட்மெண்ட்
மக்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொள்கையில்
அவர் வாழ்ந்த அஸ்ஸாம் பீகார்
மக்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்
அப்போது
பெருநகர சிறுநகர வாழ்க்கை குறித்து
நாங்கள் சற்று அலசியுமிருக்கிறோம்
இப்போது மும்பை.
பெங்களூரு இந்திய மக்களெல்லாம்
கூடிய இடமென்றால்
மும்பை உலக மக்களெல்லாம் கூடிய இடம்
என்பதை உணர்த்துமாறு
நிறைய பேசிக்கொண்டே இருந்தார்
அந்த எல்லாப் பேச்சுக்களையும் தாண்டி
அவன் உள்ளத்தை நிறைத்ததும்
நினைவிருக்கும் ஒன்றே ஒன்றானதும்
அவர் சொன்ன ஒரே வாக்கியம்தான்:
“They are very kind”
Published on April 22, 2025 12:30