அற்புதமான அவனது எந்த அனுபவங்களும்
இடத்தாலும் காலத்தாலும்
நிகழ்ந்தவையாய் இல்லாதபோது
அதை எப்படி
பெங்களூரு நாட்கள் (தூத்துக்குடி நாட்கள்)
என்று சொல்வான், இப் பூமியிலுள்ள
மற்ற எல்லா இடங்களும் காலங்களும் வந்து
கோபித்துக் கொள்ளாதா?
கொஞ்சம் பொறுங்கள்
மேலே உள்ள தலைப்பையும்
அழித்துவிடுகிறேன்!
Published on April 20, 2025 12:30