கிறிஸ்துவச்சியான சோஃபியா
கவிஞரால்
“நீ கவிஞர்களின் புதல்வியல்லவா”
என்றே அடிக்கடி செல்லமாகக்
கொஞ்சப்படுபவள்!
திருநீறும் திலகமுமாய்
அவள் உலவுவதைப் பார்த்து
அதிர்ச்சியும் வியப்புமடைபவர்களைப் பார்த்து
“சும்மா ஒரு அலங்காரம்தான்!” என்பாள்.
கடல்மீது எழுந்து நிற்கும்
காலைக் கதிரவனாய் அல்லவா
ஒளிர்கிறது அவள் நுதல்!
Published on April 17, 2025 12:30