சு.வேணுகோபாலுக்கு கோவை கண்ணதாசன் விருது

[image error]

சு.வேணுகோபால் தமிழ் விக்கி

கோவை. கண்ணதாசன் விருது பெறும் எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கு வாழ்த்துக்கள்

[image error]

கண்ணதாசன் – தமிழ் விக்கி

கோவை கண்ணதாசன் கழகம் 2025 கண்ணதாசன் விருதுகள் அறிவிப்பு 

கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 17 ஆண்டுகளாக கவியரசர் பிறந்த நாளை ஒட்டி அவர் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றது. 

2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கலைப்பிரிவில் திரு காரைக்குடி நாராயணன் அவர்களுக்கும் படைப்பிலக்கியப் பிரிவில் எழுத்தாளர் திரு சு.வேணுகோபால் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

கவியரசர் படைப்புகளை பரப்பும் அரிய பணிக்காக இசைக்கவி ரமணன் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் கொண்டவை. 

கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு வி கிருஷ்ணகுமார் இந்த விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். 

ஜூன் மாதம் கோவையில் நடைபெற உள்ள கண்ணதாசன் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

இதுவரை    2009-ல்  நாஞ்சில்நாடன், டி.ஆர்.எம்.சாவித்திரியும் ,2010-ல்  திரு.வண்ணதாசன், சீர்காழி சிவசிதம்பரமும் ,2011-ல் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,  திரு.இராம முத்தையாவும், 2012-ல் திரு.கலாப்ரியா, திரு.பி.ஆர்.சங்கரனும், 2013-ல்  திரு.அசோகமித்திரன், திரு.முத்துலிங்கமும் ,2014-ல் திரு. ஜெயமோகன், திருமதி வாணி ஜெயராமும் ,2015-ல்  திரு.சிற்பி, திருமதி பி.சுசீலாவும் அதேபோல ,2016-ல்  திரு. பஞ்சு அருணாசலம், ஓவியர் அமுதோனும் ,2017-ல் திரு.பிரபஞ்சன்,  எல்.ஆர்.ஈஸ்வரியும் ,2018-ல் திரு.மாலன்,  திரு எஸ்.பி. பாலசுப்ரமணியமும்,2019-ல்  திரு.சாரு நிவேதிதா,  திரு.பி.ஜெயச்சந்திரனும் , 2021-ல்  திரு.சங்கர் கணேஷ், திரு.போகன் சங்கரும் ,2022-ல்  திரு.வி.சி.குகநாதன், திரு.வண்ணநிலவனும் ,2023-ல்  இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன், திரு எம் கோபாலகிருஷ்ணனும் 2024 ல்  திருமதி அ.வெண்ணிலா திரு பழனி பாரதி ஆகியோரும் கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருது பெற்றுள்ளனர்.

இந்த தகவலை கண்ணதாசன் கழகத்தின் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா தெரிவித்துள்ளார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2025 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.