பொதுவாசிப்புக்குரிய நூல்களை ரசனை உணர்வோடு எழுதியவர் எஸ்.வி. வி. அக்காலத்து வாழ்க்கையைப் பற்றியும், பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் பற்றியும் அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வியின் எழுத்துக்கள் திகழ்கின்றன. குறிப்பாக, அந்தக் காலத்து பிராமணக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து அதிகம் எழுதியிருக்கிறார். நகைச்சுவை இவரது படைப்பின் முக்கிய அம்சம் எனலாம். நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன், துமிலன், நாடோடி என பலருக்கும் முன்னோடி எஸ்.வி.வி. தான். வெகு ஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்ட எழுத்தாளர்களில் எஸ்.வி.வி.க்கு மிக முக்கிய இடமுண்டு.
எஸ்.வி.வி
எஸ்.வி.வி – தமிழ் விக்கி
Published on March 29, 2025 11:34