நீலி, இசை, ஔவை – இணைய கலந்துரையாடல்
நீலியின் முதல் கலந்துரையாடல் நிகழ்வு மார்ச் 30, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழவுள்ளது. இந்த நிகழ்வில் கவிஞர் இசை நீலி மின்னிதழில் எழுதிய ’களிநெல்லிக்கனி’ கட்டுரைத்தொடர் குறித்து உரையாட திட்டமிட்டுள்ளோம். இந்தத்தொடர் வெளிவந்து கொண்டிருக்கும் போதே தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பொதுவெளியில் தெரிவித்து உரையாடிய எழுத்தாளர் பாவண்ணன், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோருடன், நீலி ஆசிரியர் குழுவில் ஒருவரான விக்னேஷ் ஹரிஹரனும் உரையாற்றுகின்றனர். இது தொடராக எழுதப்பட்டு நிறைவடைந்து புத்தகமாகவும் வெளிவந்ததும் மகிழ்ச்சிக்குரியது.
அடுத்த உரையாடல் நிகழ்வு ஜூன் மாதம் சைதன்யாவின் உலகப்பெண் சிந்தனையாளர்கள் கட்டுரைத்தொடர் குறித்து உரையாட திட்டமிட்டுள்ளோம். அந்த கட்டுரைத்தொடரும் நிறைவடைந்து புத்தகமாக வெளிவர வேண்டும் என விரும்புகிறோம். சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பில் அதன் தாக்கத்தை உணர முடிந்தது.
ஒரு அறிவார்ந்த உரையாடலை சூழலில் முன்னெடுக்க சரியான சிந்தனைக்கான அடித்தளம் அவசியம். இந்த மூன்றரை ஆண்டுகளில் அப்படியான சில உரையாடல்களை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை நீலி உருவாக்கியுள்ளது என்ற எண்ணம் உள்ளது. தொடர்ந்து சில கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
*
கூடுகை சுட்டி:
https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09
Meeting ID: 818 2428 7154
நீலி குழு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


