அன்புள்ள ஆசானுக்கு,
நலமறிய ஆவல். மூன்றாம் நிலை தத்துவ வகுப்பின் குறிப்புகளை விரித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சென்ற ஜனவரி மாதம் ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார், கவிஞர் சாம்ராஜ் மற்றும் நண்பர்களுடன் செய்த தில்லை பயணத்தின் பயண கட்டுரை எழுதியிருக்கிறேன்.
இது வரை சென்ற பயணங்கள் ஸ்தூலமாக கண் முன் நிற்கும் சிற்பங்கள், கட்டிடக்கலை அவற்றின் வரலாறு ஆகியவற்றை அவதானிப்பதற்கு. இந்த பயணம் அதையும் கடந்த சூக்ஷுமமாக அமைந்த சிலவற்றை உணர்வதற்கான பயணமாக இருந்தது. அதிகமும் மௌனத்தில் தான் உரையாடிக்கொண்டோம். உருவம் அருவம் அருவுருவம் மூன்றும் ஒன்றாக அமைந்த தில்லை, நீண்டதொரு அக பயணத்தின் முதல் அடி.
இவையனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பேராசானுக்கும் ஆசிரியர் ஜெயகுமாருக்கும் நன்றியும் அன்பும்.
கட்டுரை சுட்டி – தில்லை அகப்பயணம்
Published on March 26, 2025 11:31