இன்னொரு கனவு – ஓர் ஆங்கிலப் பதிப்பகம்
Manasa Publications Website
மானசா பதிப்பகம், கடிதங்கள்
அன்பிற்குரிய ஜெயமோகன் சார்,
தங்கள் தளத்தில் 7/3/25 அன்று மானசா பதிப்பகம், கடிதங்கள் பகுதியில் ‘கிருபா, சைதன்யா, கீழே மானஸா. பதிப்பக பங்குதாரர்கள்‘ என்ற சுட்டியுடன் ஒரு ஒளிப்படம் அமைந்திருந்தது. அந்த சுட்டியை படத்துடன் வாசித்த பொழுது …. ஒரு கவிதைத் தருணம்.
சின்னஞ்சிறு
முளையும்
சிறு
கிளைகளுமாய்
உதிக்கும்
இச்சிறுசெடி
விருட்சமாய்
வளர்தோங்க
வாழ்த்துக்கள்
.
நன்றியுடன் ,
புவனேஸ்வரி
,
வேலூர்
.
அன்புள்ள ஜெ
மானஸா பதிப்பகம் பற்றிய கட்டுரையும் கடிதங்களும் பார்த்தேன். அந்த புகைப்படமும் அழகாக இருந்தது. குட்டி பங்குதாரருக்கு என் அன்பு முத்தங்கள்.
இளமையில் பெண்கள் செல்லும் வழக்கமான ஃபேஷன் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் அறிவார்ந்த ஒரு பெரிய கனவும் அதற்கான முயற்சியும் கொண்டுள்ள அவர்கள் வெற்றிபெறவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி
Published on March 12, 2025 11:31