மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கோ. புண்ணியவான் முக்கியமான எழுத்தாளர். நல்ல சிறுகதையாசிரியர். இவர் எழுதிய கையறு நாவலைப் படித்தேன்.

சயாம் மரண ரயில் பாதை பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்வினை விவரிக்கும் இந்த நாவல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. தண்டவாளம் அமைக்கும் வேலைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவதற்கு முந்தைய தோட்டத்து வாழ்க்கை. ஜப்பானியர்கள் செய்த அடக்குமுறைகள். ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் தமிழர்கள் சந்தித்த அவலங்களைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

காலத்தின் திரைக்குள் மறைந்து போன உண்மைகளை நாவலின் வழியே அறியும் போது நமக்குள் வேதனை எழுகிறது.
புனைவின் வழியே அந்தக் கால கட்டத்தை உணர்வுப்பூர்வமாக மறு உருவாக்கம் செய்வதில் புண்ணியவான் வெற்றி பெற்றிருக்கிறார். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதுவரவாக இந்த நாவலைச் சொல்வேன்.
புண்ணியவானுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
Published on March 10, 2023 18:47