ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி போன்ற மொழிகளின் இலக்கியத்தோடு ஒப்பிட்டால் தமிழ்தான் உச்சபட்ச நிலையில் இருக்கிறது. இதை சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும். (இந்தப் பட்டியலில் நான் ஆங்கிலத்தைச் சேர்க்கவில்லை. அந்த மொழியில் இன்று சீரிய இலக்கியம் படைக்கப்படுவதில்லை.) தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சர்வதேசத் தரத்தில் இருந்தும் அதை வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்ல தமிழில் ஒரு ஆள் இல்லை. பிராமணர்கள் இலக்கியத்தைத் துறந்து விட்டார்கள். அவர்கள் துறந்தது இலக்கியத்தை மட்டும் ...
Read more
Published on November 04, 2022 23:01