கல்வெட்டுகள், ஒரு தரவுத்தளம்

வணக்கம்,

Udhayam.in இணையதளத்தில் தற்போது 

கல்வெட்டு தரவுதளம் (Inscription Database)

http://udhayam.in/tnarch-db.php

(Tnarch menu அருகே உள்ளே down Arrow கிளிக் செய்யவும்)

தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தி உள்ளேன். (Inscription Database)

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஊர், வட்டம், மாவட்டம் போன்றவைகள் அதன் வட்டம், மாவட்டம் மாறி உள்ளதால் அதன் இடங்களை சமகாலத்தில் உள்ளது போல மாற்றி உள்ளேன். 

(உம். வடஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களை தற்சமயம் மாறி இருக்கும் மாவட்டங்களாக)

இந்த கல்வெட்டு தரவுதளத்தில் இதில் உள்ள தகவல்கள் கல்வெட்டுகளை தேடும் வசதியும், மாவட்டம், வட்டம், ஊர், மொழி, மன்னர்களை அகர வரிசைப்படுத்தி பார்க்கவும், Details என்ற பட்டன் கிளிக் செய்தால் அதில் கல்வெட்டுகளில் பொது தகவல்கள் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும், ARE Reference, Pre published detail மற்றும் அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களுக்கு நேரடியாக செல்லும் வசதியும் உள்ளன.

புதிய கல்வெட்டுகள் என அறியும் முன்னர் இந்த தளத்தில் கல்வெட்டு முன்னரே பதியப்பட்டதா எனவும் அறிய முடியும்.

(இந்திய, உலக அளவில் கல்வெட்டுகள், பத்திரிக்கைகளில் வரும் புதிய கல்வெட்டுகளை தொகுக்கும் பணியும் செய்து வருகிறேன்.)

http://udhayam.in/tnarch-chart.php

(Tnarch menu அருகே உள்ளே down Arrow கிளிக் செய்யவும்)

தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப்படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆண்டு, ஆட்சி, மொழிகளுக்கு விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது

Statistics, Chart போன்று எளிதில் அறிய உதவும்

கல்வெட்டு அகராதி & சொற்களஞ்சியம் 

http://udhayam.in/agaramuthali.php

கல்வெட்டுகளுக்கான அகராதி மற்றும் சொற்களஞ்சியம் தொகுத்துள்ளேன்.

இதில் கல்வெட்டுகளுக்கான அகராதி மற்றும் எந்த கல்வெட்டுகளில் உள்ளன அதன் புத்தகம் மற்றும்  அதன் பக்கங்களுக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் அந்த பக்கத்திற்க்கே சென்று அதன் தரவுகளை பார்க்கலாம். 

மேலும் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ள ஊர்கள், பாடல்கள், இலக்கியம் அனைத்தும் அடங்கி இருக்கும்.

கல்வெட்டு காலவரிசை (Inscription Timeline)

http://udhayam.in/timeline.php

கல்வெட்டுகளில் உள்ள காலங்களை காலவரிசையாக (Timeline) வரிசைப்படுத்தி உள்ளேன். இதில் குறிப்பிட்ட ஆண்டில் அந்த ஆட்சி, மன்னர், இடம், மொழி மற்றும் புத்தகங்கள் அதன் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன.

கணினி வழியாக இணையதளத்தை பார்க்கும் போது இடப்பக்கம் கல்வெட்டுகளின் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளன அதை கிளிக் செய்தால் அதன் சரியான ஆண்டில் நடந்த நிகழ்வு / கல்வெட்டுகளை காணலாம்.

(கண்டு பிடிக்க முடியாத ஆண்டுகள் பொது எண்களாக கொடுத்துள்ளேன்)

1. தமிழகத்தின் காலவரிசை நிகழ்வுகளை தொகுக்கும் முயற்சியில் இது ஒரு முன்னோட்டம்

2. இதில் மன்னர்,  பிறப்பு, இறப்பு, கட்டிடக்கலை, படைப்புகள் என தகவல்கள் விரைவில் இடம்பெறும்.

3. தற்சமயம் ஆண்டுகளை மட்டும் வைத்து பிரித்துள்ளேன், இதே கால வரிசையில் இடம், ஆட்சி, மன்னர், மொழிகளை தனிதனியாக பார்க்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது.

4. இன்னும் இதில் மேம்பட்ட வசதிகளுடன் அடுத்த வெளியீட்டில் வெளிவரும்.

Contact : 9940232560

உதய்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.