ஐயா,நான் தங்கள் ஜெயமோகன் வலைதளத்தை Subscribe பண்ண விரும்புகிறேன்.
தங்கள் தொடர்பு லிங்கை அனுப்பவும்.நன்றி.தா.சிதம்பரம்.அன்புள்ள சிதம்பரம்
https://feedburner.google.com/fb/a/ma... இரு இணைப்புகள் உள்ளன. அவற்றின் வழியாக சப்ஸ்கிரைப் செய்யலாம். ஆனால் கட்டணம் ஏதும் இல்லை. பெரும்பாலானவர்கள் இப்போது தங்கள் கணிப்பொறியில் நிரந்தர இணைப்பு வைத்து வாசிக்கிறார்கள்.ஜெஅன்புள்ள ஜெஉங்கள் இணையதளத்தை பல ஆண்டுகளாக வாசிக்கிறேன். அதற்கு நான் பணம் செலுத்தவேண்டுமென்று எண்ணுகிறேன். எப்படிச் செலுத்துவது?ஆர்.கே.எம்.அன்புள்ள ஆர்.கே.எம்நாங்கள் இணையதளத்தை இலவசமாகவே நடத்துகிறோம். ஆகவே இணையதளத்துக்கு நன்கொடை பெறுவதில்லை. விஷ்ணுபுரம் விருதுவிழா போன்றவற்றை ஒட்டி, அனேகமாக ஆண்டுக்கு ஒருமுறை நிதி பெறுகிறோம். அப்போது அறிவிப்போம். அவ்வகையில் நிதியளிக்கலாம்ஜெ
Published on May 04, 2022 11:31