நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் ...
Read more
Published on October 30, 2021 06:54