இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன்.




இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும்.
எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது.

ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்தியக் கலைகள் குறித்த ஆய்வு நூல்களையும் மார்க் பவுண்டேஷன் வெளியிட்டு வருகிறது


https://marg-art.org/
Published on March 02, 2021 23:14