கனம்

ஒரு கல் கிடக்கிறது
காட்சிக்கு எளியதுகைப்பிடிக்குள் அடங்குவதுகடினம் தோன்றாதது
கையில் எடுக்கிறேன்பார்வை அளந்ததுபோலவேகனம் அவ்வளவு இல்லாதது
காட்சி அலமாரியில் வைத்தால்அழகுக்கு அர்த்தம் கூட்டும் மேஜைப்பளுவாக வைத்தால்தாள் பதற்றம் தணிக்கும்
கல்லை எடுத்ததற்குக் காரணங்கள் கிடைத்ததும்வீட்டுக்குக் கொண்டுபோகத் தீர்மானிக்கிறேன்
வலக்கையால் நினைவையும் இடக்கையால் கனவையும்இறுகப் பிடித்திருக்கிறேன்கையறு நிலை
பிறகு இருகையும் தளர்த்தி இருகையால் எடுத்துசும்மாதானே இருக்கிறது என்றுதலைமேல் சுமந்துபிடிவிட்டவற்றை மீண்டும் பற்றிநடக்கத் தொடங்குகிறேன்
பதில் கிடைக்காமல் விடப்பட்ட கேள்விபோல்நீளும் நெடுவழியில் காண்கிறேன்என்னைப் போலவே கல்சுமந்து நகரும் கூட்டம்ஒவ்வொரு தலைக்கல்லுக்கும் ஒவ்வொரு பருமன்
ஒருதலைமேல் சல்லிஒருதலைமேல் துண்டுஒருதலைமேல் பாறைஒருதலைமேல் குன்று
எல்லா வலக்கையிலும் நினைவுஎல்லா இடக்கையிலும் கனவு
என் தலைமறந்து ஏளனமாய் யோசிக்கிறேன்‘கல் சுமக்கும் சிரத்தினர்நாசி அரித்தால் என்ன செய்வர்?’
அக்கணமே ஞாபகம் வருகிறது
என் தலைக்கல் இட்ட அடி ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு அடியாக வளர்ந்து பருப்பதும்வீட்டை அடையும் முன்பே மலையாக மாறிவிடும் என்பதும்.
ஓவியம்: ஜியோவன்னி பாட்டிஸ்டா லங்கேட்டி ( 1635 - 1676 )
Published on July 24, 2020 09:53
No comments have been added yet.
Sukumaran's Blog
Sukumaran isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
