தலைவர் வரப்போறார், பாபா சின்னம் அல்லது ஆட்டோ சின்னம் கூட தேர்ந்தெடுத்து விட்டார். கட்சிக்கு பெயர் கூட நிச்சயித்தாகி விட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து வந்து சில தினங்களில் அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் காத்து கிடந்தனர். இப்படி எல்லோரும் டிசம்பர் 31 அன்று தலைவர் அறிவிக்க போகும் கட்சியின் பெயர் பற்றியும் சின்னங்கள் குறித்தும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் போது தலைமையிடம் இருந்தே அறிவிப்பு வந்தது. சின்னம் பற்றிய அறிவிப்பல்ல, தங்கள் கனவுகளை எதிர்ப்பார்ப்புகளை சின்னாபின்னம் ஆக்கிய அறிவிப்ப...
Published on December 28, 2020 23:34