அசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில். வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார்.
என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன்.
கடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் பேட்டி எடுத்தவர் குழம்பியிருப்பார். நான் வெடித்துச் சிரித்துவிட்டேன்.
அசோகமித்திரன் பேட்டி
Published on August 12, 2011 11:30