சாரு நிவேதிதா's Blog, page 151

September 1, 2022

டார்ச்சர் கோவிந்தனுக்குப் பிடிக்காத சட்டை

நான் சட்டை நன்றாக இல்லை என்று சொல்லலப்பா, உங்களுக்குப் பொருந்தலை என்றுதான் சொன்னேன். இல்லியே. வினித் பிரமாதமா இருக்குன்னு சொன்னானே? சின்னப் பசங்கள்ளாம் அப்டித்தான் சொல்லுவானுங்க. என்ன விஷயம்னா அவனுங்க சொல்றது சட்டையை. உங்களை அல்ல. உடனே வினித்துக்கு போன் போட்டுக் கேட்டேன். விஷயத்தையும் சொன்னேன். இனிமேல் டார்ச்சர் கோவிந்தன் பற்றிப் பேசினால் நான் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து விடுவேன். இதுதான் வினித்தின் பதில். மேலே படம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 08:35

சாருவை ஏன் வெறுக்கிறார்கள்? அபிலாஷ் சந்திரன்

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறும் சாரு நிவேதிதாவை வாழ்த்துமுன் சில கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தளவில் பதில் சொல்ல முயல்கிறேன்: சாரு எவ்வகையான எழுத்தாளர்? சாரு ஒரு எதிர்-புனைவாளர். எதிர்புனைவு என்றால் என்ன? சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை அழிக்கும் நோக்கில் உருவானதே எதிர்புனைவு. அலெ ராப் கிரில்லெ என ஒரு எழுத்தாளர் இருக்கிறார் (The Beach, Jealousy ஆகியவற்றை எழுதியவர்). அவர் இவ்வகை புனைவுகளை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 06:27

அடியேனுக்கு விஷ்ணுபுரம் விருது…

2022ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது அடியேனுக்கு வழங்கப்படுகிறது.  இது குறித்த அறிவிப்பு கீழே உள்ளது.  இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்த ஜெயமோகனுக்கும் மற்ற விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.  வழக்கம் போல் இது குறித்த வசைகளும் ஆரம்பித்து விட்டன.  வசைகளை ஜெயமோகனும் நானும் பகிர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  தேகம் நாவலில் நான் எழுதியதையெல்லாம் மேற்கோள் காண்பித்துத் திட்டுகிறார்கள்.  அந்த அளவுக்கு உன்னிப்பாகப் படித்திருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  இனிமேல் இது போன்ற வசைகளுக்கும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 04:42

சாபத்தை வரமாக மாற்றுவதற்கு ஓர் எளிய வழி

சார்,  உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு எந்தவித இசை அறிவும் கிடையாது. பின்வரும் இரு பாடல்களும் எனக்கு ஒரே மாதிரி தெரிகின்றன. நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டதற்காக மன்னியுங்கள். சாபம் ஏதும் தரவேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி! லெனி டியர் லெனி, நான் ஏன் சாபம் தரப் போகிறேன்?  ஒன்று தெரியுமா உங்களுக்கு?  நான் யாருக்குமே இதுவரை சாபமே தந்ததில்லை.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 03:34

ஒரு சுவாரசியமான வாழ்த்துச் செய்தி

சாருவுக்கு வாழ்த்துகள் நவீன தமிழ் இலக்கியத்தை ஒரு சிறு கூட்டத்திலிருந்து பெரும் கூட்டத்துக்குக் கடத்தியதில் என் தலைமுறையில் நால்வருக்குப் பெரும் பங்கு உண்டு. ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன். இப்படிச் சொல்லும்போது ஏனையோர் பங்களிப்பை நான் மறுதலிக்கவில்லை. அதேபோல, தமிழ் இலக்கியத்தில் என்னுடைய ஆதர்ஷங்களும் இவர்கள் இல்லை. ஆனால், இலக்கியம் தெரியாதவர்களிடமும் இலக்கியம் குறித்த மதிப்பைக் கூட்டியவர்கள் இவர்கள். அதனாலேயே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணியாற்றுகையில் ஒவ்வொரு புத்தகக்காட்சி சிறப்பிதழ்களின் நிறைவு நாளிலும் இவர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 03:14

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம் (இன்னும் இரண்டு தினங்கள்)

நான்தான் ஔரங்ஸேப் இன்னும் இரண்டு தினங்களில் கைக்கு வந்து விடும்.  முன்வெளியீட்டுத் திட்டத்தில் சலுகை விலையில் நாவலை வாங்க விரும்புபவர்கள் இந்த இரண்டு தின்ங்களில் பணம் அனுப்பினால் அதனால் இரண்டு அனுகூலங்கள்.  சலுகை விலையில் கிடைக்கும்.  இரண்டு, நாவலில் என் கையெழுத்தும் இருக்கும்.  அதற்கான விவரங்கள்:   https://tinyurl.com/naanthaanaurangazeb
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2022 02:20

August 30, 2022

விநாயகர் சதுர்த்தி

இந்து கடவுள்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் விநாயகர். அப்பனைப் போல் சுடுகாட்டில் இல்லாமல் குளத்தாங்கரையில் போய் அமர்ந்தவர் அல்லவா, யாருக்குப் பிடிக்காமல் இருக்கும்? ஸ்விக்கி மூலம் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் இந்த டன்ஸோ இருக்கிறதே, அது ஒரு புரட்சி. நேற்று கூட தற்சமயம் கோயம்பத்தூரில் இருக்கும் ஸ்ரீராம் டன்ஸோ மூலம் ஜார்ஜ் டவுனிலிருந்து மீன் தலைக் குழம்பு அனுப்பினார். அது ஒரு பெரிய கதை. டைனோசார் தலை சைஸ் இருந்தது. இன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2022 19:46

விமர்சனத்தில் ஒரு இடம்!

நேற்று பிறந்த சிறுவர்களுக்கு நான் யார் என்று தெரியாது இல்லையா, அதனால் அவர்களுக்கு ஒரு விமர்சகனாகவும் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இதை அவர்கள் என் பயோடேட்டாவாகக் கருதாமல் ஒரு பாடத்திட்டம் என்று எடுத்துக் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது.  சர்வதேச இலக்கியம், இசை, நாடகம் குறித்து நான் எழுதியிருக்கும் ஏராளமான அ-புனைவு நூல்களை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன.  சமகாலத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2022 01:49

August 29, 2022

அலுப்பூட்டும் இலக்கிய சூழல்

உலகில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பலவற்றில் உங்கள் பெயர் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இனி அதை அப்படியே வைத்திருக்கவே அவர்கள் விரும்புவார்கள்.தனி ஒரு எழுத்தாளன், தான் மட்டுமே தன்னை இலக்கியத்தில் ஒரு இடத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு இடைவிடாத நிருபணங்களை தந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. காழ்ப்பு கொண்டவர்கள் அவனை எழுத்து சார்ந்து மதிப்பிடாமல், இப்படி இடுப்புக்கு கீழேயே தாக்கி கொண்டிருக்க இதுவே காரணம்.அதுவும் மிகக்குறுகிய ஜானரில் மட்டும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் வேறுவகை எழுத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2022 21:52

இலக்கியத்தில் ஓர் இடம்!

“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா? ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2022 06:45

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.