குமரித்துறைவி Quotes

Rate this book
Clear rating
குமரித்துறைவி குமரித்துறைவி by Jeyamohan
160 ratings, 4.54 average rating, 15 reviews
குமரித்துறைவி Quotes Showing 1-8 of 8
“தந்தையை நிறுத்து கணக்கு போட்டுப் பாக்க பிள்ளைகளுக்கு உரிமை இல்லை. மனுஷ மனசுக்க பிரேமைகளை வெறுத்துப் பேச யாருக்கும் உத்தரவு இல்லை. குருவுக்கும் தந்தைக்கும் தெய்வத்துக்கும்கூட.”
ஜெயமோகன் [Jeyamohan], குமரித்துறைவி
“திருடன் மூத்தால் திருவுடை அரசன்”
Jeyamohan, குமரித்துறைவி
“மனிதனால் இயல்வதெல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி தன்செயல் முழுமை அடையவேண்டுமென நினைக்கிறான். பிழை நிகழும். அப்பிழைக்குப் பொறுப்பேற்கவும் வரலாம். ஆனால் பிழை தன்பிழையல்ல என்று எண்ணுமளவுக்கு அகம் கனிந்திருப்பதே விடுதலை.”
Jeyamohan, குமரித்துறைவி
“எல்லாம் ஒழுங்கா நடந்திட்டிருக்காடே?” என்றேன்.

“ஒருகுறையில்லை. இதுவரை சர்வமங்களம்” என்று அவன் சொன்னான்.

“ஆமா, இதுவரை” என்று நான் சொன்னேன்.

“அது என்ன பேச்சு உடையதே? இதுவரை நடத்தித் தந்த அம்மை இனி நம்மை கைவிடுவாளா?”

“அதில்லடே” என்றேன். “நான் மூணு யுத்தம் நடத்தியிருக்கேன். பத்திருபது உத்சவங்கள் நடத்தியிருக்கேன். நாலு கோட்டை கட்டியிருக்கேன். இப்டி மானுஷ யத்னங்கள் நடக்கிறப்ப நமக்கு ஒரு கர்வபங்கம் கண்டிப்பா உண்டு. பாத்துப்பாத்துச் செய்வோம். ஆனா கண்ணுக்கு முன்னாடி எதையோ காணாம விட்டிருப்போம். நான் நான்னு நினைச்சு நிமிருற நேரத்திலே சரியா அது வந்து பூதமா முன்னாலே நின்னுட்டிருக்கும். நம்மளைப் பாத்து இந்த பிரபஞ்சம் சிரிக்கிறதுதான் அது. நீ என்னடே மயிரு, சின்னப்பூச்சி, நான் ஏழுகடலும் ஒற்றைத் துளியா ஆகிற பெருங்கடலாக்கும்னு சொல்லுது அது… சரி பாப்போம்.”

“ஒண்ணும் நடக்காது” என்று அவன் சொன்னான்.

”நடக்கும். என்னமோ நடக்கும். கண்டிப்பா நடக்கும். நடக்காம இருக்கவே இருக்காது. அதைத்தான் பாத்திட்டிருக்கேன். நான் தெய்வத்தை தேடுறது அங்கேயாக்கும். ஒரு தப்பு, அதிலேயாக்கும் தெய்வம் முகம் காட்டுறது” என்றேன்.”
Jeyamohan, குமரித்துறைவி
“அரசரிடம் எதையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும் என்பது அவைநெறி. அவர் தனக்கு நினைவிருக்கும் என்றால் சொல்லவேண்டாம் என்று சொல்வார்.”
Jeyamohan, குமரித்துறைவி
“அவர் அதிகமான நேரம் அமர்ந்திருப்பது தெய்வங்களுக்கு முன்னால்தான்.”
Jeyamohan, குமரித்துறைவி
“பொதுவாகவே மலைகள், கோட்டைகள், ஏரிகள் போன்ற அசைவிலாப் பேரிருப்புகள் நம்மருகே இருக்கையில் நாம் கொள்ளும் விரைவு ஒருவகை அறிவின்மை என்று தோன்றிவிடுகிறது”
Jeyamohan, குமரித்துறைவி
“நாழி நாழிக்குள் நுழைவதில்லை என்பது அரசநீதி.”
Jeyamohan, குமரித்துறைவி