வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai] Quotes
வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
by
Yuvan Chandrasekar11 ratings, 4.27 average rating, 1 review
வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai] Quotes
Showing 1-14 of 14
“இடைவெளியே இல்லாத எறும்பு வரிசைபோலத் தற்செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்தால், வேறொரு விதமான தர்க்கம் மனத்தில் தலைதூக்கி விடாதா? அதை நம்பவும் ஆரம்பிக்க மாட்டோமா?”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]

“கொஞ்சம் கெடுபிடியான விவகாரங்களை எழுத முனையும்போது, கொச்சைவழக்கு அவ்வளவாக உதவிசெய்வதில்லை”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“தாமாகவே விமர்சகர் பாத்திரத்தை ஏற்று வகிக்கும் நண்பர்களும் அபிப்பிராயப்படும் உத்தி”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“உன்னிடம் எனக்குப் பிடித்த விஷயமே இதுதான். நீதான் அவர்களை ஓயாமல் தொந்தரவு செய்வாயே தவிர, மற்றவர்களை அனுமதிக்க மாட்டாய்.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“வேதாளம் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன. அந்தக் கதெகளெல்லாம் முழுசா ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பலே?”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“தொழுத கையுள் படையொடுங்கும்’ என்று பெரியவர் சும்மாவா சொன்னார் .”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“விக்கிரமாதித்தனின் கதைகள் அவனே சொல்லியவை அல்ல; அவன் சிம்மாசனத்தில் நெடுங்காலம் நின்றிருந்த பதுமைகள் கூறியவையே.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“விக்கிரமாதித்தனின் ஆழ்மனம் உருவாக்கிய பிம்பமே வேதாளம்.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“என் வாழ்வில் நடந்து, அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்று என் மனம் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன்னியல்பாக மறந்து போன சம்பவமொன்று, மீண்டும் எதிரில் எழுந்து, விலாவரியாகத் தன்னை விவரித்துக்கொண்டது.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“அதுபோன்ற மாயங்களெல்லாம் ஒரேயொருதடவை நிகழ்ந்தாலே பரபரப்பாக்கிவிடக்கூடியவை, நாட்கணக்காக, வாரக்கணக்காக, தொடர்ந்து நடந்தால்?”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“எந்த ஒரு நினைவும் தனித்தது அல்ல; ஒன்று, இறந்த காலத்தின் புற்றிலிருந்து வெளியேறும் வரிசையில் ஒரு சிற்றெறும்பு; அல்லது என்றோ வரவிருப்பதன் தயக்கமான, விழைவின் அழுத்தம் சுமந்த, யூகம். ஆக, முடிவற்ற சங்கிலியின் பிணைப்புக்குள் சிக்கியிருப்பதுதான் மனித மனவோட்டம்.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“ஐம்பதுகளில் ‘எளிமை’ என்ற சொல்லுக்கு ‘வறுமை’ என்று பொருள் - ‘எளிமை அகல வரம் தா’ என்று ஒரு தமிழ்சினிமாப் பாட்டு இறைஞ்சுமே. தற்காலத்தில், எளிமை என்றால் என்ன என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“நடுக்கடலின் ஆழம் மட்டுமே கடலா என்ன, கரை விளிம்பில் வந்து மீந்து உலரும் துமியும் கடல்தான்’.”
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
― வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“பெரிய வார்த்தைகளை பெரிய விஷயங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமொன்றும் கிடையாது”