Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Yuvan Chandrasekar.

Yuvan Chandrasekar Yuvan Chandrasekar > Quotes

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 190
“ஒரு விநோதம் பார்த்தாயா, நாம் வருத்தமாக இருக்கும்போது, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியும். அதுவே, நாம் சந்தோஷமாக இருக்கும்போது, மற்றவர்களின் துக்கம் கண்ணுக்கே தெரியாது...”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“தானாய்ப் பழுக்கும் பழத்துக்கும் புகை போட்டுப் பழுத்த பழத்துக்கும் ருசிபேதம் எவ்வளவு இருக்கிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“இதுவரைக்கும் சொன்ன அப்பியாசங்களெல்லாம் யாரும் செய்துட முடியம். இதுக்கப்பறம் உள்ள அகாத சாதகங்களெ அதுக்குன்னே பிறவியெடுத்த ஜென்மங்களாலெதான் செய்ய முடியும்...”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“தனியாகத் திரிந்தாலொழிய நாம் விரும்பும் உயரத்தை எட்ட முடியாது என்றும், எட்டாத உயரங்களைக் கனவு கண்டபடியே இருப்பவர்களுக்குத்தான் அதில் பாதியாவது சித்திக்கும்”
Yuvan Chandrasekar, மணற்கேணி [Manarkeni]
“நான் இயல்பாக எனக்குக் காணக் கிடைத்த சொரூபத்தைக் குரலில் ஏற்றிக்கொடுத்தேன்.”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“பஞ்சபூதங்களில் நெருப்பையும் நீரையும் உணவுத் தயாரிப்பில் நேரடியாகச் செயல்படுத்துவதன் மூலம் விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்குமான இடைவெளி அதிகரித்து விட்டதென்றும், இந்த ஒரே காரணத்தால் பிற ஜீவராசிகளை விடத் தான் உயர்ந்தது என்பதற்கான பிரமை மனித குலத்தின் மேல் தூசு போலப் படர்ந்துவிட்டது”
Yuvan Chandrasekar, பகடையாட்டம் [Pagadaiyattam]
“ஆனால், குரு, என்று வந்துவிட்டாலே அரக்கத்தனமும் வந்து சேரத்தான் செய்கிறது. பரசுராமன் என்ன செய்தான்? தொடையில் வண்டு துளைத்ததைப் பொறுத்துக்கொண்டு மடி கொடுத்த வீரனை சபித்துத் தள்ளவில்லையா? க்ஷத்திரிய சுபாவம் கொண்ட தனுர்வேதப் பார்ப்பனன் கீழ்ஜாதிக்கார சிஷ்யனின் கட்டைவிரலைக் காவு வாங்கவில்லையா?...”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“இடைவெளியே இல்லாத எறும்பு வரிசைபோலத் தற்செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்தால், வேறொரு விதமான தர்க்கம் மனத்தில் தலைதூக்கி விடாதா? அதை நம்பவும் ஆரம்பிக்க மாட்டோமா?”
Yuvan Chandrasekar, வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“நல்லா இரு’ன்னு வாழ்த்துவானா, ‘நாசமாப் போகாமெ இரு’ன்னு வாழ்த்துறதா? சேந்து இருக்கட்டும்ன்னு வாழ்த்துறதுதானே? பிரியாம இருக்கணுமாம். கரிநாக்குப் பய. ஞாபகம் வருதாடா, சிலப்பதிகாரம்?...”
யுவன் சந்திரசேகர் / Yuvan Chandrasekar, நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
“ஜனங்களைப் பயமுறுத்தித்தான் நீதியை நிலைநாட்ட முடியுமென்றால் அதில் ஜனங்களால் விரும்பி ஏற்க முடியாத ஏதோ ஒன்று இருப்பதாகத்தானே அர்த்தம்? அப்புறம் என்ன நீதி, பெரிய நீதி. உடுப்புக்குத் தனியாகக் குணாம்சம் ஏதும் இருக்கிறதோ? உடுத்துகிறவனைத் தொற்றுகிறதோ?”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்ய ஆசைப்படுகிறவனுக்கு முழங்கால் உருப்படியாக மிஞ்சாது.”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“ஜனனம் போலவே இயல்பானது கொல்லும் தொழில். மிருக ராசிகள் கொலைத் தொழில் பழகுவது தமது குருதியின் ஓட்டத்திலிருந்தே. உணவுக்காகவும், தற்காத்துக் கொள்ளவும், பூமிப் பரப்பில் கொலைத் தொழில் நிகழாத பொழுதேயில்லை. ஆயினும், வன்மம் கருதிக் கொலைத் தொழில் பழகுவது, மனித ராசி மாத்திரமே.”
Yuvan Chandrasekar, பகடையாட்டம் [Pagadaiyattam]
“வியாதி ஒடம்புக்குள்ளெ இருந்துச்சுன்னா டாக்டருக போதும், ஒடம்புலெ இல்லாத வியாதி வந்து தொத்தீருச்சுன்னா என்னா செய்யுறது சொல்லுங்க’.”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“எல்லாம் இயற்கையின் சதி. வேறென்ன? இயற்கை எனக்கும் ஒரு ஜதை முலையைக் கொடுத்திருக்கலாம். எவ்வளவோ அனுகூலமாக இருந்திருக்கும்”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“அட நீ என்ன, பாமர ஜனங்கள் மாதிரிப் பேசுகிறாய். அவர்கள்தான், நடந்தது நடக்காதிருந்திருக்கலாமே என்று புழுங்குவார்கள். அல்லது வேறுமாதிரி நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று குமைவார்கள். எனக்குப் போய் இப்படி நடந்துவிட்டதே என்பார்கள். ‘இப்படித்தான் இன்னொருவருக்கும் ஒருமுறை...’ என்று ஆரம்பித்து, ‘ஆனால், வயிற்றெரிச்சல், அவருக்கெல்லாம் இந்தவிதமாய் முடியவில்லை’ என்று துக்கப் பெருமூச்சு விடுவார்கள். அல்லது ஒன்றுமே சொல்லாமல் வெட்டவெளியை வெறித்துப் பார்த்தே தமக்குள்ளிருந்து மூன்று தலைமுறைத் துக்கத்தைத் தோண்டிக் கிளறியெடுப்பார்கள். துக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு ஜனங்களுக்குச் சொல்லியா தர வேண்டும்...”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“தனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல, பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“யாரும் தெரிந்துகொள்ளக் கூடிய, ஆனால் யாருமே தெரிந்து கொள்ள ஆசைப்படாத,”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“இந்தப் பிரதேசத்துக்குக் ‘காமரூபம்’ என்று பெயர் வந்திருக்கிறதே, பூமண்டலம் முழுவதுமே காம ரூபம் தானே. ‘காமம்’ என்ற ஆதார வார்த்தை ‘சரீரச் சேர்க்கைக்கு ஆசைப்படுவது’ என்ற குறுகிய அர்த்தத்தைப் பாமர மனத்தில் எப்படி வேர் இறக்கியது? காம க்ரோத லோப மத மாச்சரியம் என்று பட்டியலிடுகிறார்களே, காமத்தை ஒழித்துவிட்டால் பின்னோடே எல்லாம் தொடர்ந்து ஆவியாகிவிடும் என்றறிந்து முதற்சொல்லாக அதை அமைத்தவன் எவ்வளவு பெரிய மேதை”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“நான் வந்த நோக்கமென்ன? திரும்பிப் போகும்போது கொண்டு போகிறவற்றின் தன்மையென்ன? விசித்திரம்தான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் சேர்ந்திருக்கும் இடங்களைப் பார்த்து விட்டால் பிசாசுகளுக்குக் கொண்டாட்டம்தான். கட்டி அணைத்துக்கொள்ள ஓடிவரும். நாம்தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும், புதிய பழக்கங்கள் எதுவும் தொற்றி விடாதபடி.”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“வெறும் மான அவமானத்துக்கே இப்பிடித் தலைகுனிஞ்சு உக்காந்திருக்கியே? வியாதியும் தொத்தினால் என்ன செய்வே?”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“எழுத்து ரூபத்தில் இருந்ததை வேண்டுமானால் பிரதி எடுத்துக் கொள்ளலாம். குரு பாடிக் காட்டியதை எதில் பதிந்து கொள்வது?...”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“எதிர் நிலை இல்லாத போனால், தன்னிலையையே அறிய முடியாதவர்கள். முரண்களின் அடிப்படையில் தங்கள் அறிதல்முறையை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள். இரவும் பகலும் ஒன்றுக்கொன்று எதிர்நிலைகள் என்றுதான் அவர்களால் அறியமுடியும். ஒரே தொடர்நிலையின் இரு அங்கங்கள் அவை என்று தெரியாது அவர்களுக்கு...”
Yuvan Chandrasekar, பகடையாட்டம் [Pagadaiyattam]
“வான்திரையில் வர்ணங்கள் குதித்துக் கும்மாளமிடுவதைப் பாருங்கள். அத்தனை வர்ணங்களும் வெறும் தோற்ற மயக்கங்கள். உண்மையில் வானத்துக்கென்று சுயமான நிறம் உண்டா என்ன?”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“பசிக்காதபோது விலங்கினங்கள் எதுவுமே புசிப்பதில்லை; மனித இனம் மட்டுமே எந்நேரத்திலும் உண்ணத் தயாராயிருக்கிறது”
Yuvan Chandrasekar, பகடையாட்டம் [Pagadaiyattam]
“நடுக்கடலின் ஆழம் மட்டுமே கடலா என்ன, கரை விளிம்பில் வந்து மீந்து உலரும் துமியும் கடல்தான்’.”
Yuvan Chandrasekar, வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]
“தவறான காலத்தில் வந்து பிறந்துவிட்டோம் என்று சதா தோன்றிக்கொண்டே இருக்கிறது”
Yuvan Chandrasekar, வெளியேற்றம் [Veliyetram]
“அந்த நாட்களில் அந்தக் கிழவனும் இவரும் குசுவும் மணமும் போல ஒன்றாய்த் திரிந்தவர்கள்...”
Yuvan Chandrasekar, கானல் நதி [Kaanal Nadhi]
“நீ வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறே. எல்லாரையும் நம்பிடுறே. ஒரு ஆளைப் பார்த்தோம்னா, அவனுடைய உடம்பெ ஒரு கண்ணால பார்க்கணும். இன்னொரு கண் அவனெ சூசகமா அளக்கணும். அதற்கப்புறம்தான் பேச்சே. இப்பிடிக் குழந்தையா இருக்கயே. சும்ம்ம்மா புஸ்தகமாப் படிச்சுத் தள்ளினாப் போதுமா?”
Yuvan Chandrasekar, மணற்கேணி [Manarkeni]
“விக்கிரமாதித்தனின் ஆழ்மனம் உருவாக்கிய பிம்பமே வேதாளம்.”
Yuvan Chandrasekar, வேதாளம் சொன்ன கதை [Vethalam sonna kathai]

« previous 1 3 4 5 6 7
All Quotes | Add A Quote