கானல் நதி [Kaanal Nadhi] Quotes
கானல் நதி [Kaanal Nadhi]
by
Yuvan Chandrasekar36 ratings, 4.11 average rating, 3 reviews
கானல் நதி [Kaanal Nadhi] Quotes
Showing 1-30 of 34
“பார்த்தறியாத பெண்ணின் அங்க அடையாளங்கள் இவ்வளவு திருத்தமான சித்திரமாய்ப் பதிந்திருப்பது ஆச்சரியமில்லையா...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“மிகவும் பரிவான ஆத்மா அது.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“அட நீ என்ன, பாமர ஜனங்கள் மாதிரிப் பேசுகிறாய். அவர்கள்தான், நடந்தது நடக்காதிருந்திருக்கலாமே என்று புழுங்குவார்கள். அல்லது வேறுமாதிரி நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று குமைவார்கள். எனக்குப் போய் இப்படி நடந்துவிட்டதே என்பார்கள். ‘இப்படித்தான் இன்னொருவருக்கும் ஒருமுறை...’ என்று ஆரம்பித்து, ‘ஆனால், வயிற்றெரிச்சல், அவருக்கெல்லாம் இந்தவிதமாய் முடியவில்லை’ என்று துக்கப் பெருமூச்சு விடுவார்கள். அல்லது ஒன்றுமே சொல்லாமல் வெட்டவெளியை வெறித்துப் பார்த்தே தமக்குள்ளிருந்து மூன்று தலைமுறைத் துக்கத்தைத் தோண்டிக் கிளறியெடுப்பார்கள். துக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு ஜனங்களுக்குச் சொல்லியா தர வேண்டும்...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“தன் முன்னாள் காதலி தன்னையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எந்த ஆண்பிள்ளைதான் விரும்ப மாட்டான்?”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஒரு விநோதம் பார்த்தாயா, நாம் வருத்தமாக இருக்கும்போது, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியும். அதுவே, நாம் சந்தோஷமாக இருக்கும்போது, மற்றவர்களின் துக்கம் கண்ணுக்கே தெரியாது...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“சாயங்காலத்தில் சாயங்கால ராகம்தான் பாட வேண்டும்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“மனசில் ஒருத்தனை நினைத்துக்கொண்டு இன்னொருத்தனுக்குக் கழுத்தை நீட்டும் பெண்பிள்ளை எனக்குச் சரிப்படாது. நம் குடும்பத்துக்கும் லாயக்குப்படாது.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் சேர்ந்திருக்கும் இடங்களைப் பார்த்து விட்டால் பிசாசுகளுக்குக் கொண்டாட்டம்தான். கட்டி அணைத்துக்கொள்ள ஓடிவரும். நாம்தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும், புதிய பழக்கங்கள் எதுவும் தொற்றி விடாதபடி.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“...மேதைகளோடுதான் பழகுகிறோம். ஆனால், வித்தையில் மட்டும்தான் அவர்கள் கெட்டிக்காரர்கள். மற்றபடி, மனிதர்கள் என்று பார்த்தால், புழுவைவிடக் கேவலமானவர்கள்தான் அதிகம்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஆனால், குரு, என்று வந்துவிட்டாலே அரக்கத்தனமும் வந்து சேரத்தான் செய்கிறது. பரசுராமன் என்ன செய்தான்? தொடையில் வண்டு துளைத்ததைப் பொறுத்துக்கொண்டு மடி கொடுத்த வீரனை சபித்துத் தள்ளவில்லையா? க்ஷத்திரிய சுபாவம் கொண்ட தனுர்வேதப் பார்ப்பனன் கீழ்ஜாதிக்கார சிஷ்யனின் கட்டைவிரலைக் காவு வாங்கவில்லையா?...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“அந்த நாட்களில் அந்தக் கிழவனும் இவரும் குசுவும் மணமும் போல ஒன்றாய்த் திரிந்தவர்கள்...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“எல்லாம் இயற்கையின் சதி. வேறென்ன? இயற்கை எனக்கும் ஒரு ஜதை முலையைக் கொடுத்திருக்கலாம். எவ்வளவோ அனுகூலமாக இருந்திருக்கும்”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“...நீ அதிர்ஷ்டக்காரன் தனா. உன்னைச் சேர்ந்தவர்களெல்லாம் எவ்வளவு பிரியமானவர்களாய் இருக்கிறார்கள். உன் மேலும் உன் முன்னேற்றத்தின் மேலும் எவ்வளவு ஆசையாய் இருக்கிறார்கள்...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“பாத்திரம் சதா கை தவறி விழுகிறது. யாரோ வருகிறார்கள் என்று சொன்னேனில்லையா...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஒரே இரவில் ஒரு வியாபார சாம்ராஜ்யம் உருவாகிவிடாது. கணிசமான நபர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளாமலும் அது உருவாகாது.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“சூடுவதற்காகப் பூப்பதில்லை எல்லா மலர்களும் நாவில் கரையவென்று கனிவதில்லை எல்லாக் கனிகளும் எந்த நதியின் நீரும் மொத்தமாய்ச் சென்று சமுத்திரம் சேர்வதில்லை பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஜலதரங்கத்தை வாசிப்பது எளிது. நல்ல ஆசிரியர் கிடைத்து விட்டால், யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டுவிடலாம். சூட்சுமம் வேறு இடத்தில் இருக்கிறது. கிண்ணங்களில் தண்ணீர் நிரப்புவதற்குத்தான் மேதைமை வேண்டும். ஒரு துளித் தண்ணீர் கூடினாலோ, குறைந்தாலோ ஸ்வரம் பிசகிவிடும்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“பூர்ய தனஸ்ரீயை வாலிபன் என்று சொல்லக் கூடாது. அது நளினமும், அலங்காரமும் கொண்ட பெண் பிறவி. அடிவாரத்தில் சலனமின்றிக் கிடக்கும் அறுவடை முடிந்த வயல்களில் நீரோட்டம் போலப் பாய்கிறாள். உயிரின் தாதுவை உட்செலுத்துகிறாள். அவள் தன்னிச்சையானவள். தனி மனங்களின் உணர்வுகளுக்குச் சம்பந்தமில்லாதவள். பிரபஞ்ச தாரை. இரவுக்கும் பகலுக்கும் உள்ள இடைவெளியை இல்லாமல் ஆக்குபவள்...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“லயத்தின் அதிபதியாகிய நந்திதேவர் ஒருமுறை சொன்னாராம். பிரபஞ்சத்தின் சுவாசமே தாளகதிக்கு உட்பட்டதுதான் என்று...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாகத் தாயிடம் மழலை பேசும். தாய்க்கு மட்டுமே புரியும் பாஷை அது.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“இந்தக் கோடியில் ஒரு நிறமும் அந்தக் கோடியில் ஒரு நிறமுமாகக் கிடக்கிறதே ஆகாயம், இதில் ஆகாயத்தின் இயல்பான நிறம் எது என்று எந்த பட்சிக்குத் தெரியும்? நாதத்தின் எல்லையற்ற வெளியில் பறந்து திரியும்போது, புதிது புதிதான வர்ணங்களும் ருசிகளும் கிடைக்கிறதா இல்லையா?”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“நான் இயல்பாக எனக்குக் காணக் கிடைத்த சொரூபத்தைக் குரலில் ஏற்றிக்கொடுத்தேன்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“ஹிந்துஸ்தானி சங்கீதத்திடமிருந்து முஸ்லிம்களைப் பிரித்துவிட்டால், முக்கால் பகுதி சங்கீதம் காணாமல் போய் விடும்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“இன்றைக்கு ஹமீர் என்ற புதிய ராகம் ஆரம்பித்திருக்கிறார். செல்லும் வழியெங்கும் உல்லாசத்தை இறைத்துக்கொண்டு முன்னால் போகிறது அது...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்ய ஆசைப்படுகிறவனுக்கு முழங்கால் உருப்படியாக மிஞ்சாது.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“எழுத்து ரூபத்தில் இருந்ததை வேண்டுமானால் பிரதி எடுத்துக் கொள்ளலாம். குரு பாடிக் காட்டியதை எதில் பதிந்து கொள்வது?...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“தீபக் ராகத்தைப் பாடுவதற்கு முன்னால் இரண்டு இளநீர்க் காய்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். அந்த ராகத்தைப் பாடும்போது தேகத்திலும், தேகத்தைச் சுற்றியும் ஏகப்பட்ட உஷ்ணம் கிளம்புமாம்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“பிலாஸ்கானி தோடிக்கு அந்தப் பெயர் வந்த காரணம் என்ன தெரியுமா? தான்சேன் இறந்துவிட்டார். அவருடைய மகன், தகப்பனின் தலைமாட்டில் துக்கமாகப் பாடுகிறான். விசேஷமான தோடி. மகன் பாடியதைக் கேட்டு தான்சேனின் பிரேதம் கண்ணீர் உகுத்ததாம். அவனுடைய பெயர் பிலாஸ்கான்...”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“சதா சர்வ காலமும் எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த தம்பூராவின் நாதம் நின்றுவிட்டது ஒருநாள். எனக்குள்ளே இருந்த வெளிச்சத்தை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
“சூட்டிகையான பையன். ஏகசந்தக் கிராகி.”
― கானல் நதி [Kaanal Nadhi]
― கானல் நதி [Kaanal Nadhi]
