கிடை Quotes
கிடை
by
கி. ராஜநாராயணன்452 ratings, 4.25 average rating, 53 reviews
கிடை Quotes
Showing 1-3 of 3
“அவளுடைய பாம்படத்தை விற்றுக் கோவில்பட்டி சந்தையில் நாலு புருவைகளை வாங்கிக்கொண்டு வந்தார். இப்பொழுது அவருக்கு ஒரு மொய் ஆடுகளுக்கு மேலேயே இருக்கிறது! ஒரு மொய் என்பது 21 ஆடுகளைக் கொண்டது. முதல் ஈத்துலேயே அவருக்கு இந்தக் கொச்சைக்கிடா கிடைத்துவிட்டது.”
― கிடை [Kidai]
― கிடை [Kidai]
“செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:”
― கிடை [Kidai]
― கிடை [Kidai]
“கிடை என்பது ஒரு தனி ராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் ‘கீதாரி’ என்பது. கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழிவந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக்கூட ஒரு முறை உண்டு. அதற்கு ‘வட்டம்”
― கிடை [Kidai]
― கிடை [Kidai]
