சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal] Quotes
சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
by
தொ. பரமசிவன்117 ratings, 4.62 average rating, 17 reviews
சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal] Quotes
Showing 1-10 of 10
“வேர்களை இழந்தவர்களிடம்தான் குரூரம் அதிகமாக இருக்கும்.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்களே உடல்சார் இன்பத்தை வெளிப்படையாகப் பேச முற்பட்டன. ஆனால், நாட்டின் அதிகாரம் அரசனிடத்தில் இருப்பதைப்போல வீட்டின் அதிகாரத்தை ஆணின் கையில் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் பெண்ணின் உளவியல் வடிவமைக்கப்பட்டது.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“ஒரு பேரரசு உருவாகின்றபோது அதற்குச் சார்பான தத்துவ அமைப்பொன்றும் உருவாக வேண்டும். ஆயுத பலத்தின் வழியாகப் பெற்ற அதிகாரமும் உடைமைகளும், சமூகத்தை மேல்கீழ் அடுக்குகளாகப் பிரித்து வைக்கும். பாதிக்கப்பட்ட மக்கட் சமூகம் இந்தப் பிரிவினைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுமாறு மறுதரப்பில் சமயம் சார்ந்த சிந்தனை ஒன்று சமூக உளவியலை வடிவமைத்தாக வேண்டும். சோழ அரசு ஒரு பேரரசாக உருவாகும்போது அந்தப் பணியினைத் தமிழ்நாட்டில் சைவ சமயம் திறம்படச் செய்தது என்பதனைப் பேரா.க.கைலாசபதி”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“பண்பாட்டுத் தளத்தில் பக்தி இயக்கம் கைக்கொண்ட வேறு சில உத்திகளையும் இங்கே கவனிக்க வேண்டும். அவற்றுள் ஒன்று, மக்கள் தொகையில் சரிபாதியான பெண்மக்களைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டது. ஆணாதிக்க உணர்வுடைய துறவு நெறிக்கு எதிரான பெண்களின் உணர்வுகளைக் குடும்பம் என்ற அமைப்பை முன்னிறுத்தி பக்தி இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“இந்த இரண்டு மதங்களும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது இங்கு ‘அரசு’ என்னும் நிறுவனம் ஒரு வலிமையான அடிப்படையில் நிலைகொண்டிருக்கவில்லை. உற்பத்திச் சக்திகள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. பெரிய சந்தைக்கான உற்பத்திப் பொருளாக அன்று உப்பு மட்டுமே இருந்தது. மிகப்பெரிய வணிகப் பெருவழிகளும் (Trade routes) தமிழ்நாட்டில் உருவாகியிருக்கவில்லை. மூவேந்தர்கள் மட்டுமே அன்று நிலைப்படை (Standing Army) வைத்திருந்தனர். சமண, பௌத்தத்தின் வருகையினை ஒட்டித் தமிழகத்தில் வணிகப்பெருவழிகள் உருவாகின. ஏனென்றால் அவை இரண்டும் வணிகர்களின் பேராதரவில் வளர்ந்த மதங்களாகும். சமண, பௌத்தத்தின் வருகையினைத் தொடர்ந்து வேள்விச் சடங்கினை மட்டுமே செய்யக்கூடிய பிராமணர்களும் தமிழகத்துக்குள் வருகை தந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் உருவ வழிபாடு கிடையாது. அவர்களது வேள்விச் சடங்கினை ஏற்ற வருணன், இந்திரன் முதலிய தெய்வங்களுக்கும் உருவம் கிடையாது. பல தெய்வ வழிபாடு நெறிகளில் அக்காலத் தமிழ்நாட்டு மக்களின் தாய்த்தெய்வமும் மகன் தெய்வமும் கோட்டங்களில் (வட்டவடிக் கோயில்களில்) குடியிருந்தனர்.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“சோழர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் பிறந்த சைவப் பெருமடங்கள் நாத சம்பிரதாயத்தோடு பண்பாட்டுச் சமரசம் செய்து கொண்டன. சோழ அரசின் வீழ்ச்சியோடு கோயில்களில் வேள்வி செய்யும் ஸ்மார்த்தப் பிராமணர்களின் அதிகாரம் குறைந்து அர்ச்சனை செய்யும் சிவப்பிராமணர் அதிகாரம் கூடியது. வேறு வகையில் சொல்லுவதானால் சைவம் வேதத்தைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு ஆகமங்களை முன்னுக்கு நிறுத்தியது. இதன்வழி கோயில் ஆட்சியதிகாரத்தில் வைதீகப் பிராமணர்களின் அதிகாரக் கட்டமைப்பு தளர்ந்து வேளாளர்களின் அதிகாரம் பெருகியது. கோயில் நிலங்கள் அனைத்தும் வேளாளர்களால் மேற்பார்வை செய்யப்பட்டதே இதற்குக் காரணமாகும்”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“தமிழ்நாட்டில் சித்தர் இயக்கம் மூன்று நிலைகளில் கால் கொண்டது. வேத எதிர்ப்பு, கோயில் எதிர்ப்பு என்பவையே அந்த மூன்றுமாகும். ‘‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ’’ (13) ‘‘மீனிறைச்சி தின்றதில்லை அன்றும் மின்றும் வேதியர் மீனருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்’’ (157)”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“வேளாண் வளர்ச்சியின் விளைவாகக் கோயில் உருவாகி அவற்றுக்கு நிலம் போன்ற நிலைத்த உடைமைகள் உண்டான பின்னர்தான், பிராமணர் கோயில்களோடு இணைந்து, அவற்றின் வழிக் கிடைக்கின்ற பயன்களைத் துய்க்குமாறு முழுக்காலக் கோயில் பணியாளர்களானார்கள்’’ என்று குறிப்பிடும் மே.து.ராசுக்குமார், ‘‘சிறு உழவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுப் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டதால் எதிர்ப்புணர்வுகளும் கசப்புணர்வுகளும் இருந்து வந்தன. அத்துடன் அவர்கள் உள்ளுரில் வரவேற்கப்படவுமில்லை”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“(சோழர் கால நிலைவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், பக்.211,212).”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“விளக்கு வழிபாடு அரசின் கையில் வலிமையான கருவியாகும் என்பதனை வேறொரு வகையிலும் புரிந்து கொள்ளலாம். தொடக்க காலத்தில் தனிநபர்களின் வேண்டுதல்களாக கோயில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அடுத்து வந்த காலத்தில் அரசனது வெற்றிக்காக (உடையார் ஸ்ரீ ராச ராஜதேவர் கோழிப் போரின் ஊத்தை அட்டாமல் கடவ... என்பது கல்வெட்டுத் தொடர்) திருவிளக்குகள் ஏற்றப்பட்டன.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]