நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam] Quotes
நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]
by
C.N. Annadurai134 ratings, 4.40 average rating, 15 reviews
நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam] Quotes
Showing 1-30 of 59
“தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கேளும் கம்பரே! துரோணாச்சாரியாரே! நீரும் கேளும் லோகமாதாவாம் அன்னை ஜானகியை இலங்கேஸ்வரனாகிய இராவணன் அவளின் கூந்தலைப் பிடித்து, இழுத்து அவளைத் தன் மார்போடு அணைத்துத் துடையில் கை கொடுத்துத் தூக்கிக் கொண்டு சென்றான் என்று நான் எழுதினேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)

“கம்: விந்தையல்ல முனிபுங்கவரே! விளக்க உரை தந்தேன். சீதையின் சிறப்பியல்புகளைத் தமிழ்ப் பண்போடு இணைந்துரைத்தேன். இராமனின் பராக்கிரமத்தைப் பாரெல்லாம் புகழ, பண் அமைத்துப் பாடினேன். இராவணனின் வீரம், வலிமை, தவம் அனைத்தும் அகிலமெல்லாம் அறியச் செய்தேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“வால்: வினாசகாலே விபரீதபுத்தி கம்பருக்கு ஏன் இந்த வம்பு. மூலத்தைத் திருத்திக் கூறிப் புகார் மனு கொடுத்தால், விசாரணையின்போது இராவணன் அழிந்து படுவான் என்று எண்ணினார் போலும்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“சாய்ந்த தராசு! தேய்ந்த படிக்கற்கள்! முதன்முறையாக இம்மன்றத்தின் முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அதற்கு அஞ்சி, காலச் சுமை வீழ்ந்து, வீழ்ந்து சாய்ந்து போன துலாக்கோலில், தேய்ந்துபோன படிக்கற்களைப் போட்டு, நிறை பார்ப்பது நீதியாகுமா,”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அவர் தம்மிடம் தரப்பட்டுள்ள துலாக்கோலையும் படிக்கற்களையும் தூக்கி எறிந்துவிட்டு வழக்கின் சகல அம்சங்களையும் தாமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு நீதி தேவனுக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதாது- உள்ளத்தில் உரம் வேண்டும்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட ஏதோ ஓர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக்கற்கள் அவருக்குத் தரப்பட்டவை! இவைகளின் துணை கொண்ட நீதிதேவன், நிறை பார்க்கிறார். நான், அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்க வில்லை. அந்தத் துலாக்கோலையே சந்தேகிக்கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“ஆரியர் தவம் புரியலாம். அநாரியனான றாக் புரிதல் தகாது, தலையை வெட்டுவேன் என்கிறாய்- இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தருமம்! இராமா! எனக்கு”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம் செய்தனர். இராவணனே, பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம் தவம் பல செய்து, வரம் பல பெற்றவர்கள்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது- என் கோபம் தவத்தின்மீது அல்ல- அந்தக் குணம் அரக்கனுக்கு! அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும் என்ற தருமத்தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்லேன் நான்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இருப்போர்: சம்புகன், இராமன், சம்புகன் தாய்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“மூவரும் விட்டிருப்பாரோ? கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்கிரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்...”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரக்கத்துக்காக வேண்டி அரக்கர் குல அரசு மங்கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர் குலத்தையே ஆரிய குலத்தில் அடிமையாக்கி வைக்கும் இழிசெயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலை காட்டவில்லை இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று கொண்டாடப்படுவது தேன் தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டுகட்ட தெரிந்ததால் நீதிதேவா! இது சரியா? சீதையை நான் களவாடிச் சிறை வைத்தேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரா: இரக்கம் என்ற ஒரு பொருள்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“கம்:கணிகை காண் கைகேசி”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“ஆவுமழுதவ கன்றழுதவன் றலர்ந்த பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங் காவுமழுத களிறழுத கால்வயப்போர் மாவுமழுதன வம்மன்னவனை மானவே'' என்றும் பாடியிருக்கிறேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“கிள்ளையொடு பூவையழுத கிளமர்மாடத் துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப் பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்'',”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே, தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரா:கம்பரே! நான் இருக்கிறேன். தண்டனை தர என் தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவிக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை அனுப்பி விடுவது”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும் இப்படி அலங்கோலப்படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்த போது இராம- இலட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“சூர்ப்பனகை வருகிறாள்”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“ஆக, அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும் போதெல்லாம் அரக்கர்தானே?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரா:தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக் கறியாக்கும்படி தயாபரன் சோதித்த, இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத் தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்ததால், சிவனாரை நோக்கி, "ஐயனே! பாலகனைக் கொன்று கறி சமைக்கச் சொல்கிறீரே, எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே!' என்று கூறியிருப்பார். உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும் அல்லவா?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“இரா:அதாவது... தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது- இதுதானே இரக்கம்?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்ன விதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா?”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என் மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும் ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கம்பீரமான முழக்கமும் எந்த இலங்கையிலே நித்திய நாதமாக இருந்ததோ, அங்குக் குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்; பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“கொலு மண்டபத்திலே கொட்டி அளந்தான் விபீஷணன்! தம்பீ! உனக்குத் தாசர் புத்தி தலைக்கேறி விட்டதடா! என்று கூறி உட்கார வைத்தேன். இரக்கம் காட்டவில்லை.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அரசிளங்குமரி சீதையை அசோக வனத்தில் சிறை வைத்தேன்.”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“உடல் சோர விழியில் நீர் வழிய, கூந்தல் சரிய, ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக் கண்டு! போடா போ என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன். அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா? இல்லை....”
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
― Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
“அடே துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினியையா இந்தக் கோலம் செய்கிறாய்?' என்று வயோதிக சடாயு வாய்விட்டு அலறினான்- சீதை உயிர் சோர,”