புல்வெளி தேசம் Quotes

Rate this book
Clear rating
புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam] புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam] by Jeyamohan
23 ratings, 3.96 average rating, 1 review
புல்வெளி தேசம் Quotes Showing 1-4 of 4
“வெரியர் எல்வின் ஒரு பிரிட்டிஷ்காரர். இந்தியாவுக்கு சாதாரணமாக வந்தவர் காந்தியைச் சந்தித்தார். காந்தியின் ஒரு கேள்வி அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. “வாழ்க்கையின் அல்லது பண்பாட்டின் வெற்றியை எதை வைத்து அளப்பது?” காந்தி சொன்னார் “மகிழ்ச்சியை வைத்து” என்று. பின்னர் இந்தியப் பழங்குடிகளுடன் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையை ஆராயும் வெரியர் எல்வின் அந்த வரியையையே தன் கோட்பாடாக ஆக்கிக் கொண்டார். பழங்குடிகள் தங்களுக்கென்று ஒரு முழுமையான வாழ்க்கைமுறை கொண்டவர்கள். அதில் அவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல உடையணிகிறார்களா நல்ல வீடுகளில் வாழ்கிறார்களா என்ற கேள்வியை வைத்து அவர்களை எடை போடலாகாது. அவர்களே விரும்பினாலொழிய அவர்களின் வாழ்விடங்களையும் வாழ்க்கைமுறையையும் மாற்ற நமக்கு அதிகாரம் இல்லை. இந்தக்கொள்கை ‘எல்வின் கொள்கை’ எனப்படுகிறது.”
Jeyamohan, புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam]
“இன,மொழிக் காழ்ப்புகளை வெல்வதற்கான ஒரேவழி நாம் அவற்றை தாண்டிச்செல்வதே.”
Jeyamohan, புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam]
“பல நவீன முயற்சிகளை ஒரே சொல்லில் கேனத்தனமானவை என்று சொல்லிவிடலாம். விபரீதமான காட்சி இணைப்புகள். சம்பந்தமில்லா பொருட்களை இணைத்து உருவாக்கிய அதிர்ச்சிதரும் பொருட்கள். ஆனால் கலை என்பது மனிதமனம் என்னும் அருவமான ஒன்றுக்கும் வெளியே பரந்து கிடக்கும் பருப்பொருள் என்ற உருவ வெளிக்கும் இடையேயான ஓர் ஊடாட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் மனம் என உணர்வது வெளியே உள்ள பருப்பொருட்கள் நம் அகமாக ஆகியிருப்பதைத்தான். நம் மனம் என்பது பருப்பொருட்களின் பிம்பங்கள் பலவகைகளில் முயங்கி உருவான ஒரு ஆழத்து வெளி. ஆகவே வெளியே உள்ள பருப்பொருட்களை விதவிதமாக உருமாற்றுவதன்மூலம் ஒருவன் செய்வது தன் அகத்தை உருமாற்றுவதைத்தான். அகத்தை அறிவதற்கான முயற்சியிலேயே புறத்தே உள்ள பொருட்களை அறிய மனிதன் முயல்கிறான்- அதுவே கலை.”
Jeyamohan, புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam]
“போர் என்பது மனிதன் உள்ளூர விரும்பும் ஒரு விளையாட்டு. ஏனென்றால் அங்கே மனிதன் பண்பாடு தொடங்கிய காலம் முதல் அடக்கி அடக்கி வைத்திருந்த ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டுவிட்டது. கொலை. மரணமுனையில் நிற்கும் மனிதன் அவனது மனித நிலையை இழந்து தூய விலங்குநிலையை அடைகிறான். வேட்டைமிருகமாக, வேட்டையாடப்படும் மிருகமாக ஆகிறான். மனிதனின் உலகியல் இன்பங்கள் எல்லாமே தூயமிருகநிலை சார்ந்தவை.”
Jeyamohan, புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம் [Pulveli Desam: Australia Payanam]