Nerunji Mul Quotes
Nerunji Mul
by
Sivasankari80 ratings, 4.15 average rating, 2 reviews
Nerunji Mul Quotes
Showing 1-1 of 1
“குழைய சோறு வடிச்சு, நெய் பருப்புப் போட்டுப் பிசைஞ்சு, குழந்தைய இடுப்புல வெச்சு, நிலா காட்டி சோறு ஊட்டறப்ப, இதே வாய் நாளைக்கு நம்மை அசிங்கமா திட்டலாம்னு எத்தனை பேர் நினைச்சுப்பார்க்கிறோம்? ஊட்டி வளக்கற தாய் புண்பட்டுப்போக இதே வாய் காரணம்னு யார் நினைக்கிறோம்? பிஞ்சுக்கால் நோவுமேன்னு ராத்திரி படுக்கறதுக்கு முன்ன தைலம் தடவுவோம், எண்ணெய் தேச்சு உருவி வெந்நீர் ஊத்துவோம்... ஆனா, இதே காலால நாளைக்கு நம்மை உதைச்சு விரட்டலாம்னு எதிர்பார்க்கறோமோ? ம்ஹூம், இல்ல! பக்கத்து வீட்டுல எதிர்வீட்டுல இந்த அநியாயம் நித்தம் நடக்கறதைக் கண்ணால பார்த்தப்பறம்கூட, இது நமக்கும் நாளைக்கு வரலாம்னு யார் யோசிக்கறோம்? எதிர்காலத்துக்காக யார் நம்மைத் தயார் பண்ணிக்கறோம்? ம்ஹூம், ஒன்னுமில்ல! என் பிள்ளை, என் பெண்ணு, என் மருமகன்னு வாரிக்கட்டிக்கறோம்... நாளைக்குத் தங்கத்தட்டுல நம்மைத் தாங்கிடுவாங்கன்னு கோட்டை கட்டறோம்... அதான் நிஜத்துல வேற மாதிரி நடக்கிறப்ப, இடிஞ்சுபோயிடறோம்!”
― Nerunji Mul
― Nerunji Mul
