பௌத்தமும் தமிழும் Quotes
பௌத்தமும் தமிழும்
by
மயிலை சீனி. வேங்கடசாமி28 ratings, 4.18 average rating, 7 reviews
பௌத்தமும் தமிழும் Quotes
Showing 1-3 of 3
“தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
“காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இவ்வாறு சிவபெருமானாலே போற்றப்பட்ட ஒரு நூல் ஏன் வழக்காறற்றுவிட்டது? தமிழ்மரபுக்குப் புறம்பான நூலைத் தமிழர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளார். வீரசோழியம் வடநூல் மரபைத் தழுவி எழுதப்பட்டது. முக்கியமாக யாப்பிலக்கணம் பெரிதும் வடமொழிச் சார்பாக இருக்கின்றது. அன்றியும், இது எதிர்நூல். இது எதிர் நூல் என்பதை ' ஆரவார விலக்கணநூ லைந்துமுழங்க வதற்கெதிர்நூல்
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே ' என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே ' என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
“காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் 'சாஸ்தா' என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் 'காமாட்சிலீலாப் பிரபாவம்' என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், 'காமக்கோட்டப் பிரபாவத்தில்', 'தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்' காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * 'சாஸ்தா' என்பவரும் 'புத்தர்' என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil