இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal Quotes

Rate this book
Clear rating
இட்லியாக இருங்கள் -  	Idlyaga Irungal இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal by Soma. Valliappan
1,015 ratings, 4.13 average rating, 116 reviews
இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal Quotes Showing 1-20 of 20
“உணர்ச்சி வேகத்தில் நாம் எடுக்கும் முடிவுகள், பெரும்பாலும் தவறுகளாகவே அமைந்துவிடும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“அழகு, அறிவு, புத்திசாலித்தனம் போன்றவை இருந்தும் கூட சிலர் மதிக்கப்படுவதில்லை, மற்றவர்களால் விரும்பப்படுவதில்லை. அவையெல்லாம் பளிச்சென்று வெளித்தெரியும் முதல்பார்வை மதிப்பீடுகள்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“நிதானம் உங்களிடமே இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் வரவழைத்துக்கொள்ளுங்கள். அது மிகவும் சுலபமான விஷயம். நான் நிதானமாகவே இருக்கிறேன், இருப்பேன் என்று பத்து முறை சொல்லிவிட்டு நிலைக்கண்ணாடியில் உங்களைப் பார்த்து நீங்களே ஒரு புன்னகை செய்து பாருங்கள்! உங்களுக்குள் ஒரு புத்தர் உண்டு என்று உங்களுக்கே தோன்றும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“எப்படி குளிக்கும்போது நம் உடலின் அனைத்துப் பகுதிகளையும் பார்த்துப் பார்த்து சோப்பு போட்டு சுத்தம் செய்கிறோமோ, அதே மாதிரி தினசரி கொஞ்ச நேரமாவது ஒதுக்கி, நம் மனத்தை நாமே ஆராயவேண்டும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“நம்முடைய எண்ணங்களே நாம் நடந்து கொள்ளும் விதங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் (மெமரி சிஸ்டம்ஸ்) உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்மந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமோஷனல் மெமரீஸ் ஸ்டோர்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி தூக்குகிறார். குழந்தை அந்தப் பெண்மணியைப் பார்க்கிறது. அந்தத் தகவல் கண்கள் வழியாக, தலாமஸுக்குப் போகிறது. தலாமஸ் அதனைக் கார்டெக்ஸுக்கு அனுப்ப, கார்டெக்ஸ் அதைத் தன்னிடம் ஏற்கனவே உள்ள கோப்புகளில் ஒப்பிட்டதில், அந்தப் பெண் தன் அம்மா என்று புரிந்துகொண்டு, அப்படியானால் இது உணர்வு சம்மந்தப்பட்டது என்று முடிவுசெய்து, அமிக்டலாவுக்குச் செய்தி அனுப்பும். உடன் அமிக்டலா, அம்மா என்று நெகிழவோ அல்லது அழவோ வைக்கும். எல்லாம் நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்துமுடிந்துவிடும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“அறிவு மிகுந்தால் ஆனந்தம். உணர்ச்சி மிகுந்தால் ஆபத்து. உணர்ச்சியை சமயோஜிதமாகப் பயன்படுத்தி அறிவைச் செழுமைப்படுத்த முடியுமானால் அதுதான் புத்திசாலித்தனம்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“கோபம், வெறுப்பு, காழ்ப்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்யும். அவற்றை அடக்கி, புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதன்மூலம் வெற்றியின் படிக்கட்டுகளின்மீது வேகமாக ஏறமுடியும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“இனிஷியேடிவ் என்பது ஆர்வமுடன் முயற்சி மேற்கொள்வது, எதையும் எவரும் சொல்லாமலே தானே எடுத்துச் செய்வது - இந்த மூன்றும் இருந்தால் போதும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“கம்யூனிகேஷன் என்றால் தொடர்புகொள்வது. இன்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் என்றால் ஒருவருக்கொருவர் உள்ளார்ந்த நல்லஉறவு பேணுவது.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“வெற்றிக்குக் கட்டுப்பாடு அவசியம். மனக் கட்டுப்பாடு. மனம்,அமிக்டலாவின் அடிமையாக இருந்தது போதும். அதனை அறிவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“ஒருவருடைய உண்மை குணாதிசயத்தினைத் தெரிந்து கொள்ள அவருடன் வெளியூர் போக வேண்டும் என்பார்கள்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“கம்யூனிகேஷன், இன்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் மற்றும் இனிஷியேட்டிவ் ஆகியன என்று தெரிய வந்தது.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“அறிவு சம்பந்தப்பட்டவை அல்ல. எல்லாமே ‘Soft Skills.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“நம்பகத்தன்மை, அனுசரித்துப்போகும் குணம், இணைந்து பணியாற்றும் திறன்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“வெற்றி பெற்றவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன? அவர்கள் அனைவரிடமும் எந்த சில குணாதிசயங்கள் பொது அம்சமாக அமையப்பெற்று இருக்கின்றன?”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“அடித்து ஆடுங்கள். ஆனால், கவனமாக! பதறாத காரியம் சிதறாது.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“மனத்துக்கும், ஒரு கதவும் அதற்கு ஒரு தாழ்ப்பாளும் போட வேண்டும். எல்லாவற்றையும் உள்ளே அனுப்பக்கூடாது. அது பிறகு எதிர்பாராத நேரத்தில் வார்த்தைகளாக வெடிக்கும்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)
“உங்கள் உள்ளுணர்வு ஒரு தகவலை உங்களுக்குத் தருகிறது. அது அதிர்ச்சியானதாக, அச்சமூட்டக்கூடியதாக, கலவரமூட்டக் கூடியதாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உள்ளுணர்வு என்ன சொன்னாலும் உடனே செய்துவிடாமல், ஒரு விநாடி ஒரே ஒரு விநாடி அதை எதார்த்த தளத்தில் வைத்து யோசித்து விட்டீர்களானால், நீங்கள் ஜெயித்துவிடுவீர்கள்.”
Soma.Valliappan, Emotional Intelligence (Tamil)