அம்மா வந்தாள் [Amma Vanthaal] Quotes
அம்மா வந்தாள் [Amma Vanthaal]
by
Thi. Janakiraman1,034 ratings, 4.09 average rating, 101 reviews
அம்மா வந்தாள் [Amma Vanthaal] Quotes
Showing 1-5 of 5
“சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு”
― Amma Vanthal
― Amma Vanthal
“காதில் பூரித்த வைரத்தோடு இடக் கன்னத்தின் மஞ்சளுக்கும், இறங்கித் தழைந்த கருமயிருக்கும்மேல் லேசாக ஒரு நீலத்தைத் தெளித்தது.”
― Amma Vanthal
― Amma Vanthal
“கோமாளி வேடம் போடுகிறவன் பேசுவதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஆனால் தனக்கு எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி வேடம் போட்டு - அவன் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக - அவர்களே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவனுக்கு”
― Amma Vanthal
― Amma Vanthal
“ஒண்ணையும் புரிஞ்சுக்கச் சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத்தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.”
― Amma Vanthal
― Amma Vanthal
“பாடம் சொல்லிக்கொடுக்கிறவன், சொல்லிக்கிறவன் இரண்டு பேரையும் பரமாத்மாதான் காப்பாத்துறான். இரண்டு பேருக்குள்ளேயும் மனஸ்தாபம், துவேஷம் இருக்கப்படாது”
― Amma Vanthal
― Amma Vanthal
