கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்

Add friend
Sign in to Goodreads to learn more about கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்.

https://www.goodreads.com/manimaaran

Loading...
“கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓட்டம்பிடிக்கிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடித்துவிட்டால் அது உன்னிடமிருந்து மறைந்தோடுகிறது.”
Shri Ramakrishna Paramahamsa

“ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.”
Chidbhavananda, The Bhagavad Gita

“ஒரு பொந்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. அவ்வழியாகச் சென்றவர்களை அது கடித்து வந்தது. ஆதலால் அப்பக்கம் ஒருவரும் போவதில்லை. ஒரு நாள் ஸாது ஒருவர் அவ்வழியே போகும்போது அவரைக் கடிக்க அப்பாம்பு அவரைப் பின்பற்றியது. ஆனால் அவரைச் சமீபித்ததும் அவருடைய மஹிமையால் பாம்புக்கிருந்த மூர்க்கம் முழுவதும் போய்விட்டது. அந்த மஹான் பாம்பைப் பார்த்து,"நண்பா! என்னைக் கடிக்க நினைக்கிறாயா?" என்று கேட்டார். பாம்பு வெட்கப்பட்டுப் பதில் சொல்லாமலிருந்தது. அதன்மேல் அந்த யோகி, "நண்பா, கேள். இனிமேல் ஒருவருக்கும் தீங்கு செய்யாதே" என்று சொல்லிப் போனார். அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகப் பாம்பு தலையை அசைத்தது. மஹான் போன பிறகு பாம்பு தன் புற்றில் புகுந்துகொண்டு அந்த க்ஷணம் முதல் யாருக்கும் தீங்கு செய்யாது வாழ்ந்து வந்தது. கொஞ்சநாளில் அவ்வூர் ஜனங்கள், அந்தப் பாம்புக்கு விஷமெல்லாம் போய் விட்டது; இனி ஒருவரையும் கடிக்காது என்று நினைத்து அதை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். சிலர் அதன்மீது கற்களை எறிந்தார்கள்; வேறு சிலர் இரக்கமின்றி அதன் வாலைப் பிடித்து இழுத்தார்கள். இப்படியாக அதற்கு நேர்ந்த உபத்திரவத்துக்கு அளவேயில்லை. அதிருஷ்டவசமாய் முன்வந்த ஸாது அவ்வழியாய் மறுபடியும் வந்தார். உடம்பெல்லாம் புண்ணாகி மெலிந்திருக்கும் பாம்பைப் பார்த்து அது அப்படியானதின் காரணத்தைக் கேட்டார். "ஸ்வாமி, தங்கள் உபதேசப்படி நான் ஒருவருக்கும் தீங்கு செய்யவில்லை. அதன் பயன் இது. ஜனங்கள் இரக்கமில்லாமல் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்" என்றது பாம்பு. யோகி இதைக் கேட்டுப் புன்சிரிப்புக்கொண்டு, “நண்பா, யாரையும் கடிக்க வேண்டாம் என்றுமட்டுமே உனக்குச் சொன்னேன். ஒருவரையும் பயமுறுத்தவேண்டாம் என்று நான் சொல்லவில்லையே" என்றார்.

அதுபோல, நீ உலகத்தில் வாழ்ந்திருக்கும் வரையில் பிறர் உன்னிடம் அச்சமும் மரியாதையும் கொள்ளும்படி நட. ஆனால் ஒருவருக்கும் நீ தீங்கு செய்யாதே. பிறரால் உனக்குத் தீங்கு வராதபடியும் காத்துக்கொள். அதாவது மனதையும் இந்திரியங்களையும் முறையாகக் கையாளக் கற்றுக்கொள்.”
Shri Ramakrishna Paramahamsa

“அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில், மனிதர்கள் என் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.

நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக் கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.”
Chidbhavananda, The Bhagavad Gita

“கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தவுடனே கனவைப் பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப் பற்றிய மயக்கம் கிடையாது.

பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலையென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.”
Chidbhavananda, The Bhagavad Gita

year in books
Muthu V...
553 books | 169 friends

Premana...
2,597 books | 481 friends

Prem
954 books | 196 friends

இரா  ஏழ...
255 books | 226 friends

Gautami...
945 books | 149 friends

Chidamb...
1,240 books | 160 friends

Shan Su...
309 books | 83 friends

Sugan
860 books | 278 friends

More friends…
The Brothers Karamazov by Fyodor DostoevskyCrime and Punishment by Fyodor DostoevskyThe Idiot by Fyodor DostoevskyWar and Peace by Leo TolstoyAnimal Farm by George Orwell
Best Books Ever
76,179 books — 283,264 voters


Favorite Genres



Polls voted on by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்

Lists liked by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்