Intelect Quotes

Quotes tagged as "intelect" Showing 1-9 of 9
John C. Holt
“Figuring out what you don't know or aren't sure of is the greatest intellectual skill of all.”
John Holt, Learning All the Time

Periyar
“கல்யாணம் என்பது ஆண் - பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எவ்விதத் தெய்வீகத் தன்மை என்பதும் இருக்க நியாயமில்லை”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

Periyar
“விபச்சாரம் என்பது எந்தப் பொருளிலாவது குற்றமாகுமானால், அது இருபாலாருக்கும் சமமாய் இருக்கவேண்டும்”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

“It is not the soul that speaks its mind, but the mind that speaks its soul, that will be heard.”
Andrew Sabitov

Periyar
“பெற்றோர்களுடைய சொத்துகளுக்குப் பெண்களும் ஆண்களைப் போலவே பங்குபெற உரிமையுடையவர்கள் ஆகவேண்டும்”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

Periyar
“உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும். ஆனால், காதலென்றாலென்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணமென்ன? என்பதைப்போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

Periyar
“காதல் என்பது ஒரு ஆசையென்றும், அந்த ஆசை ஏற்படவும் மறைந்து போகவுமான தன்மை கொண்டதென்றும், அதுவும் ஆசைப்படுபவர்கள் திருப்தியையும், நலத்தையும், பலத்தையுமே அஸ்திவாரமாய்க் கொண்டதே ஒழிய, வேறெதையும் பொறுத்ததல்ல”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

Periyar
“வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது - வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்த மென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.”
ஈ.வெ.ரா பெரியார் [Periyar]

Mark Twain
“Every man in the earth possesses some share of intellect, large or small; and be it large or be it small he takes pride in it. Also his heart swells at mention of the names of the majestic intellectual chiefs of his race, and he loves the tale of their splendid achievements. For he is of their blood, and in honoring themselves they have honored him. (...) And then he contrived a heaven that hasn't a rag of intellectuality in it anywhere!”
Mark Twain, Letters from the Earth: Uncensored Writings