(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kota Shivarama Karanth

“படிப்பறிவு மிக்க ஒரு மனிதனுக்கு எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் அறிவை விரிவு செய்ய ஆங்கிலத்தில் எல்லையற்ற வாசிப்புக்குரிய வாய்ப்புகள் உள்ளன. ஒரு குழந்தைக்குக் கூட இந்த வாய்ப்பு உண்டு. பெரியவர்களுக்கு என்று பார்த்தாலும் கன்னடத்தில் அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவு. இளைஞர்கள் ஆசிரியர்களிடமிருந்து கூட உதவிபெற முடியாது. ஏனெனில் ஆசிரியர்களுக்கும் பார்வை நூல்கள் இல்லை. இந்தக் குறைகளை ஒரு கலைக்களஞ்சியத்தால் தீர்க்க முடியும் என்று கருதினேன். கனவு காண்பதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது என் வழக்கம். யாருக்கேனும் இதனால் பயன் கிடைக்காவிட்டாலும் நானே கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்குமே.

இதற்கென அமர்ந்து உள்ளடக்கப் பட்டியலை நினைத்துப் பார்த்தேன். எப்படியிருந்தாலும் இந்தக் களத்தில் இறங்கிய முதல் மனிதன் அல்ல நான். ஆர்தர்மீ மிகப்பெரிய குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் நியூவென்ஸ் கம்பெனி Pictural Knowledge என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாவதாக நான் சொன்ன நூல் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் வாசகர் அறிய விரும்பும் பொருளைப் பெரிய அளவில் அறிந்துகொள்ள முடியும்; வேறு சில கலைக்களஞ்சியங்கள் தகவல்களால் நிரம்பிப் பார்வை நூல்களாகும் தகுதியோடு உள்ளன. அவற்றின் நோக்கம் வினாவிடைப் போட்டிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகள் அடிப்படைக் கேள்விகளுக்குத் தக்க பதில் தெரிந்துகொள்ள உதவுவதாகும்.

இத்தகைய அறிவு நூல்களில் நான் கண்ட ஒரு குறை யாதெனில் அவை அறிவியல், வரலாறு, இலக்கியம் குறித்துப் பேசினாலும் நடைமுறையில் பொருளாதாரம், அரசியல் சிந்தனை, தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளைப் புறக்கணிக்கின்றன. எனவே கன்னடத்தில் வரப்போகும் முதல் நூல் இந்தத் துறைகளை விலக்கி விடலாகாது என்று நான் நினைத்தேன். நான் எடுத்துக்கொண்ட செயல்திட்டம் கடலென விரிந்தது. நான் இதனைச் சாதிக்கச் சரியான நெறிமுறையைப் பின்பற்ற எண்ணினேன். எல்லாம் அறிந்தவன் என்று என்னை எண்ணிக்கொண்டு நானே எல்லாப் பொருள்கள் பற்றி எழுதிவிடலாமா? அல்லது ஒவ்வொரு துறையிலும் வல்லுநராக இருப்பவர்களிடமிருந்து கட்டுரைகள் பெறலாமா? இரண்டாவது கருத்து இயல்பாகவே சிறந்தது. ஆனால் நான் கன்னட மாநிலத்தில் வாழ்கிறேன் என்பதை மறந்துவிட முடியாது. இந்த மாநிலத்தில் அறிஞர்கள் இல்லை என்பது பொருளல்ல. ஆனால் புதிய அறிவு தேடுவோருக்குக் கற்றுத்தரும் உற்சாகமோ, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பண்போ அவர்களுக்கு இல்லை. என் மக்களை நான் அறிவேன். ஒரு கடிதத்துக்குப் பதில் எழுத ஆறு மாதம் எடுக்கிறவர்களை நான் நம்பியிருக்க முடியாது. அவர்களை நம்பினால் என் மரணத் தேதியை ஆயிரம் மடங்கு தள்ளிப் போட்டாலும் நான் என் வேலையை முடிக்க முடியாது. எனவே நான் தனித்துப் பயணிக்க முடிவு செய்தேன். எப்போதும் நானே தலைவனாகவும் எனக்கு நானே தொண்டனாகவும் இருந்து வந்திருக்கிறேன். வேலை தடைப்பட்டால் வேறு யாரையும் நான் குற்றம் சொல்ல முடியாது அல்லவா?”

Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
Read more quotes from Kota Shivarama Karanth


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag