“ஹஜாரி, "கஞ்சா கிஞ்சா ஏதாவது வேண்டுமா? என்னிடம் இருக்கிறது” என்றான்.
கிருஷ்ணலால் சிரித்தபடி, "இருந்தால் கொடுங்கள், பெரியவரே! தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்றான்.
"சரி உட்கார், அப்பா! இதோ கஞ்சாத்தூள் போட்டுத் தருகிறேன்."
ஹஜாரி அப்படி அதிகமாகக் கஞ்சா குடிப்பவனில்லை. இருந்தாலும் கூட்டாளி எவனாவது கிடைத்து விட்டால் உற்சாகம் மூண்டு பின்னும் கொஞ்சம் உட்கொள்வது வழக்கம்.
இப்போதெல்லாம் ராணாகாட்டில் கஞ்சா குடிக்க வாய்ப்பு இல்லை. ஓட்டலில் எல்லாரும் அவனை மதித்து நடப்பவர்கள். நரேன் வேறு இருக்கிறான். இப்படிப் பல காரணங்களால் ஓட்டலில் அப்படிக் கஞ்சா குடிப்பது சாத்தியமில்லை. வீட்டிலும் முடியாது. அங்கே டேம்பி இருக்கிறாளே! அதோடு கண்டவர்களுடனும் சேர்ந்து கஞ்சா குடிப்பதும் சரியில்லை! மட்டு மரியாதை இல்லாது போய்விடுமே!
இன்று தனக்கேற்ற கூட்டாளி கிடைக்கவே, ஹஜாரி மகிழ்வுடன் கஞ்சாத் தூளைத் திணித்துப் புகைகுடிக்க ஆயத்தமானான். தயாரானதும் கஞ்சாக்குழாயை மிகவும் பரிவுடன் கிருஷ்ணலாலின் கையில் கொடுக்க வந்தான். அப்போது கிருஷ்ணலால் நாக்கைக் கடித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து அடக்க ஒடுக்கமாகக் கைகுவித்தபடி, "இது என்ன? நீங்கள் பெரியவர்; நீங்கள் உண்ட பிரசாதத்தைக் கொடுத்தால் போதும்" என்றான்.
பேச்சுவாக்கில் ஹஜாரி தன்னைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தான். இதைக் கேட்டதும் கிருஷ்ணலாலுக்கு மிகவும் மகிழ்ச்சி. மட்டமான ஆசாமிகளோடு பழகுகிறவன் இல்லை அவன். ராணாகாட்டில் சுய முயற்சியால் இரண்டு பெரிய ஓட்டல்களை நடத்தும் ஒரு பெரியவரோடு கஞ்சா குடிப்பது தனக்கு ஒன்றும் இழுக்கில்லை என்றுதான் பட்டது அவனுக்கு.”
―
আদর্শ হিন্দু হোটেল
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101802)
- life (79824)
- inspirational (76238)
- humor (44489)
- philosophy (31163)
- inspirational-quotes (29030)
- god (26983)
- truth (24831)
- wisdom (24773)
- romance (24464)
- poetry (23424)
- life-lessons (22743)
- quotes (21221)
- death (20624)
- happiness (19112)
- hope (18649)
- faith (18514)
- travel (17856)
- inspiration (17487)
- spirituality (15806)
- relationships (15740)
- life-quotes (15662)
- motivational (15469)
- love-quotes (15436)
- religion (15436)
- writing (14983)
- success (14226)
- motivation (13373)
- time (12906)
- motivational-quotes (12664)

