“பௌத்தத் துறவற அமைப்புகள் விஷயத்தில் குறுக்கீடு செய்யும் அசோகரது அணுகுமுறையை பைரத் கல்வெட்டு எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறதோ அதுபோலவே பிளவு அரசாணை என்றழைக்கப்படும் ஒன்றும் வெளிப்படுத்துவதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. சாஞ்சி, சார்நாத், அலஹாபாத் ஆகிய மூன்று இடங்களில் உள்ள மூன்று தூண்களில் மூன்று விதமான பதிப்புகளை இந்த அரசாணை கொண்டிருக்கிறது. சார்நாத்தில் உள்ளதுதான் மிக நீண்டதாக இருக்கிறது; இரண்டு தனித்த பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது பகுதி, அரசாணையின் முறையான பகுதியாக இருப்பது, துறவறக் குமுகத்துக்குள்ளாகக் காணப்படும் கருத்து மோதல்களைக் கையாள்கிறது. இந்தப் பகுதி மூன்று இடங்களிலும் வேறான வடிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பகுதி தன்னுடைய அதிகாரிகளுக்கான அசோகரது அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. அதாவது, இந்த அரசாணையைக் கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதைத்தான் நாம் 'முகப்புக் கடிதம்' என்று அழைக்கிறோம். இது பொறிக்கப்படுவதற்கான ஒன்றாக இருந்திருக்க முடியாது. இந்தக் கடிதத்தையும் பொறித்தது என்பது அதிகாரிகள் செய்த 'பிழை'யாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், வரலாற்றியலாளர்களுக்கு இது தெய்வாதீனமான ஒன்றாகிறது. இப்படி ஒரு பிழையைச் செய்யும் அளவுக்கு அறிவுகொண்டிருந்த சார்நாத் அதிகாரிகளுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இந்த அரசாணை மூன்று இடங்களிலும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. கிடைக்கும் துண்டுகளையெல்லாம் லுத்விக் அலஸ்டார்ஃப் தோராயமாக ஒன்றுசேர்த்திருக்கிறார்:
'சங்கத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சங்கத்தில் எப்படியான பிளவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சங்கத்தை பிளவுபடுத்துகிறவர்கள் யாராக இருந்தாலும், அது பிக்குவாக அல்லது பிக்குனியாக இருந்தாலும், அந்த நபருக்கு வெள்ளை ஆடை அணிவித்து, மடாலயத்துக்கு வெளியே வாழும்படி செய்ய வேண்டும்.'
இந்த அரசாணையின் நோக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது: சங்கத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கட்டிக்காக்கப்பட வேண்டும்; சங்கத்துக்குள் பிளவுகளை உருவாக்கும் பிக்குகளை, பிக்குனிகளை வெளியேற்ற வேண்டும் என்றே அசோகர் விரும்புகிறார். இது பொதுவான கட்டளையாக இருக்கிறதா அல்லது ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மடாலயங்களில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வை அசோகர் எதிர்கொள்வதாக இருக்கிறதா என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. தன் அதிகாரிகளுக்கு முகப்புக் கடிதத்தில் அவர் கொடுத்திருக்கும் அறிவுரையைப் பார்த்தால் பிந்தையதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle111 ratings, average rating, 27 reviews
Open Preview
Browse By Tag
- love (101947)
- life (80132)
- inspirational (76515)
- humor (44563)
- philosophy (31274)
- inspirational-quotes (29069)
- god (27004)
- truth (24869)
- wisdom (24840)
- romance (24511)
- poetry (23495)
- life-lessons (22777)
- quotes (21236)
- death (20659)
- happiness (19113)
- hope (18693)
- faith (18538)
- inspiration (17629)
- spirituality (15866)
- relationships (15773)
- life-quotes (15665)
- motivational (15615)
- religion (15461)
- love-quotes (15416)
- writing (15000)
- success (14236)
- motivation (13550)
- travel (13214)
- time (12929)
- motivational-quotes (12671)
