Kindle Notes & Highlights
by
Jeyamohan
Read between
January 17 - January 20, 2025
புதிதாக மதம் மாறுபவர்கள் உருவாக்கும் அதிதீவிரமான உளவிலக்கம் அது. அவர்களுக்கு இந்து தெய்வங்கள் அனைத்துமே சாத்தான்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அவற்றை வழிபடுபவர்களும் சாத்தானின் செய்தியைப் பரப்புபவர்கள்.
அரசியல் அமைப்புகளுக்குள் செல்லும் எவரும் அங்கு தொண்டனாக வாழும் பொருட்டு செல்வதில்லை, ஒருநாள் அதற்குத் தலைமை தாங்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தன்னுடைய வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்ற நினைக்கும் ஒருவர் தான் ஒரு வரலாற்றுநாயகன் என்றுதான் நினைக்கிறார். வரலாறெனும் பெரும் பெருக்கில் தான் ஒரு துளியினும் துளி என அவன் உணர்வதில்லை. வரலாறென்பது ஒரு மாபெரும் மந்தை என்றும் தான் அதன் தலைவன் என்றும் நினைக்கிறான்.
எந்தத் தீவிர செயல்பாடு கொண்ட அமைப்பிலும் அதன் பெருங்கவர்ச்சி என்பது அங்குள்ள தோழமைதான். வேறெங்கும் இல்லாத அளவுக்கு இறுக்கமான நட்புகள் அமைகின்றன. இரவுபகலாக நாம் ஒருவரிடம் பேசுகிறோம் என்றால் ஒத்த கருத்துள்ள ஓர் அமைப்பிலுள்ள நண்பர்களிடம் தான். மேலும் பேச நட்புகொள்ள விழையும் பருவத்தில் அதற்குள் நுழைகிறோம்.
எதிரிகளை உருவாக்காத கருத்தியல் என எதுவுமில்லை. காழ்ப்பை அடிப்படையாகக் கொள்ளாமல் எந்தக் கருத்தியலும் செயல்பட முடியாது. கருத்தியல் நம்பிக்கை கொண்ட ஒருவர், அது எந்த கருத்தியலாக இருந்தாலும், எதிர்மறைப்பண்பு கொண்டவராக உளம் கசந்தவராக மட்டுமே இருப்பார். கருத்தியல் நீண்டகால அளவில் மெல்ல மெல்ல நிறம் மங்குகிறது. அதன் நடைமுறைச் சிக்கல்களில் லட்சியவாதச் சாயங்கள் வெளுக்கின்றன. நீண்ட காலம் ஒரு கருத்தியலில் வாழ மனிதர்களால் இயலாது.
மனித மனம் தருக்கங்களினூடாக இயங்கவில்லை; பழக்கங்களினூடாகவும், ஆழ்மனதுடன் சம்பந்தப்பட்ட பலவிதமான குறியீட்டியக்கங்களினூடாகவும்தான் இயங்குகிறது
மனம் என்பது நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கித் தாவும் ஒரு தொடர்சலனம். அதற்கு இறந்தகாலத்தின் ஒவ்வொரு விஷயமும் தூரம். இன்றும் நாளையும் ஒரு விஷயம் எப்படிப் பயன்படும் என்பதில் மட்டும்தான் அதற்கு அக்கறை. அது இயற்கைதான். இறந்த காலத்தை உதறாது வாழ்க்கை இயங்க முடியாது. இறந்தகாலம் அத்தனை பிரம்மாண்டமானது.
உலகில் இதுவரை நடந்த அத்தனை அரசியல் சம்பவங்களும் ஆண்களின் உலகில் நடந்து முடிந்த அலைகள்.
ராணுவம்தான் உலகில் இன்றுவரை அரசியலாக இருந்துள்ளது. போரிடும் ராணுவம், பேசும் ராணுவம். அங்கு நுழையும் பெண்கள் தங்களையும் ஆண்களாக மாற்றிக் கொண்டவர்கள். ஆண்களின் சீருடைகளை அணிந்த பெண்சிப்பாய்கள். ஆண்குரலில் அடித்தொண்டையில் சொற்பெருக்காற்றும் மக்கள் பிரதிநிதிகள். அன்னையராக, தங்கள் இயல்பான மென்மையுடனும் கருணையுடனும், அவர்கள் அங்கு நுழைய முடிவதில்லை. பெண்களால் நடத்தப்பட்டால் புரட்சிகள் இவ்வாறு ரத்தவாடை வீசியிருக்குமா? கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருக்காது. ஆண்களின் அமைப்புகளும் அரசுகளும் ஆண்களைப் போலவே இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் இரும்புக் கோட்டைகள். உள்ளே நெளிந்து உருகும் லாவா.
...more
வாழ்வின் அடுத்த கணம் கடவுளின் கையில் இருப்பதாக எண்ணிய பழங்குடிகளுக்குத்தான் சூதாட்டம் ஓர் ஒழுக்கக் கேடு. கடவுளின் நியதியை சீண்டிப் பார்க்கும் அதிகப் பிரசங்கித்தனம். கடவுள் பழிவாங்கிவிடுவார் என்று அவர்கள் அஞ்சினர். இதுவோ ஒவ்வொரு அறிவுத்துறையும் தருக்கங்களினூடாக முடிவின்மையின் சாத்தியங்களைக் கலைத்துக் கலைத்து அடுக்குவதாக மாறி விட்டிருக்கும் காலம். தோழர், இன்று சூதாட்டமே நவீன வாழ்வின் மிகப் பொருத்தமான குறியீடு. சூதாட்டமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. அரசியல், உறவுகள், பொருளாதாரம் எல்லாமே சூதாட்டங்கள். வாளும் வாளும் வேலும் வேலும் மோதும் தர்மயுத்தங்களின் காலம் கடந்துவிட்டது. இந்த ஆட்டத்திற்கு
...more
தப்பு சரின்னு சொல்லறது ரொம்ப எளிய விஷயம். சரின்னு பட்டதை சொல்றதுக்காகத் தன் கையிலிருக்கிற ஒண்ணை இழக்கிறது லேசான காரியம் இல்லை.”
ஊழல் இல்லாத தொழில் இல்லை. அதுக்கெதிரா இன்னைக்குத் தேதிவரை தொழிலாளி போராடினதுமில்லை.
“அப்ப போராட்டம் இல்லை, சமரசம்தான்னு சொல்வீங்க” என்றான் அருணாசலம். “ரெண்டுக்கும் நடுவில இருக்கு பேச்சுவார்த்தை. உலகத்தில் போர் குறைஞ்சிட்டு வருது. விஞ்ஞான வளர்ச்சியால எண்ணிக்கைக்கும் போர் வெற்றிக்கும் சம்பந்தமில்லைன்னு ஆச்சு. பேரழிவு இல்லாம இனிமே போர் சாத்தியமில்லை. போரில் வெற்றியும் தோல்வியும்கூட இல்லை. அழிவு மட்டும்தான். இன்னைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன தேவைன்னு தெளிவாத் தெரியும். எல்லாரும் இந்த பூமியிலதான் வாழ்ந்தாகணும்னும் தெரியும். அதனால பேச்சுவார்த்தை தவிர வேறு வழியே இல்லை. இன்னைக்கு ஒவ்வொரு துறையிலயும் ஒவ்வொரு விஷயத்தையும் பேச்சுவார்த்தைதான்
...more
ஒவ்வொரு போராட்டமும் சமரசத்திற்காக. ஒவ்வொரு சமரசமும் போராட்டத்திற்காக.”
இப்ப நாம பேச்சு வார்த்தையோட காலகட்டத்திற்கு வந்தாச்சு. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்து நாற்பது வருஷமாச்சு. இன்னும் நமக்கு ஜனநாயகம்னா என்னான்னு புரியலை. ஜனநாயகம் வழியா சர்வாதிகாரம்னு பொட்டைக்கனவு கண்டுட்டு இருக்கோம். ஸ்டாலினும் மாவோவும் நம்மை ஜனநாயகத்துக்குள்ள வர அனுமதிக்கலை. நமக்குத் தேர்தல் உண்டு. ஆனா சர்வாதிகாரிதான் மறுபடியும் மறுபடியும் ஜெயிச்சு வருவார்.
“மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்ரவர்த்திகளோட அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய
...more
ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சினை வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும் அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக் கூடிய பல்லாயிரம், ஏன் பலகோடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும்தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக் கூடிய பல நூறு தளங்கள் மீதி
...more
உங்க பேச்சுவார்த்தை மேஜை உண்டாகிறதுக்கு எத்தனை கோடி பேர் செத்திருக்காங்க. எத்தனை பேர் கண்ணீரும் ரத்தமும் சிந்தி மட்கிப் போயிருக்காங்க. அவங்க செத்தது சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத ஒரு புதிய உலகம் பிறக்கணும்கிறதுக்காக. அவங்களோட வாழ்க்கைய காரணமில்லாத சித்ரவதையா மாத்தின அநீதிகரமான சமூக அமைப்பு அவங்க பிள்ளைங்க காலத்திலயாவது இல்லாம ஆகணும்கிறதுக்காக. இன்னைக்கு சுரண்டல் சக்திகளுக்ககிட்ட பேரம் பேச ஒரு மேஜையை உருவாக்கி வச்சிட்டு இதுதான் மார்க்ஸிசத்துக்க உச்சகட்ட சாதனைன்னு சொன்னோம்னா அவங்க பண்ணின தியாகங்களுக்கு என்ன அர்த்தம்?
இப்ப பூமியில் வாழுற ஒவ்வொரு மனிதனும் எத்தனை பலிகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. குடும்பம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு, தேசம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு, சட்டம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு எத்தனை கோடிப்பேர் வரலாற்றிலே சாக வேண்டியிருந்தது! ரோம சாம்ராஜ்யம் மட்டும் எத்தனை கோடி மனித உயிர்களை சாப்பிட்டிருக்கும். இஸ்லாம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க ரத்த வெள்ளத்தை உண்டு பண்ணியிருக்கு. கிறிஸ்தவம் நிலைபெற எத்தனை கோடிப் பலிகளும் தியாகங்களும் தேவையாகியிருக்கு. நம்பசனாதனதர்மம் ‘போர் புரிக பார்த்தா’ அப்டீன்னு மூவாயிரம் வருஷமா அறைகூவின தர்மம். ஆனா மனித நாகரிக வரலாற்றில்
...more
நிறுவப்பட்ட எந்த ஒரு சித்தாந்தமும் அடுத்த கணம் முதல் உயிர்பலி கேட்கிற புராதன போர்த்தேவதையா ஆயிடுது. மனிதாபிமானத்துக்காக, உலகளாவிய அன்புக்காக, முடிவில்லாத கருணைக்காகக்கூட உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடந்து மனிதக் கூட்டங்கள் செத்து அழிஞ்சிருக்கு.
மனுஷ மனசில அகங்கார வெஷம் ஏறிப்போனா பிறகு மருந்து இல்ல. தானா பழுத்து எறங்கித் தணியணும் கேட்டுதா?”
மனுஷனுக்கு அறிவுவேணும், ஆனா கூடிப் போயிடப்பிடாதுண்ணார். சத்தியமான வார்த்தை சகாவேண்ணு சொல்லிட்டு வந்தேன்.
சரித்திரம் முழுக்க ஜனங்கள் முட்டாக் கும்பலாத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்குத் தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்குத் தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமாத்தான் இருப்பான். கூட்டாச் சேந்தா அறிவுகெட்ட மந்தையா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்குப் போகிற மந்தை. கசாப்புக் கடைக்காரன் பச்சையிலை வச்சு கூப்பிட்டா அந்தப்பக்கமாட்டு போகிற மந்தை, ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியன்தான் அவங்களை வழி
...more
“உயிரோடு இருக்கிறவங்களுக்கு இறந்து போனவங்களுக்க கிட்ட ஒரு கடன் இருக்கு. அவங்க செய்த தியாகங்கள் மேலதான் நம்ம வாழ்க்கை. அவங்க விதைச்சதை நாம அறுவடை செய்றோம்.”
தத்துவார்த்தமான கருத்துக்கு எப்பவும் ஒரு அபூர்வத் தன்மை இருக்கு. ரொம்ப நல்லா தெரிஞ்ச விஷயமா இருந்தாக்கூட தத்துவார்த்தமா சொல்றப்ப அபூர்வத் தன்மை வந்திடுது. அதைச் சொல்ற முறைல வரக்கூடிய ஆச்சரியத்த சொல்லல்ல. அந்தக் கருத்து சட்டுண்ணு ஒரு குறிப்பிட்ட விதத்தில மொத்த வாழ்க்கையையும் அளந்து வகுத்துடறதனால வாற அபூர்வத்தன்மை அது. இப்ப உதாரணமா சார்த்தோட ஒரு வரி இருக்கே. ரெண்டு மனுஷங்களுக்கு மத்தியில இருக்கிற உறவு ஒத்துமையால இல்ல மோதலினாலத்தான் தீர்மானிக்கப்படுதுண்ணு. நான் அதை ஏத்துக்கிடலை. ஆனா அதைக் கேட்ட உடனே வாழ்க்கை மளமளன்னு ஒரு குறிப்பிட்ட வரிசையில வந்து நிண்ணு அணி வகுக்க ஆரம்பிச்சிடுது.”
“தத்துவம் தருக்க சாத்தியங்களைக் கோருது. இலக்கியம் கற்பனைச் சாத்தியங்களைக் கோருது. ரெண்டயும் ஒரு நாவல் அடையணும். அதுக்கு நாவல் படிமத்தன்மைய அடையணும்.
அது நிலபிரபுத்துவகால மனோபாவத்தால உருவாறது. நிலப்பிரபுத்துவத்தில எப்பவுமே மூத்தார் வழிபாடு உண்டு. நீத்தார் வழிபாடோட தொடர்ச்சி அது,”
“குலமுறை, ஆச்சாரம் எல்லாம் சேந்து உருவாகிற ஒரு சமூக அதிகாரம் அது. அதில ஒரு ஒழுங்கு முறையும் உண்டு. அதே சடங்கும் ஆசாரமும் அவனுக்கு சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிச்சிருக்கு, அதை அவன் மீற முடியாது. ஆனா பாசிசமும், நாசிசமும், ஸ்டாலினிசமும் சுத்தமா வேறவகையான அடிப்படை உள்ள விஷயங்கள். தொழிற்புரட்சி இல்லேன்னா இந்த வகையான பரிபூர்ணமான சர்வாதிகாரம் வந்திருக்காது. பழையகால மன்னர்கள் மிஞ்சிப்போனா கடவுளோட பிரதிநிதிகள்தான். கடவுளுக்குக் கட்டுப்பட்டுதான் அவங்க செயல்பட முடியும், கடவுள்னா ஒரு மதிப்பீடு அல்லது மதிப்பீடுகளோட தொகுப்புதானே? ஆனா நவீன சர்வாதிகாரிங்கிறவன் அவனே கடவுள். சமூகத்தோட மையமே
...more
“சமூகத்தை அதனுடைய ஒண்ணோ ரெண்டோ நூறோ ஆயிரமோ விதிகளை வச்சு ஒரு நாளைக்கும் முழுசா புரிஞ்சுகிட முடியாது. நமக்குத் தெரிஞ்சதும் தெரியாததும், தெரிஞ்சுக்கவே முடியாததுமான பல லட்சம் கோடி விதிகளினால அது உருவாகி இயங்கிட்டிருக்கு. அத நாம ஆராய்ச்சி பண்றப்ப நம்ம தேவை எதுவோ அதைத்தான் தேடறோம். நம்ம கற்பனை எவ்வளவு தூரம் விரியுமோ அதுக்குள்ளதான் ஊகங்களை உருவாக்கிக்கறோம். அந்த ஊகங்களில சிலதுதான் விதிமுறையா நிரூபிக்கப்படுது. இதனால் எப்பவுமே நாம பாக்கிறது ஒரு சில பக்கங்களை மட்டும்தான். அதனடிப்படையில நாம சமூகத்தை மாத்தியமைக்கப் போனா அது அழிவைத்தான் தரும். அந்த அழிவுதான் சர்வாதிகார நாடுகளில் உண்டான அழிவு ஒரு நாடுகூட
...more
“ஆனா, சர்வாதிகாரம் செயல்படற முறை இது இல்லை. அது சமூகத்துக்க மேல ஏறி உக்காந்திருக்கு. நினைச்சா சமூகத்தை நிர்மூலம் பண்ற சக்தி அதன் கையில இருக்கு. சமூகம் இப்பிடி இருக்கணும்னு அது ஒரு திட்டத்தைப் போடுது. அதுக்கேற்ப சமூகத்தை அழிச்சு மறுபடியும் உருவாக்குது. அழிக்கத்தான் முடியும். மறுபடியும் உருவாக்க முடியல்லை. இதுதான் உலக வரலாற்றில் மறுபடியும் மறுபடியும் நிரூபணமாகியிருக்கு. ஒரு டாக்டர் தன்னோட நோயாளியோட உடம்பில் உறுப்புகள் வேற மாதிரி இணைஞ்சிருக்கலாம்னு நினைச்சு வெட்டி வெட்டி ஒட்ட ஆரம்பிச்சா என்ன ஆகும்? சமூகங்கிறது ஒரு யந்திரமில்லை. அது ஒரு உயிர். அதை தொழிற் புரட்சியோட வாரிசுகள் இன்னும்
...more
அகங்காரம் உள்ள அறிஞன்தான் உலகத்தில பெரிய முட்டாள். அவனாலத் தான் மத்தவங்களால நினைச்சுப் பாக்க முடியாத குரூரங்களைப் பண்ண முடியும். ஏன்னா ஒவ்வொரு செயலையும் மனுஷன் தனக்குத்தானே நியாயப்படுத்தியாகணும். அறிஞன் எதையும் தருக்கபூர்வமா, நியாயமானதாக மாத்திக்கிடுவான். பேரறிஞன் பூமியையே பெரும் பாவத்தில மூழ்கடிச்சிடுவான். ஸ்டாலின், ஹிட்லர் எல்லாருமே பெரிய அறிஞர்கள்தான்.”
“கிறிஸ்து அறிஞன் இல்லை. அவன் பெரிய முட்டாள். பிறர் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விட்டான். தன் இயலாமைக்காகக் கதறி அழுதான். ஒண்ணையும் நியாயப்படுத்திக்க முடியலை அவனால். அதனால் எல்லாமே சூடாகி சிவந்து கணகணன்னு கொதிக்க ஆரம்பிச்சிட்டுது. எங்கயும் நிக்க முடியலை. எதையும் தொட முடியலை. முப்பது வயசுக்கு மேலே இந்த உலகில வாழ முடியலை. சிலுவைல தன்னை பலி குடுத்தப்பதான் அவனுக்கு நிறைவு கிடைச்சது. தருக்க நியாயங்கள் இல்லாததனால அவன் இதயம் திறந்து கிடந்தது. முள்ளும் கல்லும் பட்டு ரத்தம் வடிஞ்சது அதில. அந்த ரத்தம்தான் இந்தப் பூமியை கருணையாலயும் அன்பாலயும் கழுவியது. ஏசு கிறிஸ்துவின் ரத்தம்தான் சகல பாவங்களையும்
...more
தனிப்பட்ட துவேஷம் ஏதும் இருந்திருக்கும்னு எனக்குத் தோணல்ல. அவங்களுக்குத் தேவை அதிகாரம். அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சி வழியாகத்தான் உருவாகுது. எளிதாக ஒருமுகப்படுத்தக்கூடிய உணர்ச்சி வெறுப்புதான். அதனால் வெறுப்பைத் திட்டமிட்டு வளர்த்தாங்க. அந்த வெறுப்புக்குப் பலி குடுத்தாங்க. எல்லாம் விஞ்ஞானபூர்வமா கச்சிதமா நடந்தது. ஜனங்களை வெறிகொள்ளச் செய்யறது மாதிரி மேடையில பேசறதும் சரி, அப்பாவிகளை கொன்னு குவிக்கிறதும் சரி, கச்சிதமா அழகா செய்யப்பட்டது. ஹிட்லருக்கும் தைமூருக்கும் என்ன வித்தியாசம்? ஹிட்லர் துல்லியமா திட்டம் போடறான். எப்படி மேடையை அமைக்கிறது, எப்படி அதில ஒளி விழணும், ஒலிபெருக்கி எப்பிடி
...more
இந்த எந்திரப் புத்திதான் நவீன சர்வாதிகாரங்களோட ஆதார தத்துவம். அது தொழிற்புரட்சியோட விளைவு. அரசாங்கம் என்கிறது ஒரு சமூகத்தோட இதயம் மாதிரி. உடலோட ரத்த ஓட்டத்தை நிர்வாகம் பண்றது அது. அதுக்கு ஓய்வு கிடையாது. உடம்பிலேயே ரொம்ப நெகிழ்வான உறுப்பு அதுதான். அது திடீர்னு இறுகி ஒரு யந்திரமா ஆயிட்டா என்ன ஆகும்?”
“வன்முறை இல்லாம அரசாங்கம் இல்லை. ஆனா ஒரு அரசு எந்த அளவுக்குக் குறைவா வன்முறையைப் பிரயோகிக்கிறதோ அந்த அளவு அது நல்ல அரசுன்னு நான் சொல்வேன். நேரடி வன்முறை குறையக் குறைய கருத்தியல் வன்முறை அதிகரிக்கும். உளவியல் வன்முறை அதிகரிக்கும். அது ரெண்டும்தான் ஒரு நாகரிக சமூகத்திற்கு அடையாளம்,”
உண்மை; ஆனா கட்சிக்கு எதிரானதுன்னு படுது. அதை கட்சி ஏத்துக்கிடுமா? அதை அறிவுபூர்வமா பேசி மறைக்க முடியும்னா அந்த வாய்ப்பைக் கட்சி தவற விடுமா? இங்கதான் காந்திக்கும் உங்களுக்கும் வித்தியாசம். காந்தி அசட்டுத்தனம்னு பிறருக்கு தோணற அளவுக்கு நெஞ்சத் திறந்துட்டு அந்த உண்மையைத் தேடிப் போவார். அதோட அவர் அழிஞ்சாலும் சரின்னு போவார். ஆனா உண்மை எவரையும் அழிச்சதில்லை. பொய் எதையும் வாழவிட்டதுமில்லை. பொய், அதைச் சொன்னவங்க எத்தனை மகத்தான மனிதாபிமானிகளா இருந்தாலும், எத்தனை பெரிய மேதைகளா இருந்தாலும், எதையும் உருவாக்காதுங்கிறதுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு வாழும் உதாரணம்.”
அதிகார வேட்டையின் நியதிகள் எங்கும் எப்போதும் ஒன்றுதான்.
அதிகாரம் கவர்ந்திழுக்கிறது. முடிவற்ற சவால்களுடன் வாழ்வை உத்வேகமிக்க விளையாட்டாக ஆக்குகிறது. தன்னம்பிக்கையையும் முழுமையுணர்வையும் தருகிறது. கூடவே இந்த இழப்புணர்வு, குற்ற உணர்வு.
“பகைய வளர்த்துட்டா எல்லாம் செய்ய முடியும். குழந்தைகளைக் கொல்ல முடியும், கிழவங்களைக் கொல்ல முடியும்... மனுஷன் பகை வழியா எங்க வேணும்னாலும் போக முடியும்.”
“இலட்சியவாதம் இன்னைக்குப் பெரிய பழஞ்சுமை தோழர். அது உள்ளவங்களை படிப்படியா எல்லா அரசியல்கட்சியும் வெளியேத்திட்டிருக்கு. இது யதார்த்தவாதத்தின் நூற்றாண்டு. இப்ப தியாகம் பண்ற தொழிலாளி இல்லை. கணக்குப் பாத்து வாங்குற தொழிலாளிதான் இருக்கான்.”
எத்தனையோ நூற்றாண்டுகளா மனிதகுலம் இலட்சியங்களைப்பத்திப் பேசிட்டிருக்கு. இந்த இலட்சியவாதம்னா தன்னளவில என்னன்னு எப்பவாவது பேசியிருக்கமா? பிளேட்டோ பேசியிருக்கார். நீட்சே பேசியிருக்கார். அது யார் காதிலும் விழலை. விழுந்தவங்க அதையும் புதுவித இலட்சியவாதமா வழிபட ஆரம்பிச்சாங்க. ஆயிரம் ரெண்டாயிரம் வருஷமா இலட்சியம் தியாகம்னு மனிதக் கூட்டங்களைத் தத்துவஞானிகள் பலிபீடத்துக்கு அனுப்பிட்டிருக்காங்க. இப்ப மானுட குலம் ஒரு முட்டுச் சந்துக்கு வந்தாச்சு. நம்ம காலத்தில உள்ள ஆகப் பெரிய இலட்சியவாதம்னா மார்க்ஸியம்தான். அதும் இப்ப தோத்துப் போச்சு.
மனுஷ குலத்தைப் பெரிய கேள்விகள் முன்னாடி நிக்கவிட்டுட்டு அது உதிர்ந்து போச்சு.”
மார்க்ஸிசத்தில மூணு அடிப்படைகள் உண்டு. ஒண்ணு இலட்சியவாதம், மானுட குலத்தின் எதிர்காலம் பத்தின பெரும் கனவு. அது இப்ப இல்லை. உண்டுண்ணு சொல்றவன் மூடன், இல்லை அயோக்கியன், இல்லாட்டி அரசியல் நிபுணன் - என்னை மாதிரி. இன்னொண்ணு அதோட தத்துவக் கட்டுமானம்: அதாவது முரண்நிலை இயங்கியல். ஐன்ஸ்டீனோட சார்புநிலைத் தத்துவமும் இரட்டை இருப்புத் தத்துவமும் வந்தபிறகு அதோட அடிப்படை இளகிட்டிருக்கு. உயர்தத்துவ விவாதங்களில இப்ப அது செல்லுபடியாகிறதில்லை. நடைமுறை கோட்பாடுகளில் இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டிருக்கும். மூணாவது அம்சம் அதனோட அரசியல் கோட்பாடும் நடைமுறையும். வர்க்கப்போர் இப்ப குறியீட்டுரீதியான போரா ஆயிடுச்சி.
ஒரு மேலான விஷயத்துக்காக தியாகம் பண்றது தான் லட்சியவாதம்.” “இப்ப நீங்க சொன்னதுல ரெண்டு பார்வைகள் அடங்கியிருக்கு. ஒண்ணு இப்ப இருக்கிற வாழ்க்கை சரியில்லை, அல்லது போதலை. அதை மாத்தணும்கிற கனவு முதல் அம்சம். அதுதான் லட்சியம். ரெண்டாவது விஷயம் தியாகம். என்னையும் உள்ளடக்கின இந்த வாழ்க்கையை மாத்தியமைக்க நான் முயற்சி பண்றேன். ஆனா அதன் பலன்களை நான் அனுபவிக்க முடியாது. என்னோட அடுத்த தலைமுறைக்கு அதைக் குடுத்திட்டுப் போறேன். இதான் தியாகத்துக்கு அடிப்படை மனோபாவம், இல்லையா?” “ஆமா...” “வாழ்க்கையை எதன் அடிப்படைல மாத்தியமைக்கணும்னு நினைக்கிறோம்?” “வாழ்க்கையை பரிசீலிச்சுப்பாத்து... அதுக்க போதாமைகளை உணர்ந்து.”
...more
“மதங்களுக்கு இந்த உலகை இந்த வாழ்வை, நிராகரிச்சாகணும் தோழர். அப்பதான் புனிதம்னு ஒண்ணை உருவாக்க முடியும். இந்த உலகப்பசுவைவிட உசத்தியான பசு காமதேனு. இந்த உலகத்து மரத்தவிட உசத்தியானது கற்பக விருட்சம். இந்த உலகத்தைவிட உசத்தியானது சொர்க்கம். இப்பிடியே இந்த உலகத்தைப் போதாததா, குறைபாடு நிறைஞ்சதா கற்பிச்சிட்டாங்க மதவாதிகள். பரத்தை நிலைநாட்டறதுக்காக இகத்தை நிராகரிச்சிட்டாங்க. இந்த உலகத்தையும் உலக சுகங்களையும் நிந்திக்காத மதம் இல்லை. ஆனா பூமிமீது மனுஷனுக்கு ஆதியான ஈர்ப்பு உண்டு. அதன் மடியில் அவன் வாழ்க்கை சந்தோஷமானதுதான். எல்லாப் பழங்குடிகளும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. பரத்துக்காக இகத்தை
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஒருத்தனுக்குத் தன் வாழ்க்கை தியாகத்தில் பூரணமடையுதுண்ணு பட்டா தாராளமா செய்யலாம். ஆனா இனிமே அது ஒரு நிறுவனம் இல்லை. செல்லுபடியாகிற நாணயமும் இல்லை, ஒரு சமூகமே தியாகத்தில் வாழறது இனிமே சாத்தியம் இல்லை. ஏன்னா இன்னைக்கு நாளைங்கிறது சுத்தமா புரிஞ்சுக்க முடியாத ஒண்ணா, கற்பனைகூட செய்ய முடியாத ஒண்ணா மாறிட்டுது. நாளைக்கு உலகம் அழியலாம். பிரபஞ்சம், அழியலாம். இண்ணைக்குள்ள எல்லாமே நாளைக்கு மாறிடலாம். நவீன விஞ்ஞானம் மனுஷனுக்குக் குடுக்கிற முதல் பாடம் இது. இன்றுதான் நிஜம். இன்றுதான் ஒரே சாத்தியம், போகத்துமேல இருக்கிற குற்ற உணர்வை இதனால படிப்படியா மனுஷன் இழந்துட்டு வாறான். வேணும் இன்னும் வேணும்னு
...more
எந்த ஒரு சமூகமும், காலத்தை முழுக்க நிராகரிக்கிறதில்லை. அப்படியே ஏத்துக்கிறதுமில்லை. தன் நிகழ்காலத் தேவைக்காக வரலாற்றை வேகவச்சு, உலர்த்தி தூளாக்கி தனித்தனி பாட்டில்களில் அடைச்சு, பத்திரமா பாதுகாக்குது. வரலாறு சமூகத்துக்குக் குறியீடுகளின் களஞ்சியம்;
யந்திரங்கள். திட்டவட்டமான உறுதியான பொருட்கள். அதாவது மனுஷ தர்க்கத்துக்குக் கட்டுப்பட்டவை. அதனால இன்னும் திட்டவட்டமான, இன்னும் தர்க்க பூர்வமான ஒரு மதம் மனுஷனுக்குத் தேவைப்பட்டது. தேவையிலிருந்து அதுக்கான தேவகுமாரன் வந்தார். பூர்ஷ்வாங்கற சாத்தான், உடைமைங்கிற ஆதிபாபம், புரட்சிங்கிற நியாயத்தீர்ப்பு நாள் எல்லாம் வந்தது. புதிய பைபிள்... புதிய அப்போஸ்தலர்கள்... அப்புறம் நடந்ததெல்லாம் வரலாற்றில எப்பவும் நடக்கிறதுதான். கிறிஸ்துவுக்கு பீட்டர், நபிக்கு உமர், மார்க்ஸுக்கு லெனின். பிறகு தேவதூதன் உண்மையில் என்று சொன்னார்னு நான் விளக்குவேன்; நீ அதைக் கேளுன்னு சொல்ற உரையாசிரியங்க வந்தாங்க. மார்க்ஸிய சரி அத்,
...more
எந்த மதமும் வாழ்க்கையைவிட மேலான ஒண்ணுக்காக வாழ்க்கையைத் துறக்கறதுக்குதான் அறைகூவுது. எல்லா மதமும் பலியாடுகளை ரத்தசாட்சிகளை நம்பித்தான் இருக்கு. வரலாற்றில் மிக அதிகமா பலிகளை வாங்கின மதம் இஸ்லாம். அடுத்தபடியா நாம. சோவியத் நாட்டுல மட்டும் இரண்டரை கோடி பேர். அதில் ஒரு கோடிப் பேர் தியாகிகள். புனித பலிகள். மீதிப்பேர் பலியாடுகள். இப்பிடி உலகம் முழுக்க, அவங்களுக்கெல்லாம் தியாகத்தோட மகத்துவத்தைப்பத்தி சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியமே இருக்கலை. ஏற்கனவே கிறிஸ்தவம் சொல்லிக் குடுத்திருந்தது. அங்க போய் அப்பிடி சாகிறதைவிட இங்க போய் இப்படி சாகிறதுதான் இன்னமும் மகத்துவம்னு மார்க்ஸியம் சொல்லிக் குடுத்தது. ஒரு
...more
பொதுமக்களுக்கு அறிவாளிகளையல்ல, வீரர்களையே வேண்டும்.
பொதுமக்களுக்கு அறிவாளிகள்மீது பயம். தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக் கூறுகிறான் என்ற பயம். சில சமயம் தாழ்வுணர்ச்சியாகவும், சில சமயம் சந்தேகமாகவும் சில சமயம் ஏளனமாகவும், சிலசமயம் மரியாதையாகவும் வெளிப்படுவது இந்த பயம்தான்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)