Kindle Notes & Highlights
by
Jeyamohan
Read between
January 17 - January 20, 2025
எந்திரத்தனமாக இயங்கியலை அனைத்திற்கும் ஆதாரமாகக் கண்ட மார்க்ஸியர் இப்போது புற எல்லைகளுக்கு நகர்த்தப்பட்டு விட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்நிலைவாதத்திற்குப் பிறகு மெய்யியல் ரீதியாக மார்க்ஸியம் எதிர்கொண்ட சவால்கள் பற்பல. இயங்கியல் பொருள் முதல்வாதம் பிரபஞ்சவியல் ரீதியாக செல்லுபடியாகக் கூடியது அல்ல என்று, மெலுகின்களின் கழைக்கூத்தாட்டங்களை மீறி, நவீன பௌதிகம் நிறுவிவிட்டது. இன்று பிரபஞ்சவியல் தரிசனம் ஏதுமின்றி, மண்ணில் ஒரு எளிய எந்திரமாகக் கைவிடப்பட்டுக் கிடக்கிறது செவ்வியல் மார்க்ஸியம். மண்ணில் வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதர்களுக்கு பிரபஞ்சவியல் ரீதியான அகத்தொடர்பு தேவையாக ஆகிறது.
...more
பிரபஞ்சம் ஓர் அறியமுடியாமை. அனுபவத்திற்கு எட்டிய பிரபஞ்சத்தினூடாக நாம் கற்பனையை விரித்துப் பிரபஞ்சத்தை அளக்க முயல்கையில் உருவாவது குறியீட்டு மொழி. இவ்வாறு கற்பனை மூலம் இகவாழ்வை பிரபஞ்ச நியதியுடன் இணைப்பதை செவ்வியல் மார்க்ஸியம் ஒருவகை அதிகார / சுரண்டல் உத்தியாக மட்டும் கண்டு வந்துள்ளது. ஆனால் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் மனிதனுக்கு ஒரு பிரபஞ்ச நியாயிகரணம் தேவைப்படுகிறது. மிகமிகப் பூர்வநிலைகளில் உள்ள பழங்குடிகளுக்குக்கூட இவ்வாறு தங்கள் ஒவ்வொரு வாழ்க்கைச் செயலையும் பிரபஞ்ச சலனத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்குரிய ஐதீகங்களும் சடங்குகளும் அவர்களுக்குத் தேவையாகின்றன.
...more
மார்க்ஸியர்களின் அறம் என்ன என்ற அடிப்படை வினா உங்கள் உரையாடலின் அடியோட்டமாக எப்போதும் உள்ளது. மார்க்ஸியர்கள் இந்த உலகத்தை ஒரு பெரும் சுரண்டல் களமாகக் கருதுகிறார்கள். இங்குள்ள மானுடவாழ்வு துக்கம் நிரம்பியதாக இருப்பதற்கு இதுவே காரணம். யேசு இவ்வுலகு பாபத்தின் துக்கத்தால் நிரம்பியுள்ளது என்றார். புத்தர் அறியாமையும் ஆசையும் விளைவிக்கும் துக்கத்தால் நிரம்பியுள்ளது என்றார். மார்க்ஸியம் அத்தரிசனங்களின் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய, பரிணாமவாதத்திற்குப் பிந்தைய நீட்சியே என்று படுகிறது.
சித்தாந்தங்கள் என்பவை கனவுகாணும் திறனை இழந்துவிட்ட மனிதர்கள் அதை தருக்கத்தால் ஈடுகட்டிவிட முயலும்போது உருவாகக் கூடியவை தாமா? அரை உண்மையை இழுத்து நீட்டி முழு உண்மையாகக் காட்டும் அறிவு ஜாலங்களா அவை?
கருத்தியலின் ஒரு தரப்பை பிறர்மீது வைத்து வெற்றிபெறும் பொருட்டு மட்டும் வன்முறை கையாளப்படுவதில்லை. அது ஓர் இறுதிச் செயல்பாடு மட்டுமே. முதலில் கருத்தியலின் தன் தரப்பை தனக்கே நிறுவிக்கொள்வதற்கு வன்முறை அவசியமாகிறது. ஏனெனில் சகஜநிலையில் எந்த மனித மனமும் எந்தக் கருத்தையும் பூரணமாக நம்பி ஏற்பதில்லை. மனித மனமெனும் பிரம்மாண்டமான விவாதக்களத்தில் வெறும் ஒரு தரப்பாக அது ஆகிவிடுகிறது. வலுவான நம்பிக்கையாக ஆகாதபோது எந்தக் கருத்தும் ஒரு பௌதிக சக்தியாக ஆவதில்லை. மரணத்தின் கீழ் மனித மனம் முனை கொள்ளும்போது அம்முனை அக்கருத்தாக இருக்கச் செய்ய ஆயுதத்தால் முடியும். ஆகவே ஒருவகையில் ஆயுதம் என்பது தூலம்கொண்ட
...more
இந்நூற்றாண்டின் நடைமுறை வாதச் சித்தாந்தம் ஒன்று மதங்களுடன் என்ன உறவைக் கொள்ளமுடியும் என்றும் கேட்டிருந்தீர்கள். இரண்டு நுட்பமான பிழைகளைச் செய்கிறீர்கள். உங்களுக்கு மதத்துடன் வெளிப்படையான புறவயமான உறவுதான் இல்லை. உங்களுக்கு திடமான ஒழுக்கவியலும் (எதிக்ஸ்) மதிப்பீட்டியலும் (ஆக்ஸியாலஜி) இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மெய்யியலும் உண்டு. அம்மெய் யியலின் உணர்வுரீதியான சாரம் மதங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்ததேயாகும். அம்மெய்யியலை உங்கள் அந்தரங்க மதங்களுடன் மொழியாடல் சார்ந்து வெளிப்படுத்துவதனால்தான் நேரடியான உரையாடல் உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கிறது. உன்னதம், சாரம், அறம், ஆன்மா என்று நீங்கள்
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பகுத்தறிவு (அதாவது பௌதிக விதிகள் சார்ந்த புறவய உலகப்பார்வை) எங்கு தொடங்குகிறதோ அதுவே வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று அது கருதியது. அதற்கு முந்தைய காலங்களை ஒட்டுமொத்தமாக ‘வரலாற்றுக்கு முந்தைய கால கட்டம்’ என்று உருவகித்தது. யோசித்துப் பார்த்தால் மனிதகுலம் புதை பொருளாய்வில் (வரலாற்றாய்விலேயேகூட) எப்போதும் பகுத்தறிவின் தடயங்களேயே. தேடி வந்துள்ளது என்பது தெரியவரும். பகுத்தறிவையும் கலாச்சாரத்தையும் ஒன்றெனக் கருதிய ஒரு காலகட்டத்தின் சிருஷ்டியே மார்க்ஸியம். லூயிஸ் மார்கனின் மானுடவியலின் ஆதாரவிதியே பகுத்தறிவின் அளவுகோலை வைத்து மானுட இனங்களைத் தரப்படுத்துவதுதான். அந்த அணுகுமுறையின் தொடர்ச்சியே
...more
கோசாம்பியின் ‘ஐதீகமும் உண்மையும்’ நூலைப் படிக்கும்போது எழும் அந்த ஐயம் லெவிஸ்டராஸின் ‘பண்படா மனம்’ நூலைப் படிக்கும்போதும் எழுகிறது. இந்த அறிஞர்கள் எந்த அறிவுத் தளத்திலிருந்து பேசுகிறார்களோ அவை மானுடவியலும், வரலாறும், அரசியல் சித்தாந்தமும் அறிவொளிக் காலப் பகுத்தறிவுவாதத்தின் விளைவாக உருவானவை. அவற்றின் அடிப்படையான பகுப்பு - தொகுப்பு முறைகள் அறிவொளிக் காலத்தின் மிகப் பெரிய சிருஷ்டியான அறிவியங்கியலின் (எபிஸ்டமாலஜி) நியதிகள் சார்ந்தவை. இந்த ஆய்வு முறைகளினூடாக அவர்கள் பழங்குடிப் படிமங்களைப் பின்தொடரும்போது சென்றடையும் இடம் மிகமிக எல்லைக்குட்பட்டதேயாகும். உண்மையில் அது பழங்குடிப் படிமங்களுக்கு
...more
நமது மனம் அறிவின் விதிகளுக்குட்பட்டு இயங்கவில்லை என்றும், அது தன்னிச்சையான ஒரு படிமப் பிரவாகமாக உள்ளது என்றும் மேற்கத்திய உளவியல் அறிய நேர்ந்ததே பகுத்தறிவுவாதத்திற்கு விழுந்த முதல் பெரும் அடி. அதற்கு பிராய்டைவிட யுங்கே பெரிதும் காரணம்.
பகுத்தறிவைப் பகுத்தறிந்து ஒரு நூற்றாண்டை மானுடகுலம் செலவிட்டாயிற்று. இனி பகுக்கப்படாத உள்ளறிவை அதன் முழுமைநிலையிலேயே தியானித்தறிய அது முயல வேண்டும். மதத்தை நோக்கிய ஒரு பார்வை என்று நான் குறிப்பிடுவது இதையே. அது மதத்துக்குத் திரும்புதல் அல்ல.
இன்று மதம் ஓர் அதிகாரக் கட்டுமானம் என்பதை மறுக்கவில்லை. அமைப்புகளை உருவாக்கும், நம்பிக்கைகளைப் பயிரிடும் வயல் அது. அதற்கும் மேலாக அது தயார்நிலை விடைகளின் சூப்பர் மார்க்கெட். ஆனால் இவைமட்டுமல்ல மதம். அது மிகப்பிரம்மாண்டமான ஒரு தேடலின் வரைபடமும் கூட. அத்தேடலின் வினாக்கள் இன்னமும் அதில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் மதம் தன் வினாக்களைக் கூர்மைப்படுத்தும் பொருட்டு (அல்லது உருவம் தரும் பொருட்டு) படிமங்களை உண்டு பண்ணுகிறது. அப்படிமங்களை விடைகளாக அது காலப்போக்கில் மாற்றவும் செய்கிறது. மதத்தின் ஒவ்வொரு விடையும் காலத்தால் சற்று செயலிழக்கச் செய்யப்பட்ட வினாவே. விஷத்திற்கு விஷத்தால் முறிமருந்து
...more
’தேடல் - படிமங்கள் - வழிபாடு – அதிகாரம்’ என்பதே மதம் இயங்கும் சூத்திரம். இதுவே வரலாறு இயங்கும் சூத்திரமும் என்று படுகிறது. மனித மனமும் இப்பாதையில்தான் இயங்குகிறது. எனவேதான் ஒவ்வொரு அறிவியக்கத்தையும் காலப்போக்கில் நாம் மதமாக மாற்றிக்கொள்கிறோம். மார்க்ஸியம் ஒரு சோட்டா செமிட்டிக் மதம். ஆனால் பெரும் மதங்களுக்கு அவற்றின் சாரமாக ஒரு மெய்யியல் அடித்தளம் உள்ளது. அதிகாரம் உருவான உடனேயே அம்மெய்யியலில் இருந்து அவ்வதிகாரத்தை எதிர்க்கும் மாற்று சக்தியும் முளைத்துவிடுகிறது. அது அம்மதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் பௌத்தத்திலும் இந்து மதங்களிலும் எல்லாம் இப்படிப்பட்ட
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒரே தரப்பில் உள்ள இருவகையினர் மட்டுமே என்று மார்க்ஸ் கருதினார். உண்மையில் அப்படி அல்ல. இருதரப்பினரும் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தில் இருவரும் எதிரும் புதிருமான சக்திகள். தொழிலாளி என்பவன் யார்? விவசாயியின் உபரியை சுரண்டி மறு உற்பத்தி செய்யும் ஓர் அமைப்பின் உறுப்பினன் அவன். அதிகமாக விவசாயிகள் சுரண்டப்படும்போதுதான் தொழில்துறை வளர முடியும். போனஸைப் போராடி அடையும் தொழிலாளி விவசாயியின் ரத்தத்தில் அதிகப் பங்கு கேட்டுப் போராடும் ஒருவன்தான். ஆயிரம் பிரசங்கங்கள் போட்டு மூடினாலும் இதை இருதரப்பினரும் உள்ளூர அறிவார்கள். பஞ்சுக்கும் கரும்புக்கும் அதிக
...more
அடிப்படையில் வன்முறையையே தன் இறுதி நடவடிக்கையாக மார்க்ஸியம் முன்வைக்கிறது. எனவே அதன் அனைத்து வெற்றிகளும் ராணுவ இயல்பையே அடிப்படைத் தேவையாகக் கொண்டுள்ளன. அதாவது கட்சி நடவடிக்கை என்றால் ஒரு சமூகத்தைப் படிப்படியாக ராணுவமாக மாற்றுவதுதான்.
“மார்க்ஸிசத்துடைய தத்துவ அம்சத்தை ஒரு கோடு மாதிரி மனசில வச்சு பாருங்க. ஹெகல்ல இருந்து தொடங்கலாம். ஹெகல் மனித வரலாறு என்பது முரண்பட்ட சக்திகள் பரஸ்பரம் போராடறது வழியா முன்னகரக்கூடிய ஒரு இயக்கம் அப்படீன்னார். இதுதான் இயங்கியல். வரலாற்றுக்கு ஒரு இலக்கு இருக்கு. மேலான சமூகத்தையும் மேலான மானுடனையும் நோக்கி அது முன்னேறிட்டிருக்குன்னு சொன்னார். இதுதான் ஹெகலோட வரலாற்றுப் பொருள்முதல்வாதம்ங்கிற கருத்துமுதல்வாத தரிசனம்.“
“மார்க்ஸ் இதில இருக்கிற கருத்துமுதல்வாத அம்சத்தை நீக்கிட்டுப் பார்த்தார். ஹெகலோட தரிசனப்படி மேலான சமூகமும் மேலான மானுடனும் வரலாற்றுக்கு முன்னாலயே, வரலாற்றுக்கு அதீதமா, இருக்கக் கூடிய கருத்துக்கள். வரலாறுன்றது அந்தக் கருத்தின் பௌதிகமான வெளிப்பாடு மட்டும்தான். மார்க்ஸ் பௌதிகமான சக்திகள் தங்கள் போக்கில இயல்பா முரண்பட்டும், ஒன்று கலந்தும், முன்னகரக்கூடிய தன்னிச்சையான ஒரு பிரவாகமா வரலாற்றை உருவகிச்சார். இதுதான் மார்க்ஸியத்தின் தத்துவ அடிப்படை.”
“மார்க்ஸ் பௌதிகசக்திகள்னு சொல்றப்ப பொருளாதார அடிப்படைகளைத்தான் சொன்னார். உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள்னு அதை வரையறுத்து அடித்தளம்னு பேர் குடுத்தார். எல்லா சமூக மாற்றமும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில ஏற்படக்கூடிய மாற்றங்களினால தான் வரும்னு சொன்னார்.”
“ஆனா லெனின் அதை மாத்தினார். கலாச்சார, அரசியல் அமைப்புகளின் முயற்சியினால் மேற்கட்டுமானத்தில வரக்கூடிய மாற்றத்தினாலேயே சமூகத்தை மாத்தமுடியும்னு சொன்னார். மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளினால் இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டு வந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சுப் பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.”
“எங்க அரசாங்கம் வலுக்கட்டாயமா பொருளாதார அடிப்படைகளை மாத்த முயற்சி பண்ணுதோ அங்க பேரழிவு இருக்கும். ஒரு இடத்தில ஒரு சந்தைகூடுது. அது அங்க கூடறதுக்கு எத்தனையோ சமூகக் காரணங்கள் இருக்கும். உளவியல் காரணங்கள் இருக்கும். வரலாற்றுப் பின்புலம் இருக்கும். சமயங்களில அது சந்தைங்கிறதுக்கும் மேல ஒரு குறியீடாகக்கூட இருக்கும். ஒரு கலெக்டர் வந்து நாலு நாள்ல சந்தைய மாத்தினான்னா அது அழிவைத்தான் உண்டு பண்ணும்.”
“இயற்கையோட குழந்தைதான் சமூகம். ரெண்டும் இயந்திர அமைப்புகள் இல்லை. உயிர்கள். நமக்கு உயிர் இயக்கம் பற்றித் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம். எல்லாத்தயும் எந்திரமா பாக்கிற மனோபாவம் அன்னைக்கு இருந்தது. செவ்வியல் மார்க்ஸியத்திலயும் அது உண்டு. அந்தப் பார்வைதான் இயற்கையையும் சமூகத்தையும் வசதிக்கேற்ப நினைச்ச மாதிரி மாத்திக்கலாம்ங்கிற தன்னம்பிக்கையை - திமிரைன்னு சொல்லணும் - மனுஷனுக்குக் குடுத்தது. நாகரிகம் தொடங்கி இருபதாயிரம் வருஷமாச்சு. இந்த நூறு வருஷத்தில் இயற்கைய மனுஷன் நாசம் பண்ணியாச்சு. மனுஷன் இயற்கையோட எஜமான்னு எங்கல்ஸ் சொன்னார். ரொம்பத் தப்பு. அவன் இயற்கையோட ஒரு பகுதி. இயற்கையையும் சமூகத்தையும்
...more
இன்னொரு பெரும் கனவு வர்றதுவரை மார்க்ஸியம் இருக்கும். மதங்களும் தேசியங்களும் எல்லாம் பெருங்கனவுகள்தான். அந்தக் கனவுகளுடைய சாராம்சம் முதிர்ந்து உருவானது மார்க்ஸியம். மார்க்ஸியத்தோட சாரம் கனிந்து இன்னொரு கனவு வருமானால் மார்க்ஸியம் உதிரும். அதுவரை இருக்கும்.”
”மனுஷங்க நாம்னு நினைக்கிறவரை பெருங்கனவுகள் இருக்கும். தன் கனவை தன்னைச் சார்ந்தவர்களுடைய கனவா ஆக்குவான் மனிதன். மனித குலத்தோட கனவா அதை ஆக்கவும் முயற்சி செஞ்சிட்டேதான் இருப்பான். கலைகளும் இலக்கியமும் அந்த முயற்சியோட விளைவுகள்தான். தத்துவமும் தரிசனங்களும் அந்த முயற்சியால பிறக்கிறவைதான்...”
“ஒண்ணும் செய்ய முடியாது. எல்லா சித்தாந்தங்களும் மனுஷனுடைய எல்லைக்குட்பட்ட ஞானத்தில இருந்தே பிறந்து வருது. மார்க்ஸா இருந்தாலும்கூட மனித சிந்தனை மிகமிக பலவீனமானதுதான். வரலாற்றின் ஒரு துளியை மட்டும்தான் அதால பார்க்க முடியும், அறிய முடியும். மறுபக்கம் ஒண்ணு உண்டு. அந்த முனை வரலாற்றுக்கு உள்ளே இருக்கு. அது வழியா வரலாறு இச்சைப்படுது, தன்னை நிகழ்த்திக்குது.”
“சித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால் பிறக்கிறது இல்லை. தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது. எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.“
“என்ன நடக்குதுண்ணு சுற்றிலும் பார்க்கிறான் மனுஷன். வாழ்க்கை பிய்ச்சுட்டு ஓடுது. பரபரன்னு இருக்கு. புரியாம விழிக்கிறான். அப்ப அவனுக்குள்ள சாத்தான் கிசுகிசுக்க ஆரம்பிச்சிடறான். நீ பெரிய மேதை. உன் மூளை இந்த பிரபஞ்சத்தைவிடப் பெரிசு. உனக்குப் புரியாத ஒண்ணு உன்னைச் சுத்தி நடக்கலாமா? நல்லாக் கவனிச்சுப்பாரு. நல்லா ஒவ்வொண்ணா அடுக்கிப் பாரு. தெரிஞ்சிடப் போவுது. என்ன பெரிய வாழ்க்கையும் வரலாறும்! இங்க தானய்யா சித்தாந்தங்கள் பிறக்குது. ஒவ்வொரு மேதையும் தனக்குத் தெரிஞ்சமாதிரி வரலாற்றை அடுக்கிக் காட்டறான். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அடுக்கு. அகங்காரம் மேதைமையோடு சேருறப்பதான் சித்தாந்தம் பிறக்குது. அகங்காரம்
...more
“இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்லை. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தலை. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத் தலைமேலே தூக்கி வச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதிலகூட ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.”
“இந்தச் சூழ்நிலையில உலகம் முழுக்க சுரண்டப்படற மக்களுக்கு மார்க்ஸிசம்தான் ஒரே ஆயுதமா இருக்கு. ஒருவன் தனக்குள்ளயும் தன் சமூகத்திலயும் செயல்படற ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கருத்தியலை மார்க்ஸியம் வழியாத்தான் அடையாளம் காண முடியும். மார்க்ஸியம் மட்டும்தான் எதுத்துப் போராடறதுக்கான இலக்கையும், வழிமுறையையும் குடுக்கிற ஒரே சித்தாந்தம். சுரண்டல் உலகளாவியது. அதனால் அதுக்கு எதிரான போராட்டமும் உலகளாவிய ஒண்ணுதான். அந்தப் போராட்டத்துக்கு அவசியமான அடித்தளம் ஒரு உலகளாவிய பெருங்கதையாடல்தான். இது உண்மை. மார்க்ஸிசத்தில் குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத்
...more
“இன்னைக்கு அறிவுஜீவிகளுக்குப் பெரிய பணி காத்திட்டிருக்கு. வரலாறு பெரிய சவாலை நமக்கு விடுக்குது. இன்னைக்கு அறிவுதான்பெரிய ஆயுதம்னு நிரூபணமாயிருக்கு. அந்த ஆயுதத்தை வச்சு நாம என்ன செய்தோம்னு நம்ம சந்ததி கேட்கும். நம்ம அகங்காரத்தை சமனப்படுத்திக்கிறதுக்கும், சொந்த திருப்திக்காக சதுரங்கம் விளையாடறதுக்கும் அதைப் பயன்படுத்தினோம்னா நம்ம குழந்தைகளுக்கு மிகப் பெரிய துரோகம் செய்றதாத்தான் அர்த்தம்.”
“பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுபடுத்திக்க முடியாது. தெளிவு இருக்க இடத்தில பேச்சு இருக்காது.“
நாம் வாழும் இந்த உலகம் பௌதிகவிதிகளின் இரும்புப் பிடிக்குள் சிக்கியுள்ளது. இங்கிருந்து நாம் சிந்திப்பவையெல்லாம் அவ்விதிகளின் நீட்சியாகவோ, அல்லது அவ்விதிக்குக் கட்டுப்பட்ட சிறு விலகல்களாகவோ மட்டுமே உள்ளன. இந்தக் காலத்தில், இந்த இடத்தில் செல்லுபடியாகும் உபயோக மதிப்புள்ள சிந்தனைகளை மட்டுமே இங்கிருந்துகொண்டு நம்மால் உருவாக்க முடியும். காலத்தையும் இடத்தையும் தாண்டிச் செல்ல இப்பூமியின் பௌதிக ஒழுங்கைக் கலைத்துப் போட்டேயாக வேண்டும். மனம் கலையும்போது ஒன்று தெரியவரும். பூமியின் பெளதிக ஒழுங்கு என்பது உண்மையில் நமது மூளையின் பௌதிக ஒழுங்கேயாகும்.
விண்ணையும் மண்ணையும் இணைக்கும்படி எழுந்த பூதரூபமான லிங்கம். ஆனால் அது ஆவுடைமீது அமர்ந்திருக்க வேண்டும். ஆவுடை இல்லாத லிங்கம் அர்த்தமற்ற கற்பிண்டம் மட்டுமே. லிங்கமே ஞானமும் செயலும் ஆகும். ஆயினும் ஆவுடையே அதை நிலைநிறுத்தும் அடித்தளம். ஆவுடை சக்தியின் தாய்மைப்பீடம். தாய்மை பெண்களுக்குரியது என்று எண்ணியிருந்தேன். புரட்சியில் பெண்கள் இல்லாததனாலேயே அது பேரழிவைச் சந்தித்தது என்றும் எண்ணியிருந்தேன். இப்போது தெரிகிறது ஆவுடை ஒவ்வொரு மனதிலும் உண்டு. நம் ஞானமும் தீரமும் அதில்தான் முளைத்தெழ வேண்டும். அதில்தான் அடங்கவும் வேண்டும். அதில்லாத எழுச்சி வெறும் அகங்காரக் கொப்பளிப்பு. சரிந்து பூமிமீது விழுகையில்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)