More on this book
Community
Kindle Notes & Highlights
ஏர்வாடியில் குடிகொண்டிருக்கும் சயீத் இப்ராஹிம் ஒலியுல்லாவின் பொற்பாதங்களுக்கு.
”ஞானம் ஆச்சர்யத்தில் தொடங்குகிறது.” - சாக்ரடீஸ்.
கடல் மற்றவர் அருந்தவென நீர் சுமந்தவாறு அங்குமிங்கும் ஏன் ஓடுகிறாய்? ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது கடல் தாகம் கொண்டவன் நீரைக் கண்டடைவான் எப்படியும். - கபீர்
தான் இந்த சந்தனக்கூடு திருவிழா 250 வருடங்களுக்கும் மேலாக எல்லா சமூகத்தினருக்குமான திருவிழாவாக இருந்து வருகிறது. முத்தரையர் சமூகத்தினர் எடுத்து வரும் கடல் நீரால் தர்ஹா கழுவப்படுகிறது. சந்தனக்கூடு செய்வதற்கான மரப்பேழைகளை ஆசாரி சமூகத்தினர் உருவாக்குகிறார்கள். தீப்பந்தங்கள் தயாரிப்பதற்கான துணிகளை சலவைத் தொழிலாளிகள் செய்து தருகிறார்கள். தீப்பந்தங்களுக்கான எண்ணையை ஆதிதிராவிட சமூகத்தினர் தருகிறார்கள். இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு துரும்பிலும் ஒற்றுமையே மிளிரும்.
துறவை நாடுகிறவன் பயணிக்கலாம். ஆனால் வழிகாட்டியாகவோ பாதுகாவலனாகவோ இருக்கக் கூடாது. வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
கப்பல்ல எப்பவுமே தேவைக்கு அதிகமா உணவும் தண்ணியும் வெச்சுக்கனும். ஏன்னா இது நிலத்துல போற பயணம் மாதிரி இல்ல. சூழல் எப்ப வேணும்னாலும் எப்பிடி வேணும்னாலும் மாறலாம்.”
கடற்கயணத்திற்கு எச்சரிக்கை என்பது பயணத்திற்கு ஆயத்தமாகும் நாளிலிருந்தே துவங்கிவிடுகிறது என்பதை யாரும் கற்றுக் கொடுக்காமலேயே அஹமத் புரிந்து கொண்டான்.
ரூக் என்னும் பறவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடல் பயணிகளை கப்பலிலிருந்து தூக்கிக் கொண்டு சென்றுவிடுமென்றும் பேசிக் கொண்டனர்.
ஒரு மாலுமியின் ஒவ்வொரு நாளும் எதிரபாராத சம்பவங்களால் நிறைந்திருக்கும். இந்த அச்சத்தின் காரணமாகவும் எதிர்பார்ப்பின் காரணமாகவுமே கடலோடிகள் ஏராளமான கதைகளைச் சொல்கிறவர்களாகவும் கேட்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
கப்பல் தலைவன் எல்லா நுணுக்கங்களையும் தன் பணியாட்களுக்குக் கற்றுக் கொடுத்துவிடுவதில்லை. ஆர்வமுள்ளவன் ஒவ்வொன்றையும் தானே கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வேலைகளைக் கற்றுக் கொள்வதில் முக்கியமான விதி, கட்டளைகளுக்கு கேள்வியின்றி கீழ்படிய வேண்டும். கீழ்ப்படிதல்தான் அடிப்படை.
வேலைகள் பழக்கங்களாக மாறியபோது அவனுக்கு மேன்மேலும் இலகுவானது.
ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது. கடலோரத்தில் வாழும் மனிதன் எவ்வாறு கடலின் தன்மையைக் கொண்டிருக்கிறானோ கடலும் அவ்வாறு தன் கரையோரத்தில் வாழும் மனிதர்களின் இயல்பை கிரகித்துக் கொள்கிறது.
நிலத்தில் சிவாஜி மஹ்ராஜ் வகுத்த வியூகங்களை கனோஜி கடலில் வகுத்திருந்தார்.
அவனோடு படித்த யாருக்குமே செருப்பணியும் பழக்கமில்லை, செருப்பு ஆடம்பரமாகப் பார்க்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் இலவச செருப்புகள் சொல்லி வைத்தாற்போல் இரண்டு மாதங்களுக்குக் கூட உழைக்காது. இதனாலேயே பெரும்பாலான மாணவர்கள் செருப்பை பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். பள்ளிக்கு அணிந்து வரும் சிலரும் வகுப்பை அடைந்ததும் பத்திரப்படுத்தும் விதமாக பைக்குள் எடுத்து வைத்துக் கொள்வார்கள். விசேஷ வீடுகளுக்குச் செல்கையிலும் பண்டிகை நாட்களுக்கு அணிவதற்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.
அந்தக் கூட்டத்தில் பேரையூரைத் தாண்டி எங்குமே போயிருக்காத ஆள் ஜோதி மட்டுந்தான்.
இருபத்தியோறு வயதில் முதல் முறை சென்றபோது இந்த உலகை தன் விருப்பங்களால் தேடல்களால் வெல்ல நினைக்கும் ஒரு இளைஞனின் வேகமிருந்தது. பயணத்திற்குப் பின் எதையும் வென்று எதையும் செய்யப் போவதில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது.
பெண்களின் ஆழ் மன நாட்டங்களை, ஆளுமையைப் புரிந்து கொள்ள பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை.
அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது. அன்பின் ஒளியை சகல ஜீவராசிகளுக்கு பகிர்ந்தளிக்கும் மனைவிமார்களை அந்தரங்கமாக கணவர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
கொடிமரத்தெரு வாசிகளில் பலரும் சிமோகாவிலிருந்து வந்தவர்கள்தான். பல வருடங்களுக்கு முன்பு இந்து மன்னர்களுக்கும் இஸ்லாமிய நவாபுகளுக்கும் நடந்த யுத்தத்தின் போது உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஏராளமானோர் அங்கிருந்து தென் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்தார்கள். சண்டை முடிந்து திரும்பிச் சென்றுவிடலாமென நினைத்தவர்களுக்கு இந்த ஊர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் அமைதியாக இருந்ததால் பிடித்துபோய் இங்கேயே தங்கிவிட்டனர். வந்தவர்கள் தங்கிவிட்டாலும் அவர்களின் சொத்துக்களும் உடமைகளும் ஏராளமாய் சிமோகாவிலிருந்தன.
பயில்வான்கள் சிமோகாவிற்கு சென்று வரத்துவங்கியபோது அந்த ஊருக்கும் கொடிமரத்தெருவிற்கும் ஒரு நீண்ட பிணைப்பு உருவானது.
’அவங்க பேசட்டும், யாருக்கும் எங்கும் பேச உரிமையுண்டு. கோழைதான் பிறர் வாயை மூடி அடக்க நெனைப்பான்.’
ஆனால் பிடிக்கவில்லை என்பதற்காக மனிதன் வாழாமலிருக்க முடியுமா?
அன்வர் என்ற பெயர் அவனை சடாரென சந்தேகத்திற்குரிய நபராய் மாற்றிவிட்டது.
பங்காளி முறையில் வரமாட்டார்கள் என வாப்பாவும் உடனே சம்மதம் சொன்னார்.
கனவாப் பிச்சை அண்ணனின் கடை மாட்டிறைச்சித் துண்டுகள்
கீழத்தெரு முழுக்கவே உலர்ந்த மாட்டிறைச்சியின் மணம் நிரம்பியிருப்பதோடு தீப்பெட்டி ஒட்டும் பசையும் தீப்பெட்டி அட்டையின் மணமும் நிரம்பியிருக்கும். பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருப்பார்கள், அல்லது கட்டை அடுக்குவார்கள்.
மவுத்தாகிவிட்டதால்
ரெண்டு பேர் சேந்து வாழப் போறாங்கனு சொந்தக்காரங்களுக்கு சொல்லணும். அத செலவில்லாம செய்ய வேண்டிதான.”
“செலவில்லாம செய்யனும்னா இன்னாருக்கு இன்னாரோட நிக்கா முடிஞ்சதுன்னு சொந்தக்காரங்களுக்கு எல்லாம் லெட்டர் தான் போடனும்.
சேரா
அழுக்கான இடத்திற்கும் இரைச்சல் மிகுந்த இடத்திற்கும் வித்தியாசமுண்டு.
அந்த நளினத்தை கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தபோது அது முன்னிலும் அதீதமாய் வெளிப்பட்டது.
ஆதரவற்ற அவனின் கேவலைப் பார்த்து சுற்றியிருக்கிறவர்களுக்கு சிரிப்பு அதிகமாகும்.
பயப்படத் துவங்கும் மனிதன் அதிலிருந்து மீள்வதற்கு பதிலாக ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கென தனது பயங்களை அதிகமாக்கிக் கொள்கிறான்.
அந்தம்மாவைப் பொறுத்தவரை எல்லாக் காயங்களுக்கும் நாமக்கட்டி தான் மருந்து.
யாரிடமாவது மனதிலிருக்கும் குறைகளைக் கொட்டிவிடும் போது தீர்வுகள் கிடைக்காது போனாலும் அந்த நேரத்திற்கான ஆறுதலும் மன நிம்மதியும் கிடைத்துவிடுவதால் தான் மனிதர்கள் தங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ள சக மனிதர்களை எதிர்பார்க்கிறார்கள்.
மனிதர்களை அல்லாமல் அவர்களின் இயல்பை கவனிக்கும் மனிதர்களின் கேலிகளில் இருந்து தப்பிக்க எத்தனை வலிமையான இதயம் கொண்டவர்களாலும் முடியாமல் போகிறது.
இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள். சக மனிதனின் அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள் தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது.
எல்லோரும் ஒதுக்கும் போதுதான் ஒருவனுக்கு தன்னை ஏதாவதொரு வழியில் நிரூபிக்க வேண்டுமென்கிற தவிப்பு வருகிறது.
இரண்டு பெண்கள் “யேய் எதுக்குய்யா அந்தப் பயல போட்டு அடிச்சிக்கிருக்க. பெத்த பிள்ளைன்னு கொஞ்சமாச்சும் அக்கற இருக்கா உனக்கெல்லாம். த்தூ..” என காறித்துப்பவும் தான் விட்டல் அவனை அடிப்பதை நிறுத்தினார்.
பாவம் செய்தவர்களைக் கூட அரவணைத்துக் கொள்ளும் மனிதர்கள் ஏன் இவனை ஒதுக்க வேண்டும்?
தனித்து விடப்படும் மனிதர்கள் கைவிடப்படுவதில்லை என்கிற உண்மையை ஜோதி புரிந்து கொண்டிருந்தான்.
அவன் இப்படித்தான், ஒரு செய்தியை சாதாரணமாக சொல்லத் தெரியாது. எதாவதொரு வேலையை செய்தபடி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
இரு நதிகள் கலப்பதைக் காட்டிலும் ஒரு நதியும் கடலும் கலப்பது ஓர் காவியம் நிறைந்த காட்சியாகும்.
சிலர் அவரை கடல் கொண்டு போனதாய் சொல்லிக் கொண்டனர், சிலர் அவர் சடாரென காற்றில் கரைந்து மறைந்து போனதாகச் சொன்னார்கள். அஹமத் அந்தக் கரையோர கிராமத்தின் காற்றிலும், நீரிலும், மணலிலும் கலந்து போயிருந்தார்.
இரண்டு உடல்கள் சேர்ந்து விலகும் சில நிமிடங்கள் வெகு சாதாரணமாக முடிந்துபோகக் கூடியது. ஆனால் எப்போதும் கூடலைப் பற்றி யோசித்து உழன்று உடலை வருத்திக் கொள்வது சாதாரணமானதில்லை. அவன் அசாதாரணமானவனாகி இருந்தான்.
மழை நீர் வீதியை மூடியிருந்ததால்
வெறிபிடிச்ச நாய்களுக்குத்தான் நாக்குல எப்பயும் எச்சி ஊறும்.
மனித உயிரின் இயக்கத்திற்கு ஈரமிக்க சொற்கள்தான் உரங்களாகின்றன.