More on this book
Community
Kindle Notes & Highlights
ஜோதிக்கும் தன் வாழ்வில் தன்னைப் புரிந்து கொண்ட முதல் நண்பனை சந்தித்துவிட்ட மகிழ்ச்சி.
தீமைக்குத் தீமை செய்கிறவர்களை விடவும் நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் தான் நம்மை சூழ்ந்து வாழ்கிறார்கள்.
அவள் மனதிலிருந்த ஒளியைச் சுற்றி இருள் ஆக்ரமிக்கத் துடித்தது. அந்த ஒளியிலிருந்த அத்தனை வசீகரங்களையும் நல்லெண்ணங்களையும் முழுமையாக இருள் தின்று செரிப்பதற்கு முன்னால் அவளை மீட்டுவிடவேண்டுமென துடித்தான்.
அவளுக்காக அவன் கொண்ட துயரை அந்த ஊர் வாசிகளோ அவன் வீட்டிலிருந்தவர்களோ ராபியாவோகூட உணர்ந்திருக்கவில்லை.
அவளோடு இல்லாமல் போன நாட்களை சபித்தான். வேதனைகளை
வேதனைகளை எவரிடமும் வெளிப்படுத்தும் குணம் அவளுக்கில்லை. எல்லாவற்றையும் இறைவனிடம் சொல்லிவிட்டதாக நினைத்து ம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அன்வரின் ஆன்மாவில் அறியாமையும் அன்பும் முழுமையாய் விலகி சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட அவமான உணர்வும் கசப்புமே மிஞ்சியிருந்தது. அவமானம் வீட்டை அடிக்கடி சூழ்ந்ததால் அவன் வீட்டிற்கு வருவதை வெறுத்தான்.
கழுதைதான். முல்லா தேசத்தின் எல்லைக்கு அப்பால் வியாபாரம் செய்வதற்காக தன் கழுதையுடன் தினமும் செல்வார். கழுதையின் மீது நிறைய பொதி இருக்கும். முல்லா தினமும் எதையோ எல்லை தாண்டி கடத்துகிறார் என்று வதந்தி வர, அதிகாரிகள் தினமும் அவரின் கழுதை மீதிருந்த பொதிகளை சோதனை செய்யத் துவங்கினர். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளில் மாபெரும் செல்வந்தராகியிருந்த முல்லா வேறு ஊருக்குக் கிளம்ப முடிவுசெய்தார். அப்போது அதிகாரிகள் ஆர்வமிகுதியில் அவரிடம், “இத்தனை வருடங்களில் நீங்கள் எதையாவது கடத்தினீர்களா?” என்று கேட்டார்கள். பதிலுக்கு முல்லா ஆமாம் என்று சொல்ல, அதிர்ந்துபோன அதிகாரிகள் “எதைக்
...more
{அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். நாம்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.}
காட்டுக்கு வெளியே இருக்கும் நிலத்தை ஜோதி கட்டையனுக்கு அறிமுகப்படுத்தியதைப் போல் கட்டையன் ஜோதிக்கு காட்டை அறிமுகப்படுத்தினான்.
ஓங்குதாங்கான பாஷை தெரியாத ஒரு நைஜீரிய மனிதனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக வீட்டில் அறிமுகப்படுத்தியபோது அதை ஒருபோதும் நிகழக்கூடாத கனவாகவே பார்த்தனர்.
தன்னை, தனது இச்சைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளத் தெரியாத அந்த மனிதன் இன்னும் எத்தனை பேரின் கோபத்தைக் கிளர்த்தப்போகிறான்?
சகமனிதர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பது மாதிரியான சாபம் வேறில்லை. ஒருமுறை ஒருவரை வெறுக்கத் துவங்கியபின் எத்தனை சமாதானங்கள் செய்தாலும் கசப்பின் சுவடுகளென்னவோ முழுமையாய் நீர்த்துப் போகாமல்தான் அப்படியேதானிருக்கிறது.
தேவைகளுக்காக இன்றி ஆசைகளுக்காக கடன் வாங்குவது மனிதனுக்குப் பழக்கமாகும்போது அதிலிருந்து விடுபடுவது எளிதாகயிருப்பதில்லை.
சட்டி எடுக்கும் தினத்தன்று காலையே ராபியா தன் குடும்பத்தோடு ஜோதி வீட்டிற்கு வந்திருந்தாள். அவன் குளித்து மஞ்சள் வேட்டி சட்டையுடன் முதலில் ராபியா அன்வர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.
அந்த மனிதர்களுக்கு ரெளத்திரம் தற்காலிகமானது, அன்பு நிரந்தரமானது.
‘அக்கா நீ அவனுக்கு மஞ்ச தண்ணி ஊத்துக்கா.”
இம்புட்டுக் காசு பணம் இருந்து ஏன் அவனும் இங்க வந்து சட்டி எடுக்கனும். பக்தின்னு நெனைக்கிறியா? நான் அறியாம செஞ்ச பாவத்த எல்லாம் மன்னிச்சிடுன்னு வேண்டிக்கத்தான்.
யாரையும் இவ்வளவு வெறுக்காத ஜோதி. வெறுப்பு முதல்ல உன்னத்தான் சீரழிக்கும். இப்ப தேடிவந்து நம்மளப் பாத்து மரியாதையா பேசி சிரிச்சுட்டுப் போறானே இதான் அந்தாளோட நெஜம். இது புரிஞ்சுடுச்சுன்னா உனக்குள்ள இருக்க வெறுப்பு போயிரும். உன்னய வெறுக்கறவங்களையும் நீ நேசிக்க பழகுடா.” ஆறுதலாக
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
”பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” - சூஃபி கவிஞர் சா’அதி.
அவனை மன்னிக்க ஒருவருக்கும் தகுதியில்லை, தண்டிக்க எல்லோருக்கும் உரிமையிருந்தது.
மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்.
விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல் துயரமானது வேறில்லை.
ஜோதிலிங்கம் எல்லாக் காலத்திற்கும் ஒளிரக்கூடிய சுடர்.
கடலுக்குள் கலந்த பிறகு உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை.
நாடோடிகள் விதைப்பதோடு சரி, அறுப்பதில்லை. விளைச்சல் குறித்து அக்கறை கொள்வதில்லை.