More on this book
Community
Kindle Notes & Highlights
துயரப்படுவதற்காக மனிதர்கள் பிறப்பெடுப்பதில்லை என்கிற உண்மையை ஊரைப் பிரிந்த நாட்கள் அவனுக்குப் புரியவைத்திருந்தன.
வாழ்வின் மீதிருந்த வெறுப்பு இந்தக் கொடுமைகளை சகித்துக் கொள்ளச் செய்தது.
சூலூர்பேட்டைக்கு வெளியில் தடா செல்லும் சாலையிலிருந்தது
பத்து பத்து பரப்பளவில் ஒரு புறாக்கூண்டு. ஐந்தடி உயரத்தில் கூரை. முன்பு எண்ணை டின்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட இடத்தை மனமிறங்கி இவர்களுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.
நளினத்தை விடவும் அவனுக்குள் வன்முறை அதிகமிருந்தது.
தங்கள் ஊரின் கரிசக் காட்டுப் புழுதியையும், வறண்ட கண்மாய்க் கரைகளையும் தாண்டி எதையும் பார்த்திராத இந்த யுவதிகளுக்கு கொஞ்ச காலத்திற்கேனும் வெளி உலகைப் பார்க்கப் போகும் சந்தோசம்.
அலங்கரிக்கப்பட்ட யானையை பட்டத்துக்கு அழைத்துச் செல்வதுபோல் பாவனை காட்டி கடைவீதியில் யாசகம் கேட்க அனுப்புவது போல் ஊரிலிருந்து கிளம்பும் போது நல்ல உணவு, தங்குமிடம், சம்பளம் என ஆசை காட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிடுவார்கள்.
வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் விடுமுறை அழுக்குத் துணிகளைத் துவைக்கவும், இன்னும் இரண்டு மணி நேரங்கள் கூடுதலாக உறங்கவும், வாய்க்கு ருசியாய் சமைத்து சாப்பிடவும் சரியாய் இருக்கும். இதெல்லாம் முடிந்து கூடுதலாய் நேரமிருந்தால் திருப்பூர் நகரத்தில் சென்று ஏதாவது படம் பார்த்து வருவார்கள்.
வேலை முடிந்து அறைக்குத் திரும்பிய பிறகும் கூட சத்தம் ஓய்ந்திருக்காது.
வீட்டில் பார்த்த வறுமைக்கும் இந்த இடத்திற்கும் பெரிய மாறுதல்கள் எதுவுமில்லை. குறைந்தபட்சம் தன்னைக் கட்டுப்படுத்த எவருமில்லை என்கிற விடுதலையுணர்வு எல்லா வருத்தங்களையும் பொறுத்துக்கொள்ள போதுமான காரணமாய் இருந்தது.
தான் ஒருபோதும் தன் அப்பாவைப்போல் ஆகப்போவதில்லை என்பது அவனுக்கு கிடைத்த மகத்தான விடுதலை.
எந்த ஒன்றிலிருந்தாவது விடுபட வேண்டுமென மனம் தவிக்கிற போது பிறிதொன்றின் மீதான விருப்பம் அனிச்சையாய் உருவாகி விடுகிறது. ஒரு சொல், பொருள், அல்லது மனிதர் என விருப்பங்கள் முடிவற்றவை. விருப்பங்களுக்கு எதிராக மனிதன் தொடர்ந்து போரிட்டு ஜெயிக்க விரும்புகிறான், ஆனாலும் வாழ்நாள் முழுக்க தோல்வியை மட்டுமே சந்திக்க நேரும் போராட்டம் அது.
அவனைச் சூழ்ந்திருந்த மனிதர்கள் கசந்தார்கள். அவர்களின் சிரிப்பும் சந்தோசமும் எரிச்சலூட்டின. மனிதன் துயரப்படுவதற்கென்றே படைக்கப்பட்டவனென்கிற அவனின் நம்பிக்கைகளை மற்றவர்களின் சந்தோசங்கள் பொய்யாக்கின. வாழ்வின் அறத்திற்கு எதிராக இயங்கும் அவர்களை உள்ளூர வெறுத்தான்.
துயர் கொண்ட மனதில் காதல் தங்குவதில்லை. குறைந்தபட்சம் புன்னகைக்க வேண்டும்.
போதை காதலைத் தூண்டும் திறவுகோல் மட்டுந்தான், உச்சமல்ல.
போதுமெனத் திரும்பி வர யோசிக்காத மனம் வாய்க்கிறவனுக்குத்தான் காதல் ஞானம் தரும் அருவி. பசியாறியதும் தன் போக்கில் செல்கிறவனுக்கு ஏராளமான உணவுகளில் இதுவுமொன்று. அவன்
அந்த ஒருவார விடுமுறை நாட்களின் சந்தோசங்களிலும் நினைவுகளிலுமே அடுத்த ஆறுமாதங்களை அவர்கள் கழித்தார்கள். ஒவ்வொரு நாளையும் அடுத்த விடுமுறை குறித்த நம்பிக்கயில் கழித்துவிடுவார்கள். சிலர் விடுமுறை முடிந்து வராமல் போவதுமுண்டு.
எல்லோருடைய பேச்சுக்கும் அவன் செவிமடுத்தான், ஆனால் எதையும் செவியைத் தாண்டி எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த வேலையிலிருந்த கடுமை அவனுக்குள் இருந்த மிச்சம் மீதி நல்ல குணங்களையும் சிதைக்கத் துவங்கியது.
தான் நல்ல குணங்கள் கொண்ட மனிதனில்லை என்பது ஆறுதலாய் இருந்தது. இந்த தீமைதான் தன்னை மகிழ்ச்சியுள்ளவனாய் வைக்க முடியுமென்றால் அந்த தீமைக்குள் உழல்வதில் என்ன வந்துவிடப்போகிறது?
ஜோதி கடவுளின் மீது நம்பிக்கையிழந்தான். அவரை வெறுத்தான். இந்த உலகை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் ஆன்மா கசங்கி அழுக்கேறிப்போயிருந்தது. இணக்கத்துடன் உரையாட கடவுள் இப்போது அவனுக்கு நண்பரில்லை. இயலா நிலையில் ஏதும் கிட்டாததொரு நாளில் பசி கொண்ட நாயென வேட்டைக் கண்களோடு வழிப்பறி செய்ய அவர்தான் பழக்கினார் என்பதற்காக அவர் அவனின் ஆசானும் இல்லை. அவர் அவனது துயர் கண்டு களிப்புறும் கேளிக்கையாளன். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க நேர்ந்தால் உருண்ட ஆலம் பழத்தை ஒத்த அவரின் கண்களை பிடுங்கித் தின்ன பசியோடு காத்திருக்கும் மிருகம் அவன்.
அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு சொல்லையும் திரும்பத் திரும்ப வாசித்தான்.
தமிழக ஆந்திர எல்லைகளில் எளிய வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கான சந்தோசம் இந்த கரும்பு வயல்களுக்குள்ளிருந்தது. நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கும் இவர்களைப் போலவே வறுமைப் பிண்ணனி கொண்ட பெண்கள் கிடைத்தனர்.
“என்னாச்சு தம்பி? மூட் ஆகலையா? நான் வேணும்னா கையால செஞ்சு விடவா?”
‘அக்கா’ என அரற்றிய படி அவளுடலில் கலந்தான். காத்திருப்பு, பிரிவு எல்லாம் தீர்ந்து மனம் இலகுவாகும் வரை அவளுடலில் பிணைந்து கிடந்தவனின்
பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
பழக்கமான எல்லோரின் குரலிலும் புதிதான ஒரு அந்நியத் தன்மை வெளிப்பட்டது. அவன் அந்த ஊருக்கான அடையாளத்தை இழந்துவிட்டதைப் போல் பார்த்தனர்.
வயதில் பெரியவர்கள் கூட “வாங்க தம்பி” என்றழைத்தபோது ஜோதிக்கு கூச்சமாய் இருந்தது.
சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்.
விட்டல் அடிக்கடி முடியாமல் போவதையும் மருத்துவமனைக்கு அலைவதையும் மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டான். ஊருக்கு வந்த மகனிடம் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்ள ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
சொந்தக் குடும்பத்தின் நிலையை மற்றவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாக தான் உருவாக்கி கொண்ட இடைவெளிகளும் காரணமென்கிற கசப்பான நிஜம் அவனுக்குள் குற்றவுணர்வை உருவாக்கியது.
இந்த உலகை அவர் தன் கலையின் மூலமாக மட்டுமே தெரிந்து கொண்டிருந்தார்.
ராபியாவின் முகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்துவிட்டுப்போன அதே புன்னகை. சற்றைக்கு முன்பாக பேசிப்பிரிந்து மீண்டும் சந்தித்த அதே நெருக்கத்தை வெளிப்படுத்திய முகம்.
சீல்த்தூர்ல
நஸ்ரின் வளர்ந்திருந்தாள். அவளுக்கு இவனை யாரென்று அடையாளம் தெரியவில்லை. “மாமாடி..” என ராபியா பலமுறை சொல்லி அவனிடம் அவளை அனுப்பியபோதும் ஒதுங்கி நின்றே சிரித்தாள்.
காசு சம்பாதிச்சு குடுத்துட்டா போதுமாடா. கூட இருந்து பாத்துக்க ஒருத்தர் வேணாமா?”
அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அந்தச் சின்ன முத்தம் அவனுக்குக் கிடைத்த மகத்தான ஆசீர்வாதம்.
அவளை அணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றிய எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.
இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை.
வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள்.
ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தவன் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது எளிதான காரியமில்லை.
எண்ணங்களும் தேவைகளும் தான் மனிதர்கள். தேவைகள் மனிதர்களின் எண்ணங்களை மாற்றும் போது மனிதனும் மாறவே கூடுமென்பதை ராபியா மிக நன்றாய் அறிந்திருந்தாள்.
நேசத்திற்குரியவர்களிடம் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல் துக்கத்தையும் தோல்விகளையும் இயல்பாய் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.
வுட்டக் காசு பத்தாதுன்னு போலிஸ் ஸ்டேஷனுக்கும் அழுகனும்.
ரசூல் அவன் தோள்களை தன்னோடு அணைத்துக் கொண்டார்.
சக மனிதனை ஏமாற்றாமல் வாழ்வதும் சக மனிதனிடம் ஏமாறாமல் வாழ்வதும் எளிதான காரியமில்லை என்பது புத்தியில் உறைத்தது.
ரசூல் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ரசூல் அவன் கைகளை இறுகப்பற்றி நம்பிக்கையூட்டினார்.
விளைவுகளை யோசிக்கும் அவகாசமில்லாமல் எடுத்து தன் இடது கை மணிக்கட்டில் ஆழமாகக் குத்திக் கிழித்தான். அச்சம் வெக்கை நிறைந்த சூடாய் வெளியேறியபோது மனம் இலகுவானது. எல்லா துயர்களிலிருந்தும் விடுபட்டுவிட்ட நிம்மதியில் அமைதியாய் ஷட்டரில் சாய்ந்து உட்கார்ந்தான்.
”காசு பணம் சம்பாதிச்சிரலாம். ஆனா அப்பாவுக்கு பெறகு யார் பொம்ம செய்றது. இப்பவும் கூத்து நடத்தற ஆளுங்க பொம்ம தேவைன்னா நம்மகிட்டதான் வர்றாங்க. நாமளும் செய்யாம விட்டுட்டா அவங்க என்ன செய்வாங்க. நான் இங்கனக்குள்ளயே ஒரு வேலையப் பாத்துக்கிட்டு தேவப்படறப்போ பொம்மையும் செய்யறேன்.”