More on this book
Community
Kindle Notes & Highlights
என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்கா 'நன்னா இல்லே'ன்னு வச்சுட முடியறதா? 'நன்னா இல்லே, நன்னா இல்லே’ன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னா இருக்காதா?'ங்கற நப்பாசைதான். சான்ஸே குடுக்க மாட்டான் போலே இருக்கு! பக்கம் பக்கமா தள்ளிண்டு இருக்கேன்...
அன்னிக்கி இந்தக் குழந்தை வந்து தானா பேசினப்போ எங்கே வந்து ஈஷிக்குமோன்னு பயந்து ஒதுங்கி வந்தேனே, இன்னிக்கி நானாப் போய் இது மேலே விழுந்து ஒட்டிக்கிறேன்.
ஒரே சமயத்தில் இப்படி ஒரு கேவலமான விஷமத்தைப் பண்ணிண்டே எப்படி இவராலே ரொம்ப உயர்ந்த விஷயங்களைப் பத்தியும் பேச முடியறது?
மாமாங்கறது இந்தப் பலவீனமும் சேர்ந்ததுதான்.
எவ்வளவோ விஷயங்களிலே மகாமேதையாயிருக்கிற இவர் இந்த விஷயத்திலே எவ்வளவு அசடா இருக்கார்னு நினைக்கறப்போ எனக்குப் பாவமா இருக்கு.
'யாரோ ஒரு சூத்திரனோட வைப்பாட்டியா அவள் ஆய்ட்டா.
ஒரு ஆம்பளைத் துணையோட பப்ளிக்லே வரபோது நிச்சயமா ஒரு மரியாதை கெடைக்கறது.
கெட்டிக்காரர்களா இருக்கறதும் உலகம் தெரிஞ்சவளா இருக்கறதும் காலேஜுக்குப் படிக்க வந்துட்டதனாலே மட்டும் வந்துடுமா என்ன? அதெல்லாம் அவா வளர்க்கப்பட்ட சூழ்நிலையையும் வளர்த்தவாளையும் பொறுத்தது.
ஆனால் எல்லா உலகத்திலேயும் எல்லாச் சூழலிலேயும் பைத்தியக்காரத்தனங்களும் இருக்கத்தான் இருக்கு.
அன்னிக்கு மாமா கையிலேருந்து பெல்ட்டைப் பிடுங்கிண்டு நின்னேனே, அப்பவே அந்த பயம் என்னண்டே இருந்து ஓடிப் போச்சு. இனிமே எனக்குப் பயமில்லே.
என்னென்னமோ சொல்லிண்டு இருக்காளே ஒழிய நான் கேட்ட கேள்விக்குப் பதில் காணோமே.
இவ வாட்சிலே நேரத்தைப் பாக்கறா. நான் இவள்லே காலத்தைப் பாக்கறேன்.
சொல்லவேண்டிய விஷயங்களைச் சொல்லியாச்சு. அதைப்பத்தி இவர் என்ன நெனைக்கறார்னு நான் தெரிஞ்சுண்டு எனக்கென்ன ஆகணுமாம்? ஏதாவது
இவர் என்னைக் கோவிச்சுக்கறது நன்னாத்தான் இருக்கு.
பொம்மனாட்டி புருஷாளைத் தொட்டா அவ்வளவு தப்பா, அசிங்கமாத் தோணலே. புருஷா தொட்டாதான் என்னமோ மாதிரி இருக்கு... நன்னா இருக்கே என் நியாயம்?
நான் இதுக்கு ஏதாவது பதில் சொன்னால் பேச்சு வேற தண்டவாளத்திலே ஓடிடும்.
இதிலே வேடிக்கை என்னன்னா அவன் அவன் சூதாடதறதுக்குக் கொண்டுவர பணம்தான் வூட்டுக்குத் தெரியுது; கெலிக்கற பணம் தெரியாது. ஏன்னா அது வூடு வரைக்கும்கூடப் போவறதில்லே.
'நீ கெலிச்சுக்கினாலும் சரி, தோத்துக்கினாலும் சரி, சூதாடறதுக்குன்னு ஆட்டிலேருந்து வெளியிலே வர பணம் திரும்பி வூட்டுக்குப் போவதில்லை. அதனாலேதான் பொம்மனாட்டிங்களுக்கு அதுமேலே அவ்வளவு கோவம்.
இந்த மில்லியனர்ஸ் இருக்காங்களே அவங்க எல்லாருக்குமே ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கு;
அவனுங்ககிட்டே இருக்கிற பணத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே கிடையாதுன்னு அவங்களுக்குத் தெரியுது.
அந்தப் பணம் இல்லேன்னா அவங்களிலே ரொம்பப்பேரு எச்சி இலை பொறுக்கக்கூட லாயக்கு இல்லை.
ஸ்காட்ச் குடிச்சுட்டு ஃபில்த்தியா எதனாச்சும் பேசறவனும் இருப்பான்; சாராயம் குடிச்சுட்டு பெரிய விஷயங்களைப் பேசறவனும் இருப்பான்.
"கொஞ்சம் காபி கலக்கட்டுமாடி”னு அறை வாசற்படியிலே வந்து நின்னு கேக்கறாள். எனக்கு இப்போ வேண்டாம்தான். ஒருவேளை அம்மாவுக்கு வேண்டி இருக்குமோன்னு நினைச்சுண்டு, 'சரி'ங்கறேன்.
உருளைக் கிழங்கை எப்படி அல்வா பண்றதுன்னு எனக்குக் கிளாஸ் எடுக்கவா வந்திருக்கா, பின்னே?
நாளைக்கு இந்தப் பாவம் இவரோட பொண்ணை இந்த மாதிரிப் பாதிச்சுடுமோன்னு இவருக்கு பயமா இருக்காம்.
ஐ வில் ஷேர் மை பெட் வித் யூ”
மிஸஸ் மானுவல் சிகரெட்டை பிடிச்சுண்டு எதிரே வராள்.
இவள் பர்மிட் வைத்திருக்கிறாளாம்.
தன்னால் மிக அருவருப்பாகவும் கேவலமாகவும் மதித்து நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் எல்லாருமே இதுமாதிரி அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் ஒரு காலத்தில் பாத்திரமாய் இருந்தவர்கள் தானோ என்று நினைக்கையில்
நினைக்கையில் அவனது
இழப்பின் சோகம் ஒரு பிரபஞ்சமாகவே விஸ்த...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எல்லாருமே நிச்சயமாகக் கெட்டுப்போவார்கள் என்று அவன் நம்புகிறான்.
எத்தனையோ மாயைகள் நமது அறிவையும், மனசையும், ஆத்மாவையும் மறைக்கிறபோது நமக்குப் பிடிக்காதவைகூடப் பிடித்தவை போன்றும், பிடித்தவைகூடப் பிடிக்காதவை போன்றும், பிடிபடாதவை போன்றும் மயக்கங்கள் ஏற்படும்.
இவைதாம் அனுபவங்கள். பிடித்தவையும் பிடிக்காதவையும், பிடித்தது என்று நாம் முதலில் நினைத்துப் பின்னர் பிடிக்காமற் போனவையும்,
பிடிக்காதவை என்று நாம் ஒதுக்கியவை பின்னர் பிடித்தவையாகி நம்மை வந்து சிக்கெனப் பிடிப்பதும்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
விவாதமோ தர்க்கமோ இல்லாமல், படித்த மாத்திரத்தில் அநேகமாய் எல்லாருமே ஒரு முகமாய் ஏற்றுப் பாராட்டுகிற பல கதைகளையும் நான் எழுதி இருக்கிறேன் என்ற நினைப்பு எனக்குச் சற்று மன ஆறுதலைத் தருகிறது இப்போது.
பிடித்தவை, பிடிக்காதவை என்பதும் விவாதத்துக்கு இலக்காவது, ஆகாதது என்பதும் காலத் தொடர்பு கொண்ட வார்த்தைப் பிரயோகங்களாகும் என்பதுதானே...?
இன்று பல சர்ச்சைகளுக்கு இடமாகி, நாளை ஏற்றுக் கொள்ளத்தக்க பல கதைகளை நான் சமீபகாலமாய் எழுதி வருகிறேன்.
ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குச் சரி என்று படுகிற காரியத்தைச் செய்ய 'ஜனநாயக தர்மம்' மறுக்கிறது. எது எல்லாருக்கும் சரியோ - எது எல்லாருக்கும் ஓரளவு சரியோ-எது பெரும்பான்மையோருக்குச் சரியோ - அது தவறே எனினும், அதனை அனுமதித்து அடிபணிவது ஜனநாயக தர்மம்.
அந்தப் பெரும்பான்மையினர் தவறுக்கு மனமறிந்து மண்டியிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளையும் அநியாயமாக அனுபவிக்க வேண்டும் என்பது சிறுபான்மையினர் தலையில் இட்ட விதி!
இந்த மாதிரி சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறு பரிசீலனைக்கு வை...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எனவேதான் இலக்கியத்தில் ஜனநாயக தர்மம் அனுமதிக்கப் படுவதில்லை. முரண்படுவதற்குச் சம்மதமளிக்கிற பண...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எந்தச் சமூகம் இலக்கியத்திலும் இந்தப் பண்பை அனுமதிக்காதோ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அது அறிவுலகப் பிரஜைகளின் நரகம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பெரும்பான்மையினருக்கும் வளைந்து செயல் படும்படி இலக்கிய ஆசிரியனை நிர்ப்பந்திப்பது காலத்துக்கும் சரித்திரத்துக்கும் இழைக்கிற அநீதியாகும்.
ஒரு பக்கம் எல்லோருக்கும் பிடிக்கிற விதமாகவும், இன்னொரு பக்கம் இலக்கிய ரசிகர்களுக்கும் (இவர்களின் சிறுபான்மையினர்) பிடித்த விதமாயும் இருக்க வேண்டும் என்கிற பத்திரிகைக்காரர்களின் நல்ல ஆசைதான் என்னை ஜனரஞ்சகமான பத்திரிகை உலகில் நுழைய அனுமதித்தது என்று சொல்ல வேண்டும்.
'காலங்கள் மாறும்!'
கதை வேண்டுவோர்க்கு இருளும் ஒளியும் வேண்டும்.
தர்மம் வெல்லும் என்று காட்ட அதர்மம் வேண்டும்.
ஒழுக்கத்தின் சிறப்பைப் பேச ஒழுக்கக்கேட்டின் விளைவையும் சொல்ல வேண்டும்.