More on this book
Community
Kindle Notes & Highlights
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது.
எழுதுகிறவனைப் பொறுத்தவரை 'முடிந்து' போன ஒன்றைப் பற்றித்தான் அவன் எழுதுகிறான்
நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.
ஒரு
பக்கம் பரிதாபப் பட்டுண்டு இன்னொரு பக்கம் அவாளுக்குள்ளே கேவலமா பேசிச் சிரிக்கறா.
அன்னிக்கு அவள் பதினேழு வயசுக் கொழந்தை; நான் முப்பத்தேழு வயசுக் கொழந்தை...
வக்கீல் வாதத்திலே வெங்கு மாமா ஒரு புலின்னு எல்லாருமே சொல்லுவா.
ஒரு தப்பைத் தப்புன்னு ஒப்புத்துக்கணும். தப்பு பண்ணிட்டு அது சரின்னு வாதாடப்படாது.
உன் குடும்பத்தோட பெருமையையும், சாஸ்திரோக்தமான விவாகத்தோட பவித்ரத்தையும் கெடுத்த பாவம் உன்னைச் சூழ்ந்திருக்கும்.
அவர் இரைஞ்சு பேசினால் கோபம்னு அர்த்தமில்லே. அவருக்குக் கோபம் வந்தால் சத்தமே வெளியே வராது.
ஏதோ புராண காலத்திலே சபிக்கப்பட்ட தேவதை போலப் பொறுமையா பல்லைக் கடிச்சுண்டு, அந்தச் சாபம் விலகறதுக்கு ஏதோ ஒரு விமோசனம் இருக்கிற மாதிரியும்,
ஆனால் மாமிக்குச் சாப விமோசனம் சாவுதான்னு எனக்குத் தெரியும்.
'வாழும் நாகம்'னு
புலியைப் பழக்கறது மட்டும் சர்க்கஸ் இல்லே; புலியோட பழகறதும் ஒரு சர்க்கஸ்.
அந்த ஊர்ப்பக்கத்திலே எல்லாம் கோபம் வந்துட்டா 'கை வேற கால் வேறயா வெட்டுடா... வெங்கட் ராமையர் இருக்கவே இருக்கார், பார்த்துக்கலாம்’னு தேவன்மார்கள்
அவருக்கு இருக்கிற வாதத் திறமையாலே கொலைகாரனை நிரபராதி ஆக்கிடுவார்: நிரபராதியைக் கொலை காரனா ஆக்கிடுவார். அவர்
இந்தப் புலிக்கு இரையாகாம இதுகிட்ட பழகக் கத்துக்கணும்னு எனக்குத் தோணித்து.
சில நேரங்களிலே சில மனுஷா அப்படித்தான் இருப்பா. அவா அப்படி ஆயிடறதுக்கு அவாளா ஒரு நியாயம் வச்சிருக்கா. அதே மாதிரி நாமும் ஒரு நியாயத்தை வெச்சிண்டு அவா மாதிரியே
ஒரு வேஷத்தைப் போட்டுண்டு, அந்த நேரங்களிலே அந்த மனுஷாகிட்டேயிருந்து தப்பிச்சுக்கணும்.
இந்த வாக்கிங் போகற
பழக்கம் எனக்கு வந்ததே மாமாவாலேதான்.
இவ்வளவு பெரிய மனுஷர் என்னைத் தனக்கு ஒரு துணையா நெனச்சு இருக்காரேன்னு ஆரம்பத்திலே எல்லாம் எனக்கு ரொம்பப் பெருமையாக்கூட இருக்கும்.
சாகப்போற இந்த வயசிலே உன் மேலே எனக்கு ஆசை வரும்னு உனக்குத் தோண்றதே, அந்த வயசிலே அவனுக்கு அது தோணி இருக்கப்படாதா? உன்னையே எனக்குப் பிடிக்க வைக்க முடியும்னு நீ நம்பறதனாலே அவனையும் எனக்குப் பிடிச்சு இருந்திருக்கும்னு நீ நினைக்கறே... அவனைப் பிடிச்சு இருந்தாக்கூட உன்னைப் பிடிக்காது. கிழட்டுப் பிசாசே...!
நம்ப சாஸ்திரங்களும், நம்ப வாழ்க்கையோட தர்மங்களும் பெண் மக்களுடைய ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டதுன்னு சொல்லுவார்.
இயற்கையிலேயே அந்த விஷயத்திலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டாம்...! ஆண்கள் ஏக பத்தினி விரதனாக இருக்கறதும், பலரைக் கல்யாணம்
பண்ணிக்கறதும் அவன் அவனோட மனோதர்மத்தைப் பொறுத்ததாம்... ஆனால், பெண்கள் ஒருத்தனையே கைப் பிடிச்சு அவனுக்கே உண்மையாக இருக்கணும்கறதைத் த...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இதுக்கு அர்த்தம் ஆண்களைவிடப் பெண்கள் தாழ்ந்தவாங்கறது இல்லையாம். அவாளுக்கு உயர்ந்த அந்தஸ்து இருக்கிறதனா...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
மனுதர்ம சாஸ்திரத்திலேருந்தும் மகாபாரதத்திலேருந்தும் கூட ஆதாரங்கள் ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“பெண்கள் ஒருத்தனுக்கே உண்மையா இருக்கணும்னு சொல்றேளே? மகாபாரதத்திலே திரெளபதி அஞ்சு பேருக்கு மனைவியா இருந்தாளே? அதை எப்படி நம்ப சாஸ்திரம் ஒத்துண்டது?”
இதிகாசங்களிலிருந்து சாரங்களைத்தான் எடுத்துக்கணுமே தவிர, சம்பவங்களை எடுத்துக்கப்படாது!'
இதுமாதிரி விஷயங்களிலே மாமா பேச ஆரம்பிச்சார்னா ஏண்டா இவரைக் கேள்வி கேட்டோம்னு ஆயிடும்.
இதிகாச பூர்வமாக விளக்கறது மட்டுமில்லாமல் விஞ்ஞான பூர்வமாகவும் விளக்க ஆரம்பிச்சுடுவார் மாமா. மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் அவர் வாதத்தை நிலைநாட்டறதுக்கு முட்டுக் கொடுத்துண்டு வந்து நிக்கும்.
பத்துப் பெட்டைக் கோழிகள் இருக்கிற இடத்திலே ஒரு சேவல் போறும்பார்.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதிங்கறது ரொம்ப நியாயம்னு வாதம் பண்ணுவார்.
கொஞ்சம்கூட இங்கிதமோ இரக்கமோ இல்லாமல் 'உன்னைப் போல கெட்டுப்போன பொண்களுக்கு'னு ஆரம்பிப்பார்.
"நீ இனிமேலும் கெட்டுப் போகாமே இருக்கணும்னா உன்னை இன்னொருத்தர் கையை எதிர்ப்பார்க்காதவளாக, உன் சொந்தக் காலிலே நிக்கறவளாக உருவாக்கிக்கணும்” -
அவன் உன்னை நம்பமாட்டான். காரை நிறுத்திக் கையைப் பிடிச்சு இழுத்தவனோடெல்லாம் போறவளாத்தானே உன்னை அவன் நினைப்பான்? அப்படி அவன் நெனைக்கறது நியாயம் இல்லேன்னு சொல்ல உனக்கோ எனக்கோ என்ன நியாயம் இருக்கு,
“நீ யாருக்காவது வைப்பாட்டியா இருக்கலாம்; ஆனா எவனுக்கும் பெண்டாட்டியா இருக்க முடியாது.”
மாமா ரொம்ப நல்லவர். இதுவரைக்கும் என்னை நேரடியாக அவர் அப்படிக் கேட்டுடலே. கேட்டு இருந்தால் நான் மாட்டேன்'னு சொல்லுவேனாங்கறது சந்தேகம்.
'நான் பெண்களுக்குச் சொல்வது இதுதான்: உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்க முயலும்பொழுது உனக்கு நான் அஹிம்சையை உபதேசிக்கமாட்டேன். நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். நீ நிராயுதபாணியாக இருந்தால், இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று? இந்த நிலைமையில் நீ செய்கிற கொலையோ, அது முடியாதபோது நீ செய்து கொள்கிற தற்கொலையோ பாபமாகாது.'
பொய்யாய் - நான் கிழிச்ச சிகப்புக் கோடுகள்தான் இவ்வளவு காலமாக என்னைக் காப்பாத்திண்டு இருக்கு.
அதோ! அந்த வெள்ளைக்காரி நாயைப் பிடிச்சுண்டு எதிரே வராள். நான் ஒரு புலியைப் பிடிச்சுண்டு அவள் எதிரே போறேன்.
'இந்த ஒரு கங்காவை, இவள் வாழ்க்கையை மூளியாக்கி இவன் முகத்தில் கரி பூசியதன் மூலம் ஒரு பேதைப் பெண்ணை உம்முடைய பேய்ப் பசிக்கு இரையாகக் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் ஒரு வேளை நிறைவேறலாமே தவிர, நீர் சொல்லுகிற அந்த தர்மங்களும், சாஸ்திரங்களும் ஒழுக்க நெறிகளும் இந்த ஒரு கங்காவினால் பாதுகாக்கப் பட்டுவிட்டது என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?
என் கொழந்தை நாலு பேரைப்போல நன்னா இல்லையேன்னு நினைச்சு நான் கஷ்டப்படறேன்.
'எனக்கு நிகர் உண்டா'ன்னு இருக்கிறதை நான் பாக்கறேன்.
லோகத்திலே ஆயிரம் நடக்கும். நாம்ப எப்படி நடந்துக்கணும்னு நாம தான் தீர்மானம் பண்ணனும்.
அந்தக் கதை எழுதினானே அந்தக் காவாலி, அவனுக்கு அந்த நம்பிக்கையெல்லாம் கெடையாது.
இவள் செஞ்ச காரியத்துக்கு நானும் துணை போகலைன்னு என் மேலே பழியா? அப்படிப்பட்ட வம்சத்திலே நான் பொறக்கல்லே... நான் செஞ்சது சரிதான்!
பாசம்!”
கலியாணமே ஆகாத தன் பெண்ணைக் கைம்பெண்ணாய் ஆகச் சொல்கிற அவரது வரண்ட மனத்தின் வெம்மை, அவள் மேல் அனலாய் வீசுகிறது.