More on this book
Community
Kindle Notes & Highlights
என்று அப்படி ஒரு காரியம் நடக்க முடியாது என்கிற தைரியத்தில்
லோகத்திலே ஆயிரம் பேர் ஆயிரம் நியாயம் சொல்லுவா. நமக்கு ஏத்த நியாயத்தைத்தான் நாம்ப வச்சுக்கணும்.
எனக்கு எப்பவுமே திரும்பிப் பாக்கறதுன்னா - பயம்!
அவன் என்னை நம்பமாட்டான் என்கிறதனாலே நான் அவனைத் தேடாமல் இல்லே. அவனை நான் நம்பல்லே என்கிறதானேலேயே தேடாமல் இருக்கேன்...
என்னோட நல்ல சுபாவமும், தாட்சண்யப்படற குணமும் இந்த ஆண்பிள்ளைகள் உள்ளே மறைஞ்சிருக்கிற மிருகத்தை உசுப்பி விட்டுடறதோ?
ஆம்பிளை முகங்கள். மீசையுள்ள முகங்கள்; மீசையே இல்லாம க்ஷவரம் பண்ணி க்ஷவரம் பண்ணி பச்சையாக் கறைப்பட்டுள்ள முகங்கள்; வட்டமான முகங்கள்; நீளமான முகங்கள்; கூலிங்கிளாஸ் போட்ட முகங்கள்; பளிச்னு தொடச்சுவெச்ச மாதிரி முகங்கள்; பரு நெறைஞ்ச, அம்மைத் தழும்பு உள்ள, எண்ணெய் வழியற அசடு வழியற, எப்பவுமே சிரிக்கிற மாதிரி இருக்கிற, பல்லு நீண்ட, 'உம்'னு இருக்கிற - எத்தனை விதமான முகங்கள்! ஒண்ணு மாதிரி இன்னொண்ணு கிடையாது.
எனக்கு என்னமோ ஆர்.கே.வி.ங்கறது ஒரு பெண்ணாத்தான் இருக்குன்னு தோணிண்டே இருந்தது. ஆனா மாமாவுக்கு மட்டும் அது ஒரு ஆணாவே தோன்றது! அதுவும் ஒரு காலிப் பயலா, காவாலிப் பயலா இருக்கணும்னு தோண்றது.
கதை எழுதணும்னா மொதல்லே தமிழ்லே சிந்திக்க ஆரம்பிக்கணும்.
உன்னை முடிஞ்சவரைக்கும் மறைச்சு வச்சுக்கோ. இல்லேன்னா உன் அம்மா, அண்ணா, மாமா எல்லாரையும் போல உலகமே உன்னை இளப்பமா நெனைக்கும்...'
"ஓஹோ! பெரிய மனுஷாளா ஆனப்பறம் சின்னக்காரா?
உலகத்தையே ஒரு 'அவர்'லே அடக்கிண்டு,
அந்த 'அவ’ருக்குப் பயந்த மாதிரி காட்டிண்டு, சமயத்திலே 'அவ’ரைப் பயமுறுத்திண்டு... பெண் ஜென்மங்களுக்கு வாழ்க்கை வேற என்ன பெரிசா அமைஞ்சுடப் போறது இங்கே?
பொண் ஜென்மங்களோட வாழ்க்கை செக்குமாடு வாழ்க்கைதான்.
ஆனால் அவனோட யாரும் பேசி ஜெயிச்சுட முடியாது. நியாயத்தை அநியாயம்பான்; அநியாயத்தை நியாயம்பான். நேக்கு வக்கு இல்லே. இருந்திருந்தா வக்கீலுக்குப் படிக்க வெச்சிருப்பேன்.
"என்னைப் பெத்தவளும் ஒரு பொண்தான்; நீங்களும் ஒரு பொண்தான். அதை மறந்துட்டுச் சொல்றேன். பொதுவா இந்தப் பொம்மனாட்டிங்கறவா ஒண்ணும் அவ்வளவு நல்லவா இல்லே.
அவர் சிரிக்கிறார்: “உங்க மாமாவுக்கு பொண் இருக்கா?” “இல்லை.” “அவர் அப்படித்தான் சொல்லுவார்.”
அவன்தான் - இவர்!
பன்னெண்டு வருஷம் யாரையும் எதுவும் ஆக்கும்போல் இருக்கு.
இவர்கிட்டே இருக்கிற பணத்தை மைனஸ் பண்ணிப் பார்த்தா இந்த ஆளுக்கு மதிப்பு என்ன இருக்குன்னு நினைக்கறப்போ எனக்கு ரொம்பப் பாவமா இருக்கு.
இந்த உடம்பாலெல்லாம் உழைக்கக்கூட முடியாது. இருக்கற சொத்துக்கூட இவராச் சேர்த்ததா இருக்காது. தன் லைஃப்லே இவர் கெடுத்த முதல் பெண்ணே நான்தான்னு சொன்னாரே... வாட் எபெளட் ஹிஸ் ஒய்ஃப்? தாலி கட்டிண்டதுனாலே அவளைக் கெடுத்ததா இவர் நினைக்கலே போல இருக்கு.
முகத்தைச் சுளிச்சுண்டு, 'நாத்தம் வயத்தைக் குமட்டறது’னு சொல்லிக்கறதுதானே பொண்களுக்கு அழகு!
குடிக்காத நேரமெல்லாம் அவள் கத்திக்கிட்டிருப்பாள்; குடிச்சுட்டால் நான் கத்துவேன்; அவள் பயப்படுவாள்; பேசாம இருப்பாள்.
“உங்களை யாருமே காதலிக்கலேன்னு இவ்வளவு குறைப்பட்டுக்கறேளே, நீங்க யாரையாவது காதலிச்சிருக்கேளோ? உங்க ஒய்ஃப் உட்பட யாரையாவது? உங்களுக்குப் பணம் இருக்கு, படாடோபம் இருக்கு, கார் இருக்கு, பங்களா இருக்கு - நன்னா டிரஸ் பண்ணிக்கறேள். செண்ட் போட்டுக்கறேள்ங்கறதுக்காகத் தெருவிலே போறவாள்ளாம் உங்களை லவ் பண்ணணும்னு நினைக்கிறேள். இல்லே? அதுக்காகவே சில பேர் லவ் பண்றதா சொல்லிண்டு உங்ககிட்டே வரலாம். அது உங்களை லவ் பண்றதா ஆகுமா?”
காதோரத்திலே எங்க ஊர் தேவன்மார் கிருதா மாதிரி முடியை இழுத்து விட்டுக்கறா.
“சில பேர் வாயிலே வெள்ளி ஸ்பூனோட பிறக்கறாங்க; சிலர் தங்க நாக்கோட பிறக்கறாங்க.
மாமாவுக்கு இவரைச் சந்திக்கணும்னு தோண்றதே, அது கூட எனக்கு ஆச்சரியமாப்படலே. ஆனால் இவர் 'ஜென்ட்டில்மே’னாமே! சிரிப்பு வரது.
'நான் செய்யற எந்தக் காரியத்துக்கும் நான் பொறுப்பு ஏத்துக்க முடியாது!'ன்னு. ஹவ் டேஞ்சரஸ் இட் இஸ்! இவர்கிட்டே பழகறவாளுக்கு மட்டும்
இல்லே; இவருக்கே இவர் எவ்வளவு ஆபத்தானவர்!
யாரையாவது வாழ்க்கையிலேயே உருப்படாமல் குட்டிச்சுவரா அடிக்கணுமா? கொஞ்ச நாளைக்கு அவன் கேக்கும் போதெல்லாம் பணத்தெக் குடுத்துக் கிட்டே இருந்தாப் போதும். நல்லாத் தாராளமா அள்ளி அள்ளிக் குடுக்கணும்; செலவழிக்கச் செலவழிக்கக் குடுக்கணும். அப்பறம் 'டக்'னு நிறுத்திடணும். உன் 'எனிமி’யை அழிக்கறதுக்குக்கூட இதைவிட மோசமான ஆயுதம் கிடையாது.
'பால் சரஸமா கெடைக்கறபோது நான் மனதுக்கு ஒரு மாட்டை வாங்கணும்?'னு இங்கிலீஷ்லே ஒரு ஸேயிங் இருக்கே. (வென் தி மில்க் இஸ் ஸோ சீப், வய் ஷுட் ஐ பை எ கௌ?)
என்னை யாராவது பலவந்தமா இணங்க வெச்சுட்டாத் தேவலை போலே இருக்கு.
அப்படி ஒரு பலவந்தத்துக்கு கட்டுப்பட்டுப் போயிடற என்னோட பலவீனத்திலிருந்து என்னைக் காப்பாத்திக்கறதுக்கும் நான் இவர் பகத்திலே வந்து நின்னுண்டேன் போல இருக்கு.
அது மாதிரியேதான் நானும் இவரைப் பிடிச்சுண்டு ஏதோ ஒருவகைச் சபலத்திலே இழுத்துண்டு வந்திருக்கேனோன்னு நெனச்சுக்கறேன்.
கண் கலங்கி வழியறது. மனசின் அசுத்தம் பட்ட தண்ணீர்.
தொட்டத்துக்கெல்லாம் பெரிசா ஆர்க்யூ பண்றது இப்போ ஒரு ஃபாஷனாப் போய்டிச்சி.”
மனசுக்குள்ளே என்னை யாரோ பெண் பார்க்க வந்திருக்கற மாதிரி விசித்தரமா நினைச்சுண்டு நானே சிரிச்சுக்கறேன்.
அவா அவா, அவா அவா மரியாதையைக் காப்பாத்திக்கறா! (இது மாமாவுக்கு!)
இந்தச் சிக்கல்லேதான் எனக்கு ஒரு வக்கிரமான ஆனந்தம் இருக்கு.
இந்தச் சமயத்திலே எப்படி நடந்துக்கறது உசிதம்னு எனக்குப் புரிய மாட்டேங்கறது. நான் பேசாம நிக்கறேன்.
அம்மா மட்டும் என்ன, அம்மாவாவே பொறந்தாளா? அவளும் ஒரு பொண் இல்லையா? ஒரு பொண்ணோட நிலைமை, அவள் குறை, அவள் தேவை - இதெல்லாம் அம்மாவுக்குப் புரியாதா?
அம்மாகிட்டே ஒரு பொண்ணு பேசாமலே புரிஞ்சுண்டாத்தானே அந்த அம்மா, ஒரு அம்மா!
ஒரு வேளை நான் தனியாயிடறது தனக்கும் வசதின்னு நெனக்கறாரோ மாமா?
தனிமைதான் கடைசியா நான் ஜெயிச்சுண்ட பலனாக எனக்குக் கிடைச்சு இருக்கு.
குழந்தையும் செக்ஸும் சம்பந்தப்படாம இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்?
செக்ஸ் வேண்டாம்; குழந்தை வேணும்.
எவ்வளவு கற்பனாலங்காரமா யோசிச்சாலும் ஸைன்ஸ் அதையெல்லாம் காரியாம்சமா ஆக்கிடற ஏஜ் இல்லியா இது? இது
மனுஷர் லேசுப்பட்டவர் இல்லே.
மாமா ரொம்பக் குதூகலமா வரார்.
அம்மா மொகத்திலே ஒரு கர்வம். தான் இல்லாம நடக்காதாம்! இருக்கட்டுமே.
இந்த உறவு ஒண்ணுதான் டைவர்ஸ் பண்ணிக்கவும் மறுபடியும் ஏற்படுத்திக்கவும் முடியற உறவு. அப்படீன்னா இது ரொம்ப அவசியமான, ஆதாரமான உறவுன்னு ஆறது. மத்த உறவுகள் எல்லாம் ஏதோ ஏற்பட்டுடற உறவு. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டுடற உறவு. அந்த உறவுகள் எல்லாம், ஏற்பட்டுட்டதனாலே தேவையாப் போன உறவுகள். இது மட்டும்தான் தேவைக்குன்னு ஏற்படற உறவு.