More on this book
Community
Kindle Notes & Highlights
சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி, கலப்புமணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரத்தக் கலப்பின் மூலம்தான் உற்றார் உறவினர் என்ற உணர்வு ஏற்படும்.
இந்த உறவு உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி, சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை உணர்வு - ஒருவருக்கொருவர் அந்நியராக நினைப்பது - மறையாது.
சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்புமணமே. வேறு எதுவும் சாதியை கரைக்கமுடியாது.
சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிரானவை என்பதுதான் இந்த விடை.
சாதி என்பது ஒரு எண்ணம், ஒரு மனநிலை.
எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்.
சாதியைப் போற்றுகின்ற மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களைத்தான் நீங்கள் எதிர்க்கவேண்டும்.
வார்த்தைச் சாலங்கள் செய்வதில் பயனில்லை. சாஸ்திரங்களை இலக்கணப்படி வாசித்து தர்க்கரீதியான முறையில் பொருள் கொண்டால் அவற்றின் அர்த்தம் நாம் நினைப்பதுபோல இல்லை என்று விளக்கிக் கொண்டிருப்பது பயனற்றது.
சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது. அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும்.
சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேட்டுக்கும் மூலகாரணம் என்று இந்துக்களிடம் கூறவேண்டும்.
ஆனால் சாதிமுறையை உடைப்பது பிராமண சாதிக்கே ஆபத்தாக முடியும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.
சுல்தான் விரும்பினால் கூட முகமதிய உலகின் மதத்தை மாற்றி விட முடியாது. அவனால் அது முடியும் என்றாலும் கூட முகமதிய மதத்தின் தலைவர் என்ற முறையில் தமது மதத்தைக் கவிழ்த்து விடுவார் என்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல.
புரட்சிக் கருத்துக் கொண்ட ஒரு மனிதர் போப் ஆக மாட்டார், அல்லது, போப் ஆகிறவர் புரட்சிக்காரராக விரும்ப மாட்டார் என்பதே.”
பிராமணராகப் பிறந்த ஒருவர் புரட்சிக்காரராக விரும்பமாட்டார்
பிராமணர் புரட்சிக்காரராக இருப்பார் என்று எதிர்பார்ப்பது, லெஸ்லி ஸ்டீஃபன் கூறியதுபோல, நீலநிற விழிகள் உள்ள எல்லாக் குழந்தைகளையும் கொன்றுவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சட்டமியற்றும் என்று எதிர்பார்ப்பதைப் போல வீணானது.
மாபெரும் மனிதனால் உருவாக்கப்படுவதே வரலாறு என்ற தத்துவத்தை நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் அறிவுத் திறன் கொண்ட வகுப்புதான் ஆளும் வகுப்பாக இல்லையென்றாலும், மிகுந்த செல்வாக்குக் கொண்ட வகுப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
எந்த நாட்டிலும் சாதாரண மக்கள் அறிவுபூர்வமான சிந்தனையும் செயல்பாடும் கொண்ட வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல. பெரும்பாலும் அவர்கள் அறிவுத்திறன் கொண்ட வகுப்பினரைப் பார்த்து அவர்களைப்போல நடந்து கொள்வதும், அவர்களைப் பின்பற்றுவதுமே நடக்கிறது.
அறிவுத்திறன் கொண்ட வகுப்பு நேர்மையானதாக, சுயேச்சையானதாக, தன்னலமற்றதாக இருந்தால், நெருக்கடி ஏற்படும் சமயங்களில் அது முன்வந்து நாட்டுக்குச் சரியான வழியைக் காட்டும். அறிவுத்
அறிவுத் திறன் மட்டும் இருந்தால் அது சிறப்பல்ல என்பது உண்மையே.
அறிவுத்திறன் ஒரு சாதனமே. அறிவுத்திறன் கொண்ட ஒருமனிதன் என்ன குறிக்கோளை அடைய விரும்புகிறான் என்பதைப் பொறுத்தே அதை அவன் எப்படிப் பயன்படுத்துவான் என்பது அமையும். அவன் நல்லவனாக இ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அறிவுத்திறன் வகுப்பு நாட்டின் நலனைப் பாதுகாப்பதை விட இந்தச் சாதியின் நலனைப் பாதுகாப்பதே தன் பணியெனக் கருதுவது பற்றியும் நீங்கள் கவலைப்படலாம்.
இரண்டாவதாக அது இந்தச் சமுதாயங்களைச் சமூக அந்தஸ்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக தரவரிசை கொடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்தச் சமூக வரிசையில் தான் வேறு சில சாதிகளுக்கு மேலே இருப்பது குறித்துப் பெருமையும் ஆறுதலும் கொள்கிறது.
ஒரு சாதி தனக்கு மேலே உள்ள இன்னொரு சாதியுடன் சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் செய்யத் தனக்கு உரிமை உண்டு என்று கூறினால், உடனே விஷமக்காரர்கள் குறுக்கிட்டு, அப்படியானால் அந்தச் சாதி தனக்குக் கீழே உள்ள மற்றச் சாதிகள் தன்னுடன் சமபந்திபோஜனமும் கலப்புமணமும் செய்ய அனுமதிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். இப்படி விஷமம் செய்வோரில் பலர் பிராமணர்கள்.
கார்ல் மார்க்ஸ் அவர்களை நோக்கிக் கூறினார்: “உங்கள் தளைச் சங்கிலிகளைத் தவிர நீங்கள் இழப்பதற்கு வேறெதுவும் இல்லை.”
சாதி அமைப்பின் மீது போர் தொடுப்பதற்கு எல்லாச் சாதிகளையும் ஒன்று திரட்டுவது இயலாது.
ஒரு இந்து தனது பகுத்தறிவுப்படி நடக்கச் சுதந்திரம் இருக்கிறதா?
இந்த விதியின்படி, வேதங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் பொருள் காண்பதில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொள்வது கண்டிக்கப்படுகிறது.
எனவே ஒரு விஷயம் வேதத்திலும் ஸ்மிருதியிலும் சொல்லப் பட்டிருந்தால் அதைப் பற்றி இந்து பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்கக் கூடாது.
வேதமும் ஸ்மிருதியும் கொடுத்திருக்கும் கட்டளைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தாலும் அதற்குப் பகுத்தறிவின்படி தீர்வு காணக்கூடாது.
இவ்வாறு முரண்பாடு இருந்தால் இரண்டுமே சமமாக செல்லத்தக்கதாகக் கருதப்பட வேண்டும். இரண்டில் எந்த ஒன்றையும் பின்பற்றலாம். இரண்டில் எது பகுத்தறிவுக்குப...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் இடையே முரண்பாடு இருந்தால் ஸ்மிருதியே ஏற்கத்தக்கது” இங்கேயும்
எனவே ஸ்ருதிகளும் ஸ்மிருதிகளும் தெளிவான கட்டளை கொடுத்திருக்கும் எந்த விஷயத்திலும் ஒரு இந்து தனது பகுத்தறிவைப் பயன்படுத்தச் சுதந்திரம் இல்லை.
ரயில் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் ஒரு இந்துவின் வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளாகும்.
சாதியை முடிந்த அளவுக்குப் பின்பற்ற வேண்டும் என்றும், முடியாத சமயங்களில் அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் விதித்திருப்பதேயாகும்.
இந்தப் பிராயச்சித்தத் தத்துவத்தின் மூலம் சாஸ்திரங்கள் ஒரு சமரச ஏற்பாட்டுக்கு வகை செய்துவிட்டன. இது சாதி முறைக்கு ஆபத்தில்லாமல் நிரந்தரமாக நீடிக்கச்செய்கிறது.
ஸதாசாரம் என்றால் நல்ல செயல்கள் அல்லது நல்லவர்களின் செயல்கள் என்று மக்கள் அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது என்று எச்சரிப்பதற்கும், அப்படி அர்த்தம் செய்து கொண்டு நல்லவர்களின் செயல்களைப் பின்பற்றாமல் செய்வதற்கும் ஸ்மிருதிகள் இந்துக்களுக்குக் கண்டிப்பான கட்டளை கொடுத்துள்ளன.
கடவுள்களே செய்த நல்ல செய்கைகள் என்றாலும் அவை ஸ்ருதி, ஸ்மிருதி, ஸதாசாரம் ஆகியவற்றுக்கு முரண்பாடாக இருந்தால் அவற்றைப் பின்பற்றி நடக்கக்கூடாது என்று அவை தெளிவாகக் கூறுகின்றன.
சீர்திருத்தக்காரருக்குப் பகுத்தறிவும் ஒழுக்கமும் இரண்டு சக்திமிக்க ஆயுதங்களாகும்.
அவரிடமிருந்த இந்த ஆயுதங்களைப் பறித்து விடுவது அவர் செயல்படவே முடியாமல் செய்வதாகும்.
சாதிமுறை பகுத்தறிவுக்கு ஏற்றதா இல்லையா என்பதை ஆராய்வதற்கே மக்களுக்குச் சுதந்திரம் இல்லை என்றால் நீங்கள் எப்பட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பகுத்தறிவு, ஒழுக்கம் என்ற தீப்பிடிக்கும் பொருள்களை வைத்து அது கட்டப்படவில்லை. அதற்குமேல் அந்தக் கோட்டைக்குள் பிராமண சாதி என்ற ராணுவம் நிற்கிறது.
இதையெல்லாம் நீங்கள் கருதிப் பார்த்தால் இந்துக்களிடையே சாதிகளை உடைத்தெறிவது அநேகமாக முடியாத செயல் என்று நான் கூறுவதன் காரணம் விளங்கும்.
சாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடிவைத்துத் தகர்க்க வேண்டும்.
ஸ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்கவேண்டும்.
நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின்பற்றும் செயல் யந்திரத்தனமானது.
இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட வேண்டுமானால் மதம், முக்கியமாக தத்துவங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
அது விதிகள் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது. மதம் என்பது வெறும் விதிகள் மட்டும் சம்பந்தப்பட்டதாகும்போது அது மதம் என்ற நிலையை இழந்து விடுகிறது.
இந்து மதம் என்பது என்ன? அது தத்துவங்களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா?
எல்லா மக்களுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய ஆன்மிகத் தத்துவங்கள் என்ற பொருளில் கூறப்படும் மதம் இல்லை.

