More on this book
Community
Kindle Notes & Highlights
ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சித்தியர்கள் ஆகியோர் அடங்கிய கலவையே இந்திய மக்கள் ஆவர்.
அகமண வழக்கம் எவ்வாறு கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதை நிறுவுவதில் நாம் வெற்றி பெற்றால் சாதியின் பிறப்பையும் அமைப்பியக்கத்தையும் சரியாக நிரூபித்தவர்களாவோம்.
இந்தியச் சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்றிருந்த பழங்காலத்திற்குரிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதைக் காணமுடியாது என்பதையும் இந்தத் தருணத்தில் வலியுறுத்துவது முற்றிலும் ஏற்றதென்றே கருதுகின்றேன்.
அதுவும் உலகே மாயம் என்ற கருத்தும், வரலாற்றை எழுதி வைப்பது மடமை என்ற எண்ணமும் உள்ள இந்துக்கள் தொடர்புடைய வகையில் ஆய்வு மேலும் கடினமானது. வரலாறு
இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்துள்ளதால் அவர் கூறியுள்ளவை மிக முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு அவர் வாய் திறந்தால் பிறர், தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்து விட்டால் அதுவே எனக்குப் போதும்.
எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை அடக்கி ஆளத் தகுதயில்லை என்னும் மில் (Mill) அவர்களின் கோட்பாட்டினைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டாகக் கூறுகின்ற காங்கிரசார் அனைவரும் எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை அடக்கியாளத் தகுதியில்லை என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.
தண்டனை ஏற்பாடு இல்லாமல் சதுர்வர்ண லட்சியத்தை அடைய முடியாது என்பதை ராமாயணத்தில் ராமன், சம்புகனைக் கொன்ற கதை நிரூபிக்கிறது.
ராமராஜ்யம் சதுர்வர்ண முறையை அடிப்படையாகக் கொண்ட அரசு. அரசன் என்ற முறையில் ராமன் சதுர்வர்ணமுறையைக் காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறான். எனவே தனது வகுப்பிலிருந்து அத்துமீறி பிராமண வகுப்பினுள் நுழைய முயன்ற சூத்திரனான சம்புகனைக் கொல்வது அவனது கடமையாயிற்று.
இந்து சமூகம் பெண்கள் ஆசிரியைகளாகவும், பாரிஸ்டர்களாகவும் பணிபுரிவதை ஏற்கப் பழகிவிட்டது. பெண்கள் சாராயம் காய்ச்சுவோராகவும் கசாப்புக்காரர்களாகவும் பணிபுரிவதையும் கூட ஏற்கப் பழகிக் கொள்ளக் கூடும். ஆனால் பெண்கள் புரோகிதர்களாகவும் போர் வீரர்களாகவும் வருவதை இந்து சமூகம் ஏற்கும் என்று சொல்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.
இத்தனை இடர்பாடுகள் இருக்கும்போது இவற்றையெல்லாம் கடந்து சதுர்வர்ண முறைக்குப் புத்துயிர் கொடுத்து விடமுடியும் என்று நம்புகிறவன் பிறவி மூடனாகத்தான் இருக்கமுடியும், என்பது எண்ணம்.
சூத்திரர்கள் செல்வம் சேர்க்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மூன்று வர்ணங்கள் இருக்கின்றனவே என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சூத்திரர் கல்வி கற்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? ஏதேனும் எழுதப் படிக்க அவசியம் ஏற்பட்டால் பிராமணரிடம் சென்று அதைச் செய்து கொள்ள முடியுமே? சூத்திரர் ஏன் ஆயுதம் தாங்குவது பற்றிக் கவலைப்படவேண்டும்?
பிராமணர் அறிவை வளர்ப்பதிலும் ஷத்திரியர் திறமையாகப் போர் புரிவதிலும், வைசியர் பொருளாதார முயற்சியிலும் ஈடுபடத் தவறுவார்களானால் என்ன நேரும்?
மூன்று வகுப்பாரும் நியாயமான நிபந்தனைகளின் பேரில் சூத்திரரை ஆதரிக்கவில்லை. அல்லது அவர்கள் ஒன்று சேர்ந்து சூத்திரரை அடக்கி வைக்க முயலுகிறார்கள் என்றால் சூத்திரர் கதி என்ன ஆவது?
ஒரு வகுப்பும் மற்றொரு வகுப்பும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பைச் சார்ந்து இருப்பதும்கூட சிலசமயம் அனுமதிக்கப்படலாம். ஆனால் அத்தியாவசியமான தேவைகளில் ஒரு மனிதன் மற்றொருவரைச் சார்ந்து இருக்கும்படி ஏன் செய்ய வேண்டும்?
கல்வி அற்றவனாக, ஆயுதம் இல்லாதவனாக இருக்கும் ஒருவனுக்கு அண்டை வீட்டான் கற்றவனாக, ஆயுதம் தரித்தவனாக இருப்பதால் என்ன லாபம்?
உலகின் மற்றநாடுகளில் சமூகப்புரட்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை என்பதுபற்றி நான் மிகவும் சிந்தித்திருக்கிறேன். கொடுமைகள் நிறைந்த சதுர்வர்ண அமைப்பு, கீழ்வகுப்புகளைச் சேர்ந்த இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கு முற்றிலும் சக்தியற்றவர்களாகச் செய்து விட்டது என்பதுதான் இந்த கேள்விக்குக் கிடைக்கும் ஒரே விடை.
ஏரின் கொழுமுனையை வாள் முனையாக மாற்ற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஐரோப்பாவிலும் கூட பலம் உள்ளவன் பலம் இல்லாதவனை சுரண்டுவதற்கும், ஏன், கொள்ளையடிப்பதற்கும் கூடத் தயங்கியதில்லை என்பது உண்மையே. ஆனால் இந்தியாவில் இந்துக்கள் செய்தது போல, ஐரோப்பாவில் பலசாலிகள் சூழ்ச்சி வழிகள் செய்யவில்லை.
பலம் படைத்தவர்களுக்கும் பலமற்றவர்களுக்கும் இடையே சமூகப்போர்கள் இந்தியாவைவிட ஐரோப்பாவில் கடுமையாக நடந்து வந்திருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவின் பலவீன மக்கள் ராணுவ
ராணுவ சேவையில் சேர சுதந்திரம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அவர்கள் கல்வி பெற வழி இருந்தது. அது அவர்களுக்குத் தார்மீக ஆயுதம் ஆயிற்று.
மக்கள் தங்களுக்கு உதவியான நடவடிக்கை எதிலும் ஈடுபட முடியாமல் உணர்வும் செயலும் இழக்கச் செய்து முடமாக்கி வைக்கும் முறை அது.
இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரியப் பேரரசின் காலம்தான். மற்ற எல்லாக் காலங்களிலும் நாடு தோல்வியிலும் இருளிலும் தவித்தது. மௌரியர் காலத்தில்தான் சதுர்வர்ணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
பிராமணர், ஷத்திரியர் இருவரில் யார் முதலில் வணக்கம் கூறுவது, இருவரும் ஒரே தெருவில் சந்திக்கும்போது யார் முதலில் வழிவிடுவது என்பது போன்ற அற்பவிஷயங்களிலும் அவர்கள் சச்சர விட்டிருக்கிறார்கள்.
கிருஷ்ண அவதாரமே ஷத்திரியர்களை வேரறுக்கும் புனித நோக்கத்துக்காகவே எடுக்கப்பட்டது என்று பாகவதம் கூறுகிறது.
உலகில் எங்குமே மனித சமூகம் பிரிவுகள் இன்றி ஒன்றுபட்டதாக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திருடர் கும்பல்கள், கொள்ளைக் கூட்டங்கள் - அமைந்திருக்கின்றன. இந்தச் சிறிய குழுக்கள் பெரும்பாலும் உறுதியாக இணைந்து, சாதிகளைப்போலவே தனிமைப்பட்டவையாக உள்ளன. இவற்றுக்கெனத் தனியாக, குறுகியவையும் கட்டுப்பாடு மிக்கவையுமான விதிமுறைகள் உண்டு. பலசமயம் இந்த விதிமுறைகள் சமூக நலனுக்கு விரோதமாக இருக்கின்றன.
ஒரு சமூகம் லட்சிய சமூகமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு அதில் பல்வேறு குழுக்கள் இருப்பதைப் பார்க்கக்கூடாது; ஏனென்றால் குழுக்கள் எல்லாச் சமூகங்களிலும் உள்ளன. லட்சிய சமூகமா என்பதைத் தீர்மானிப்பதற்குக் கேட்க வேண்டிய கேள்விகள் - அதில் உள்ள குழுக்கள் தங்களிடையே பொதுவான நலன்கள் இருப்பதாக உணர்கின்றனவா?
அத்தகைய நலன்கள் எத்தனை அதிகமான எத்தனை அதிக விதங்களாக உள்ளன?
வேறு வகையான கூட்டு வாழ்க்கை அமைப்புகளுடன் கலந்துறவாடுவது எவ்வளவு தாராளமாக எவ்வள...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
குழுக்களையும் வகுப்புகளையும் பிரிக்கும் சக்திகள் அவற்றை இணைக்கும் சக்திகள...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
குழு வாழ்க்கைக்கு எந்த அளவு சமூக முக்கியத்துவம் அ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஒரு குழு தனிமைப்பட்டதாக இருப்பதற்கு வழக்கமும் சௌகரியமும் காரணமா? அல்ல...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இப்படிப் பார்க்கும்போது முகமதியர், சீக்கியர், கிறிஸ்தவர் ஆகிய இந்து அல்லாதவர்களிடையே உள்ள சாதிமுறை இந்துக்களின் சாதிமுறையிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டிருப்பதைக் காணலாம். முதலாவதாக, இந்துக்களிடையே ஒற்றுமை உணர்வுப் பிணைப்புகள் இல்லை; ஆனால் இந்து அல்லாதவர்களிடையே இந்தப் பிணைப்புகள் பல உள்ளன. ஒரு சமூகம் பலம் வாய்ந்ததாக இருப்பது, அதில் உள்ள பல்வேறு குழுக்களும் தொடர்பு கொள்வதற்கும் கலந்துறவாடுவதற்கும் உள்ள வாய்ப்புக்களைப் பொறுத்து இருக்கிறது.
இந்துக்களிடையே இருப்பதுபோல இந்து அல்லாதவர்களிடையிலும் சாதிகள் இருந்தாலும், இந்துக்கள் சாதிக்கு அளிக்கும் சமூக முக்கியத்துவத்தை இந்து அல்லாதார் அளிப்பதில்லை. ஒரு
ஆனால் ஒருவர் தாம் ஒரு இந்து என்று கூறினால் அந்தப் பதில் உங்களுக்குத் திருப்தியளிக்காது. அவர் என்ன சாதி என்று கேட்பீர்கள்.
அவருடைய சாதி என்ன என்று தெரியவில்லையென்றால் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டதாக நினைக்க மாட்டீர்கள்.
சீக்கியர்களிடையேயும் முகமதியர்களிடையேயும் சாதி இருந்தாலும், ஒரு சீக்கியர் அல்லது முகமதியர் சாதியை மீறி நடந்தால் உடனே அவரை சாதியிலிருந்து விலக்கி வைப்பது என்ற எண்ணமே அவர்களிடம் கிடையாது.
இந்து அல்லாதவர்களிடையே சாதி மத ரீதியான புனித ஏற்பாடாக இல்லை.
இந்து அல்லாதவர்களுக்குச் சாதி ஒரு வழக்கம் மட்டுமே. அது ஒரு புனிதமான அமைப்பு அல்ல.
அதைத் தொடங்கியவர்கள் அவர்கள் அல்ல.
ஆனால் இந்துக்களுக்கு சாதிகள் தனிமைப்பட்டும் கலந்து விடாமலும் இருக்கும்படிப் பாதுகாப்பது மதக் கோட்பாட்டின் கட்டாயமாகிறது.
எனவே இந்து அல்லாதவர்களிடையே சாதிக்கு சமூக முக்கியத்துவம் இல்லை என்பதையும், சாதி வித்தியாசங்களை மீற சமூக ஒற்றுமையை வளர்க்கும் உயிர்ப்பு இழைகள் பல இருப்பதையும் கவனிக்காமல், சாதிகள் இருக்கின்றன என்பதை மட்டும் பார்த்து இந்துக்கள் ஆறுதல் கொள்வது ஆபத்தான மாயையாகும்.
உயிருடன் இருப்பதாலேயே உயிர் வாழத் தகுதி இருக்கிறது என்ற நேர்மையற்ற வாதத்திற்கு அவரது வார்த்தைகள் ஆதாரமாகக் கொள்ளப்படும் என்று நான் அஞ்சுகிறேன்.
ஒரு சமுதாயம் வாழ்கிறதா, இறக்கிறதா என்பது இங்கு பிரச்சினை அல்ல என்பது என் கருத்து. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்.
உயிர் வாழ்வதில் பல விதங்கள் உள்ளன. அவை எல்லாமே ஒரே மாதி...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்துக்கள் அழிந்து போகாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மட்டும் வைத்து ஒரு இந்து பெருமை பாராட்டுவது பயனற்றது.
வாழ்ந்து வந்துள்ள வாழ்க்கையின் தரம் எப்படிப் பட்டது என்பதை அவர் எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி எண்ணிப்பார்த்தால் பெருமைப்படுவதற்கு நிச்சயமாக இடம்இல்லை.

