More on this book
Community
Kindle Notes & Highlights
நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத் தன்மைக்கும், நியாயத்திற்கும், பகுத்தறிவிற்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்படவேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல எனவும், மனிதத் தன்மையும், நாகரிகமுமுடையதான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்படவேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் வேண்டுமானால், முக்கியமாகவும் அவசரமாகவும்
...more
மேலும், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல், இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும், ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் தாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லுவதோ மற்றும் இந்தியாவிற்கு அந்நியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ ஆகிய காரியங்கள் முடியாதென்றும், முடியுமென்று யாராவது சொல்வதானால், சுயநலச் சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம்.
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தா ரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்யமென்றும்கூடக் கருதாமல் நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்திரமளிக்காமல், மனிதர்கள் என்றுகூடக் கருதாமல் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, இழிவுப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலையையோ நம்மிடம் ஒப்புவிப்பதென்றால், கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகளை ஒப்புவித்ததாகுமே தவிர, வேறல்ல என்று கருதுவதால்தானே ஒழிய வேறல்ல. இந்தத் தத்துவமறியாத, சில தீண்டப்படாதவரென்ற தாழ்த்தப்பட்ட மக்களும், சுதந்திரம் அளிக்கப்படாதவர்கள் என்ற அடிமைப்படுத்தப்பட்ட பெண்களும் தங்களுக்கு
...more
தீண்டாமை என்னும் விஷயத்தில் இருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ அலட்சியமாகக் கருதவோ ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கு என்ன அவசரம்’ என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடந்தருவதில்லை.
இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின்கீழ் அனுபவிக்கும் மனுதர்மக் கொடுமைகள் என்பவைகள்
இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்துக் கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதால் இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை ஏற்படுவது கஷ்டமாக இருக்கும் என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.
விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற
இந்திய சுதேச சமஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மைசூர், பரோடா, காஷ்மீர், திருவனந்தபுரம் முதலிய சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்திய ராஜ்யத்தைவிட, பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள சீர்திருத்தக்காரர்களைவிட இந்தக் கொடுமைகளை ஒழிக்க ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றுமாக முன்வந்திருக்கின்றது என்பதாகும். காஷ்மீர் சமஸ்தானத்தில் எந்த விஷயத்திலும் தீண்டாமையைப் பாவிக்கக் கூடாதென்றும், தீண்டப்படாதார் என்னும் வகுப்பாருக்கு மற்றவர்களைப்போல் சகல உரிமைகளும் அளிக்கப்பட்டிருப்பதோடு, கல்வி விஷயத்தில் அவர்களுக்குச் சாப்பாடு போட்டும் இலவசமாய்க் கற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் தீர்மானமாயிருக்கும் விஷயம் முன்பே தெரிவித்திருக்கிறோம்.
...more

